Published:Updated:

மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

Published:Updated:
மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!
மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

`ஒவ்வோர் ஆண்டும் மலேரியா நோயைத் தடுக்க, தடுப்பு மருந்து வழங்க, நோய் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க... என இந்தியா செலவிடும் தொகை 11,640 கோடி ரூபாய்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம். ஒவ்வோர் ஆண்டும் 6.6 லட்சம் பேரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருப்பதும் மலேரியாதான். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டு மக்கள்தொகை 33 கோடி. இதில் ஒவ்வோர் ஆண்டும் ஏழரைக் கோடி பேருக்கு மலேரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும், எட்டு லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் தேசிய புள்ளிவிவரம் கூறுகிறது. உலக மலேரியா ஆய்வறிக்கை 2014-ம் ஆண்டின்படி, இந்திய மக்கள்தொகையில் 22 சதவிகிதம் பேர் மிக அதிக அளவில் மலேரியா பாதிப்புக்கு ஆளாகும் பகுதிகளில் வசிக்கிறார்கள்; வெறும் 11 சதவிகிதம் பேர்தான் மலேரியா தொற்று பாதிப்பு இல்லாத பகுதிகளில் வசிக்கிறார்கள்.

மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிகவும் பின்தங்கிய, வறுமையில் வாடும் மக்கள் வசிக்கும் பகுதியில்தான் மலேரியாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் மலேரியாவால் உயிரிழப்பு இல்லை என்றாலும், ஒவ்வோர் ஆண்டும் மலேரியா காய்ச்சல் தொற்று பாதிப்பு இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், 354 பேருக்கு மலேரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தேசியப் பூச்சிகள் மூலம் பரவும் நோய் தடுப்புத் திட்ட இயக்குநரக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மலேரியா என்பது கொசுக்கள் மூலம் பரவும் ஓர் ஒட்டுண்ணி. இதற்கு `பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்’ என்று பெயர். இந்த ஒட்டுண்ணியைப் பரப்பும் கொசுவுக்கு `அனோபிலஸ்’ என்று பெயர்.

அறிகுறிகள்

மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

தொற்றுள்ள கொசு கடித்த, 10-15 நாளில் நோய் வெளிப்படும். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக உள்ளவர்களுக்கு ஏழு நாட்களில்கூட வெளிப்படலாம்.

மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாக வெளிப்படும். முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர்காய்ச்சல் ஏற்படும். உடல் நடுக்கம் எடுக்கும். இது சுமார் அரை மணி நேரம் நீடிக்கும்.

இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் ஆறு மணி நேரம் நீடிக்கும்.

மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து வியர்வை கொட்டும். உடல் ஐஸ்போல குளிர்ந்துவிடும். இப்போது, நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார். பிறகு, இதே காய்ச்சல் மறுநாளோ, ஒரு நாள்விட்டு ஒரு நாளோ அல்லது மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு முறையோ மீண்டும் வரும்.

இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

பரிசோதனை

எளிய ரத்தப் பரிசோதனை மூலம் மலேரியா காய்ச்சலைக் கண்டறியலாம். மேலும், ஏதேனும் ஒட்டுண்ணி, மருந்துக்கு எதிராகச் செயல்படும் தன்மையைப் பெற்றுள்ளதா, ஏதேனும் உள் உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பதை இதன் மூலம் கண்டறியலாம்.

மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

சிகிச்சை 

பரிசோதனை முடிவின் அடிப்படையில், வயது, அறிகுறிகள் உள்ளிட்டவற்றைப் பொருத்து சிகிச்சை அளிக்கப்படும். ஒட்டுண்ணியின் தன்மையைப் பொறுத்து மருந்துகள் வேறுபடும். டாக்டர் பரிந்துரைத்த மாத்திரையை, பரிந்துரைத்த கால அளவுக்கு கட்டாயம் எடுக்க வேண்டும். நோய் சரியாகிவிட்டது என்று மாத்திரையைத் தவிர்த்தால், இன்னும் அதிக வீரியத்துடன் ஒட்டுண்ணி மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.

- பா.பிரவீன் குமார்

பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் வாழ்க்கை சுழற்சி

மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

1 ஒட்டுண்ணி தொற்று உள்ள கொசு, மனிதனைக் கடிக்கிறது.

2 ரத்தத்தில் கலந்த ஒட்டுண்ணி, மிக வேகமாகப் பயணத்தைத் தொடங்கி, 30 நிமிடங்களுக்குள் கல்லீரலை அடைகிறது.

3 கல்லீரலை அடைந்த ஒட்டுண்ணி, மிக வேகமாக இனப்பெருக்கம் செய்கிறது. இவற்றில் சில கல்லீரலில் செயல்படாமல் தங்கிவிடுகின்றன. எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இது செயல்திறன் பெற்று, பாதிப்பை ஏற்படுத்தலாம்.

4 இனப்பெருக்கம் அடைந்த ஒட்டுண்ணி ரத்தத்தில் கலக்கிறது. அங்கு ரத்த சிவப்பு அணுக்களைத் தாக்கி, மேலும் அதிக அளவில் பெருக்கம் அடைகிறது.

5 சிவப்பணுவில் இனப்பெருக்கம் அடைந்ததும் அந்த ரத்த சிவப்பு அணுவை வெடித்து வெளியேறி, மற்ற சிவப்பணுக்களில் தொற்றை ஏற்படுத்துகிறது.

6 இப்படி, தொடர்ச்சியாக இனப்பெருக்கம் அடையும்போது, உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. காய்ச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிக காய்ச்சல் மற்றும் குளிர்காய்ச்சல் ஏற்படுகிறது.

7 தொற்று ஏற்பட்டவரின் உடலில் நன்கு வளர்ச்சியடைந்ததும், மற்றவர் மீது பரவுவதற்கான வாய்ப்புக்குக் காத்திருக்கிறது. பாதிக்கப்பட்டவரை அனோபிலஸ் கொசு கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது, இந்த ஒட்டுண்ணி கொசுவின் கூர் ஊசியில் தங்கி, மற்றொருவருக்குப் பரவுகிறது.

தடுக்க...

மலேரியாவுக்கு முடிவுகட்டுவோம்!

கொசு ஒழிப்பு மட்டுமே மலேரியா காய்ச்சலைக் குறைக்க ஒரே வழி. கொசுக்களை ஒழிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களின் அபாயம் பெருமளவு குறைக்கப்படும்.

கொசு உற்பத்தியைத் தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது போன்றவற்றைச் செய்யலாம். வீட்டில், கொசுக்கள் அடைவதைத் தடுக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் கொசுக்களை விரட்டலாம்.

இரவில் கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் மலேரியா பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் , கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும்.

சுத்தமான தண்ணீரில் மலேரியா கொசுக்கள் உற்பத்தி ஆவதால், வீட்டின் மேல்நிலைத் தொட்டிகளையும் கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடிவைக்க வேண்டும்.

வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காயவைப்பதன் மூலமும் கொசு உற்பத்தியைத் தடுக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism