Published:Updated:

டீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி?

டீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி?

டீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி?

டீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி?

டீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி?

Published:Updated:
டீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி?
டீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி?

ரிட்சை பயம், பெற்றோர், ஆசிரியர்களின் நம்பிக்கையை எப்படிப் பூர்த்திசெய்வது என்ற பயம் எனப் பள்ளி, கல்லூரி செல்லும் டீன் ஏஜினர் மத்தியில் தற்போது மனஅழுத்தம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, எதிலும் கவனம் செலுத்த இயலாமை, தூக்கம் எனப் பல பிரச்னைகள் எழுகின்றன. எங்கோ, ஒன்றிரண்டு பேருக்கு அல்ல... அதிகப்படியானவர்கள் இந்த மனஅழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக, ஸ்ட்ரெஸ் ஒருவரின் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல உந்துகோலாகவும் இருக்கிறது. அதே சமயம் அவர்கள் வாழ்க்கையில் விரக்தி அடைந்து மீண்டு எழ முடியாதவாறு துவண்டுபோகவும் செய்கிறது. நேர்மறை எண்ணம் உள்ளவர்கள் மனஅழுத்தத்தை சவாலாக எடுத்துக்கொண்டு தனக்கு வரக்கூடியப் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள் அதையே நினைத்து நினைத்து வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொள்கிறார்கள். இது குழந்தைகள் பிரச்னை... பெற்றோர் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்கியிருக்க முடியாது. பெற்றோர் இணைந்து செயல்படுவதன் மூலமே குழந்தையின் மனஅழுத்தத்தைப் போக்க முடியும்.

டீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காரணங்கள்

படிப்பால் ஏற்படும் மனஅழுத்தம்


பெரும்பாலான இளவயதினரின் மனஅழுத்தத்துக்கு அவர்களின் படிப்பே காரணமாக இருக்கிறது. 10, 12-ம் வகுப்புகளில் அவர்களின் நாள் காலை 4 மணியில் இருந்தே தொடங்கிவிடுகிறது. 6 மணிக்கு கணக்கு டியூஷன், 7 மணிக்கு கெமிஸ்ட்ரி டியூஷன் முடித்துப் பள்ளிக்குச் சென்றால்... இரவு வரை வகுப்புகள், செயல்முறை வகுப்புகள், தேர்வுகள்... அவற்றை முடித்து வீட்டுக்கு வந்தால், ரெக்கார்டு ரைட்டிங், மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் எனத் தொடர்ந்து அவர்களின் தினசரி நாட்கள் மனஅழுத்தத்திலேயே கழிகிறது. இதில், நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று, விளையாட்டு உட்பட பொழுதுபோக்குகளுக்குத் தடை வேறு.

‘நான் 1000 மதிப்பெண் எடுத்தேன், என் மகன் நீ, கண்டிப்பாக என்னைவிட அதிகமாகத்தான் எடுக்க வேண்டும். அதுதான் எனக்குப் பெருமை’ என்றும், ‘பக்கத்து வீட்டு ப்ரியாவைவிட நீ நிறைய மதிப்பெண் எடுத்தால்தான் எனக்கு கெளரவம்’ என்றும் சொல்லும்போது, அது மனஅழுத்தத்தை அதிகரித்துவிடுகிறது.

நன்றாகப் படிக்கக்கூடியவர்கள் என்றால், அதை பாசிட்டிவாக எடுத்துக்கொள்வார்கள். படிப்பில் பின்தங்கியவர்கள் என்றால் அவர்களைப் பெரிய அழுத்தத்துக்கு ஆளாக்கும். அவர்களால் முடிந்தவரை படிக்கட்டும் எனப் பெற்றோர்கள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

சமூக மனஅழுத்தம் ஐந்து வயதில் இருந்தே சமூகத்தோடு தொடர்பில் இருக்கும் சூழ்நிலை உருவாகிறது. குடும்பம், சொந்தங்கள், நண்பர்கள் என அனைவரின் குணம் பற்றி தெரிய பல சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. சிலரின் உண்மையான நோக்கம், புத்தி போன்றவற்றை மனம் ஏற்க முடியாமல் தவிக்கும். உறவுகளில் ஏற்படும் விரிசல், நட்பில் பிரிவு, பெற்றோரிடம் சண்டை போன்றவற்றைக் கடக்க முடியாமல் தடுமாறும் பருவம் இது. சமூகத்தில் பல ஜீரணிக்க முடியாத விஷயங்கள் நடக்கும். அதனைச் சகித்துக்கொள்வதற்கு மனம் பக்குவப்படாமல் இருக்கும்போது மனஅழுத்தம் ஏற்படும். பல வருடங்களாக ஒரே வீட்டில் இருந்துவிட்டு புதிதாக வேறு வீடு மாறும்போதும், நண்பர்களை விட்டு புதிதாக வேறு பள்ளிக்குச் செல்லும்போதும் புதிய சூழல் ஏதோ இழந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இந்த எண்ணம் யாரோடும் சீக்கிரத்தில் சேரவிடாமல் தனித்தே இருக்கச்செய்யும்.

டீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி?

குறைந்த சுய மதிப்பீடு

சக மாணவனைவிட உயரம் குறைவாக இருக்கிறோம், நண்பனைவிட கறுப்பாக இருக்கிறேன், அவன் நன்றாகப் படிக்கிறான், என்னால் படிக்க முடியவில்லை, அவளை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால், என்னிடம் யாரும் பேசுவதுகூட இல்லை என்பதைப்  போன்ற தாழ்வு மனப்பான்மையும் மனஅழுத்தத்துக்குக் காரணம்.

குடும்பப் பிரச்னைகள்


அடிக்கடி குடும்பத்தில் பெற்றோர்களிடையே சண்டை, வாக்குவாதம், உடன்பிறப்புகளோடு சண்டை, பெற்றோர்கள் காட்டும் பேதம், முக்கியத்துவம் போன்றவையும் மனஉளைச்சலுக்குக் காரணமாகும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்காமல், வேலையில் மூழ்கி இருத்தல், அவர்கள் மேல் அக்கறையும், கவனமும் செலுத்தாமல் இருப்பது, அவர்களின் எண்ணங்களைப் பொறுமையாகக் கேட்காமல் கோபப்படுவது, வெறுப்பைக் காட்டுவது என இருந்தால், குழந்தைகளுக்கு நிறைய எதிர்மறை எண்ணங்கள் வருவதோடு, மனஅழுத்தமும் ஏற்படும்.

டீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி?

காதல் மற்றும் உறவுகள்

பருவம் அடைந்த பிறகு இருபாலருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஏற்படும் ஈர்ப்பு, காதலாக மாறும். இந்த வயதில் அனைவரும் எதிர்பார்ப்பது தங்கள் மீது ஒரு கவனம். சரியாக முடிவு எடுக்கத் தெரியாத இந்த வயதில் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தடுமாற்றம் இருக்கும். அந்த உறவுகளை எப்படிக் கையாள்வது எனப் புரியாமல் மனதில் எப்போதும் எதையாவது நினைத்து வருந்திக்கொண்டே இருப்பார்கள். இந்த வயதில்தான் காதல் தோல்வி என்று தவறான முடிவுகளை எடுத்து வாழ்க்கையையே கெடுத்துக்கொள்வார்கள். காதல் தோல்வியில் மனம் உடைந்து எப்போதும் மனஅழுத்தத்திலேயே இருப்பார்கள்.

அதிர்ச்சிகரமான நிகழ்வுகள்

எதிர்பாராத விபத்தில் உறவினரோ, நண்பரோ பாதிக்கப்படுவதைக் காண்பது அல்லது கேட்பது. நெருங்கிய உறவின் மரணம் போன்றவையும் அவர்களுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சியாக இருக்கும். அதில் இருந்து மீண்டுவர முடியாமல், அதையே நினைத்துக்கொண்டு மனஅழுத்தத்திலேயே இருப்பார்கள். எனவே, சரியான ஆலோசனையும் அரவணைப்பும் அவசியம்.

டீன் ஸ்ட்ரெஸ் - தவிர்ப்பது எப்படி?

மனஅழுத்த மேலாண்மை

பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். தங்கள் வேலைகளைத் தாண்டி அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் எண்ணங்கள், வாழ்க்கையைக் குறித்த லட்சியங்கள், அவர்களின் பிரச்னைகள், உடலில் ஏற்படும் தொந்தரவுகள் குறித்துப் பொறுமையாகக் கேட்டு ஆலோசனை கூற வேண்டும்.

“உன்னிடம் திறமை உள்ளது; உன்னால் முடியும், நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்” என்று அவர்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைப் பேச வேண்டும்.

அன்பாக, நட்பாகப் பழக வேண்டும். கோபப்படாமல், திட்டாமல், அடிக்காமல் ஆறுதலாகப் பேசும்போது எதையும் மறைக்காமல் சொல்லும் எண்ணம் வரும். மறைக்காமல் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லும்போது பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஒழுங்கற்ற உணவுப் பழக்கம்கூட உடலிலும் மனதிலும் சோர்வை ஏற்படுத்தும் என்பதால், சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவதாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதாலும், உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தைகள் முன்னிலையில் மது, புகை போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

எப்போதும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்தவர்களிடம் பழக வேண்டும். அவர்களிடம் பேசும்போது தாழ்வுமனப்பான்மையோ, எதிர்மறை எண்ணமோ வராமல் இருக்கும்.

மனஅமைதியைத் தரக்கூடிய பொழுதுபோக்குகளான ஓவியம் வரைவது, புத்தகம் படிப்பது, நல்ல இசை கேட்பது போன்றவற்றுக்குத் தடைபோடக் கூடாது.

தியானம், ஆசுவாசப்படுத்தும் நுட்பங்கள் போன்றவற்றைப் பயிற்சிசெய்வதால் மனம் அமைதி பெறும். கோபம் குறையும்.

செய்யும் அனைத்து வேலைகளிலும் நாம் சரியாகச் செய்திருக்கிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். தன்னைத் தானே குறைத்து மதிப்பிடக் கூடாது. ‘நம்மால் செய்ய முடியாது, எனக்கு வராது’ என்பதைப் போன்ற எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும்.

அவசியம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். நன்றாகத் தூங்கி எழுந்தாலே உடலும் மனமும் நன்கு செயல்படும்.

எப்போதும் நம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சி தரக்கூடிய செயல்களைச் செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யக் கட்டாயப்படுத்தக் கூடாது. பிடித்தவற்றைச் செய்யக் கூடாது என்று தடை விதிக்காமல், உற்சாகம் கொடுக்க வேண்டும். இவ்வாறான விஷயங்களைப் பின்பற்றும்போது தானாகவே மனஅழுத்தம் குறைந்துவிடும். 

- பி.கமலா

டீன் ஸ்ட்ரெஸ் அறிகுறிகள்

உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள்


எப்போதும் கவலையாக, நம்பிக்கையற்ற நிலையிலேயே இருப்பார்கள். வருத்தம் மிகுதியாக இருக்கும். மந்தமாகவோ விபரீதமாகவோ நடந்துகொள்வார்கள். வழக்கத்துக்கு மாறாகக் கோபப்படுதல், எதுவும் சரியாக நடப்பது இல்லை என்ற எண்ணம், நாம் எதற்கும் தகுதி இல்லை என்ற தாழ்வுமனப்பான்மை மேலோங்கி இருக்கும். இவ்வாறு, உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்படையாக இருக்கும்.

நடத்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்

பதற்றம் அதிகமாக இருக்கும். படபடப்போடு இருப்பார்கள். நட்பு வட்டத்தில் இருந்தும், கூட்டு நடவடிக்கைகளில் இருந்தும் விலகி இருப்பார்கள். போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரிக்கும். அளவுக்கு அதிகமாக உறங்குவது, அழுவது, பள்ளி, கல்லூரி செல்ல மறுப்பது, குறைவாகச் சாப்பிடுவது, உடம்பில் சத்து இல்லாதது போல் உணர்வது, எப்போதும் உணர்ச்சி நிலையில் ஏற்ற இறக்கத்தோடு இருப்பது, பெற்றோர்களை மதிக்காமல் நடந்துகொள்வது, தன் தோற்றத்தின் மீது அக்கறை இல்லாமல் இருப்பது, எல்லா நேரமும் ஏதோ சிந்தனையில் இருப்பது போன்ற நடவடிக்கைகள் காணப்படும்.

எண்ணங்களில் மாற்றம்

எதையும் நினைவில் வைக்க முடியாமல் சிரமப்படுவர்.  சரியான, முக்கிய முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம், எதைப் பற்றியாவது யோசனை அல்லது பேச்சுக்களில் மூழ்கிப்போதல், கவனச்சிதறல், பகுத்தறியும் ஆற்றல் குறைந்து, தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது, திட்டமிடுதலில் பிரச்னை போன்றவை தோன்றும்.

உடல் மாற்றங்கள்

பசியின்மை அல்லது அதீதப் பசி, உடல் நிலை சரி இல்லாமல் இருப்பது, உடல் எடை திடீரென அதிகரித்தல் அல்லது குறைதல், மயக்கம், சுவாசப் பிரச்னை, அச்சவுணர்வு, அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுதல், அடிக்கடி சளிப் பிடித்தல், மாதவிடாயில் மாற்றம் உடலியல் மாற்றங்கள் ஏற்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism