கண்களில் சர்க்கரை ஏற்படுத்தும் பாதிப்பை, சென்ற இதழில் பார்த்தோம். அப்படியே பயணித்து, இதயத்துக்கு வருவோம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, இதயத்தில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். சர்க்கரை நோய் இல்லாதவரைக் காட்டிலும், சர்க்கரை நோய் உள்ளவருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு. அதிலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு அறிகுறிகள்கூட தெரியாமல் போய்விடலாம். இதனால், உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

இதயம், ஒவ்வொரு நிமிடமும் தோராயமாக ஐந்து லிட்டர் அளவுக்கு ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் துடிப்பதன் மூலம் உடல் முழுவதும் ரத்தம் கொண்டுசெல்லப்படுகிறது. ரத்தம் மூலமாகத்தான் முழு உடலுக்கும் தேவையான ஆக்சிஜன், ஊட்டச்சத்து கிடைக்கின்றன. இப்படி, ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தத்தைக் கொண்டுசெல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது சர்க்கரை அளவு அதிகரிப்பு.

சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாமல் இருக்கும்போது, மாரடைப்பு எனப்படும் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய் (Coronary Artery Disease CAD), மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் பாதிப்பால் ஏற்படும் பக்கவாதம் (Cerebro Vascular Diesease CVD), தமனி ரத்தக் குழாய் நோய்கள் (Peripheral Arterial Disease) ஏற்படலாம்.

இதய ரத்தக் குழாய் நோய்கள்

உடலில் உள்ள ஒவ்வொரு திசுவுக்கும் எப்படி ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து தேவையோ, அதுபோலத்தான், நம் இதயத் தசைகள் ஆரோக்கியமாக இயங்கப் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து தேவை. இதை, கரோனரி ரத்தக் குழாய்கள் கொண்டுபோய் சேர்க்கின்றன. இந்த ரத்தக் குழாயில் கொழுப்புப் படிந்து அடைப்பு ஏற்படும்போது அல்லது குறுகலாகும்போது போதுமான அளவு ரத்தம் இதயத் தசைக்குக் கிடைக்காமல் போகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இது இதய நோய்... இதற்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகரிக்கும்போது, ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இப்படிப் படியும் கொழுப்புதான் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. மேலும், சர்க்கரை அளவு அதிகரிப்பானது, ரத்தக் குழாயின் வளைந்துகொடுக்கும் தன்மையைப் பாதிக்கிறது. இதனால், பெருந்தமனித் தடிப்பு நோய் (Atherosclerosis) வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

பக்கவாதம்

மூளைக்கு ரத்தம் தடைப்படும்போது ஏற்படுவது பக்கவாதம். ரத்தம் தடைப்படும்போது, மூளை செல்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தடைப்படுகின்றன. இதனால், மூளை செல்கள் உயிர் இழக்கின்றன. பெரும்பாலும், மூளை ரத்தக் குழாயில் கொழுப்பு அல்லது ரத்தம் கட்டுவதே பக்கவாதம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. இதற்கு சர்க்கரை ஒரு காரணமாக இருக்கிறது. மூளையில் ரத்தக் கசிவு காரணமாகவும் பக்கவாதம் ஏற்படலாம். மூளை ரத்தக் குழாய்களின் சுவர் பாதிக்கப்பட்டிருக்கும்போது, உயர் ரத்த அழுத்தம் காரணமாக ரத்தக் குழாய் விரிசல் அடைந்து ரத்தக் கசிவு ஏற்படலாம்.

தமனி ரத்தக் குழாய் நோய்

சர்க்கரை நோயாளிகளுக்குக் காணப்படும் மற்றொரு முக்கியமான பிரச்னை இது. இவர்களுக்கு காலில் உள்ள ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதன் மூலம் அடைப்பு அல்லது குறுகலாகிவிடும். இதனால், கால், பாதத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்துவிடும். மோசமான ரத்த ஓட்டம் காரணமாக, ஒரு கட்டத்தில் காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணி என்ன?

இதய நோய்கள் ஏற்பட முக்கியக் காரணிகளுள் ஒன்று சர்க்கரை நோய். இதனுடன், வேறு சில பிரச்னைகள் சேரும்போது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகரிக்கிறது.

உடல் பருமன்

சென்ட்ரல் உடல் பருமன் எனப்படும் இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிவது இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆண்களுக்கு இடுப்புச் சுற்றளவு 90 செ.மீ மேலும், பெண்களுக்கு 80 செ.மீ-க்கு மேலும் இருந்தால், அதை சென்ட்ரல் ஒபிசிட்டி என்கிறோம். இவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால், ரத்தக் குழாய் சுவர்கள் குறுகல் அடைந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.

அதிகக் கொழுப்பு

ரத்தத்தில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாயில் படிக்கிறது. இதேபோல டிரைகிளிசரைடு என்கிற மற்றொரு வகை கொழுப்பும் நல்லது அல்ல. இதுவும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஹெச்.டி.எல் எனும் நல்ல கொழுப்பு ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படும்போது, இதயம் இன்னும் அதிக வேலைசெய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது இதயத்துக்குக் கூடுதல் சுமையையும், ரத்தக் குழாய்களில் சேதத்தையும் ஏற்படுத்தும். இதனால், இதய நோய்கள், பக்கவாதம், கண் பிரச்னை மற்றும் சிறுநீரகப் பிரச்னையும் ஏற்படலாம்.

சிகரெட்

புகைப்பழக்கம் மாரடைப்புக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்கும். சர்க்கரைநோயும், புகையும் ரத்தக் குழாயை குறுகலடையச் செய்யும் என்பதால், அந்தப் பழக்கத்தை நிறுத்துவது மிகவும் அவசியம்.

உடல் உழைப்புக் குறைவு

எந்த உடல் உழைப்பும் அற்ற வாழ்க்கை முறை என்பது சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் விளைவுகளுக்குச் சமமானது. உடல் உழைப்பற்ற, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறையானது இதய நோய்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே, தினசரி குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், சர்க்கரை அளவும் கட்டுப்படும், கொழுப்புப் படிவதும் தடுக்கப்படும்.

- தொடரும்

ஸ்வீட்டர்: எச்.பி.ஏ1சி அளவு கட்டுக்குள் இருப்பதன் மூலம் இதய நோய்க்கான வாய்ப்பை 70 சதவிகிதம் வரை குறைக்கலாம்.

டயாபடீஸ் டவுட்

“என் அப்பாவுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோய் உள்ளது. அவருக்கு சர்க்கரை நோய் காரணமாக இதய பாதிப்புகள் வராமல் தடுக்க ஏதேனும் வழி உள்ளதா?”

“நிச்சயமாகத் தடுக்க முடியும். இதற்கு, நான் சில இதழ்களுக்கு முன் ஏ, பி, சி பற்றி சொல்லி இருந்தேன். அதாவது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏ1சி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்தத்தில் கொழுப்பு அளவு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்தபடி குறிப்பிட்ட கால இடைவெளியில் ஈ.சி.ஜி, எக்கோ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். புகைப் பழக்கம் இருந்தால் நிறுத்த வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் எடுக்க வேண்டும். இவற்றைச் செய்தால், கண்டிப்பாக சர்க்கரை நோய் காரணமாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக வாழலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கான அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் போதிய சிகிச்சை வசதி உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம், மூளை மற்றும் இதயத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.”