Published:Updated:

புகையிலை இல்லா மாநிலம் வேண்டும்!

புகையிலை இல்லா மாநிலம் வேண்டும்!

உலக புகையிலை எதிர்ப்பு தினம் - மே 31

புகையிலை இல்லா மாநிலம் வேண்டும்!

உலக புகையிலை எதிர்ப்பு தினம் - மே 31

Published:Updated:
புகையிலை இல்லா மாநிலம் வேண்டும்!
புகையிலை இல்லா மாநிலம் வேண்டும்!

புகையிலை பழக்கத்தை நிறுத்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள், பொது இடங்களில் சிகரெட் பிடிக்கத் தடைச் சட்டம், புகையிலைப் பொருட்கள் பாக்கெட்டில் எச்சரிக்கை வாசகம், படங்கள் எனத் தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கை காரணமாக ஓரளவுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மே 31-ம் தேதி ‘உலகப் புகையிலை எதிர்ப்பு நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் மையக் கருத்து, ‘வெறும் பேக்கேஜிங்குக்குத் தயாராகுதல்’ (Get ready for plain packaging) என்பதாகும். அதாவது, புகையிலை பாக்கெட்டில், நிறுவனத்தின் லோகோ, விளம்பர வாக்கியங்கள், படங்களைத் தவிர்க்க வேண்டும். பிராண்ட் பெயர் மற்றும் அந்தத் தயாரிப்பின் பெயரைச் சிறியதாக ஒரே மாதிரியான அளவில் வெளியிட வேண்டும். அதேநேரத்தில், அபாயம், எச்சரிக்கை படம் போன்ற விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் விஷயங்களைப் பெரியதாக மாற்ற வேண்டும்’ என்பதாகும்.

இதுபோன்ற, விழிப்புஉணர்வுக்கு முக்கியத்துவம் தரும், பிராண்ட் பெயருக்கு முக்கியத்துவம் அற்ற வெறுமையான புகையிலை பாக்கெட்டை முதன்முதலில் 2012-ம் ஆண்டில், ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்தியது. நம் நாட்டில், விழிப்புஉணர்வு படம் வெளியிட்டாலும், அவை பெயர் அளவில்தான் உள்ளன.

புகையிலை இல்லா மாநிலம் வேண்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் இந்த ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த சட்டங்களை இயற்றி உள்ளன.

இவர்களைப் பின்பற்றி, ஒவ்வொரு நாடும் வெறுமையான புகையிலை பாக்கெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ‘உலக சுகாதார நிறுவனம்’ வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் புகையிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது.

புகையிலை நிறுவனங்கள், நிரந்தரமான வாடிக்கையாளர்களை உருவாக்குவதே தங்கள் இலக்கு என மிக நுட்பமாக விளம்பரங்கள், பரப்புரைகள், போட்டி நிகழ்வுகள் மூலம் குழந்தைகளைக் குறிவைக்கின்றனர். இத்தகைய நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளைத் தவிர்ப்பது அவசியம். இதை, பெற்றோர் கவனத்தில்கொள்ள வேண்டும்.

புகையிலை பாக்கெட்களில், பாதிப்புகளைப் படங்களாக அச்சிட்டு வெளியிடுவதால், புதிதாகப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை உணர்வு வரும். படிக்கத் தெரியாதவர்கள், குழந்தைகள் இந்தப் படங்களைப் பார்த்து அதன் தீமைகளை அறிந்துகொள்ள முடியும். இதனால், குழந்தைகள் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் 13 வயதுக்கு முன்னரே, பள்ளி மாணவர்கள் புகையிலையைச் சுவைக்கக் கற்றுக்கொள்கின்றனர். மெல்லும் வகைப் புகையிலை பொருட்கள், பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள கடைகளில் அதிகமாகக் கிடைக்கின்றன. புகையிலை நிறுவனங்கள் பள்ளிக் குழந்தைகளை மையமிட்டே மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை அறிமுகப்படுத்துகின்றன.

புகையிலை குறித்த விழிப்புஉணர்வைப் பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும்.

பெரியவர்களோ குழந்தைகளோ புகையிலை தொடர்பான பழக்கத்தில் ஈடுபட்டால், அவர்கள் அதிலிருந்து வெளிவருவதற்கான சூழலை குடும்பத்தினர் ஏற்படுத்தித் தர வேண்டும்.

‘புகையிலையை நிறுத்த வேண்டும்’ என முடிவெடுத்துவிட்டால்,  ஒன்று, இரண்டாக நிறுத்துகிறேன் என்பது எல்லாம் சரிபட்டுவராது. ஒரே அடியாக அன்றைக்கே நிறுத்திவிட வேண்டும் என்ற மன உறுதியே புகையிலைப் பழக்கத்தில் இருந்து வெளிவர உதவும்.

புகையிலையை ஒருவர் நிறுத்திவிட்டால் மீண்டும் அந்தக் கடை அருகே நிற்பது, புகையிலைப் பயன்படுத்துவோரிடம் நட்புகொள்வது கூடாது.

புகையிலை இல்லா மாநிலம் வேண்டும்!

புகையிலைப் பழக்கத்தை நிறுத்த...

நிக்கோடின் பாட்சஸ், சிவிங்கம், இன்ஹேலர் ஸ்ப்ரே, மாத்திரைகள் போன்ற மருத்துவமுறைகள் வந்துவிட்டதால், குடும்பத்தினர் மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெற வேண்டும். நெஞ்சக நோய் மருத்துவர், பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பிக்க வேண்டும்.

எப்போது எல்லாம் புகையிலை பயன்படுத்த வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறதோ, அப்போது எல்லாம் அதற்கு மாற்றாக  சிவிங்கம், பாட்சஸ் பயன்படுத்தலாம். இதைச் சுவைப்பதால், இதில் இருக்கும் மிகச்சிறிய அளவு நிக்கோடின், புகைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தடுக்கும்.

 அதே நேரத்தில், புகைப்பதால் உருவாகும் ஆயிரக்கணக்கான நச்சுக்கள் தவிர்க்கப்படும். இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட் புகைப்பதில் இருந்து வெளியேற வேண்டும்.

இந்த நிக்கோடின் பொருட்கள், புகையிலைப் பழக்கத்தை விடவே முடியாது என்று அடம்பிடிப்பவர்களுக்கு ஒரு தற்காலிக மாற்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சிகரெட்டை நிறுத்திவிட்டு, இந்த நிக்கோடின் பொருட்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது.

- ப்ரீத்தி

படம்: கா.முரளி, மாடல்: தேவேந்திரன்

புகை டேட்டா

புகையிலை இல்லா மாநிலம் வேண்டும்!

60,00,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் புகையிலைப் பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். இந்த அளவுக்கு வேறு எந்த பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களும் மனிதர்களைக் கொலை செய்தது இல்லை.

6,00,000 ஒருவர் புகைத்து வெளியிட்ட புகையைச் சுவாசிப்பதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை.

63 சதவிகித உயிரிழப்புக்கள் தொற்றா நோய்கள் மூலம் ஏற்படுகின்றன. தொற்றாநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் முதல் இடத்தில் இருப்பது புகைப்பழக்கம்தான்.

20 வகையான நோய்கள் ஏற்பட புகையிலைப் பழக்கம் காரணமாக இருக்கிறது.

50 சதவிகிதம் பேர் புகைப்பழக்கம்   உள்ளவர்களில் மரணத்தைத் தழுவுபவர்கள்.

80 சதவிகிதப் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் ஏழை மற்றும் வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான்.

புகையிலையை எதிர்க்க ஒரு ஆப்!

புகையிலை இல்லா மாநிலம் வேண்டும்!

புகையிலைப் பழக்கத்துக்கு எதிரான செயல்பாட்டுக்காக டொபேக்கோ மானிட்டர் என்ற ஆப் (செயலி) இருக்கிறது. புகையிலை தொடர்பான எதிர்ப்புகள், தடைகள் ஆகியவற்றை நம்மால் காண முடியும். புகையிலையை மறக்கவைக்க நடத்தும் விழிப்புஉணர்வு, ரிஹேப் சென்டர்கள் போன்ற தகவல்களையும் காணலாம். பொதுமக்கள், தனது சுற்றுப்புற வட்டாரத்தில், பள்ளிக்கு அருகில் புகையிலை விற்பது, புகையிலை தொடர்பான அத்துமீறல்கள் ஆகியவற்றை இந்த ஆப்பில் புகார் தரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism