சிறுதானியத்தை உணவில் சேருங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், ‘சிறுதானியம், சர்க்கரை நோயாளிகளின் உணவு’ என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. சிறுதானியங்கள் அனைவருக்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பவை. தினம் ஒரு சிறுதானியம் எனச் சாப்பிட்டுவந்தால், உடல் வலிமை பெறும். சிறுதானியங்களுடன் ஆரோக்கியம் காக்கும் அற்புத உணவுப்பொருட்கள் இங்கே...
கம்பு அரிசி (500 கிராம்) - ரூ 35/-

அரிசியைவிட எட்டு மடங்கு இரும்புச்சத்து அதிகம். மாதவிலக்கு சமயத்தில் வலியைக் குறைக்கும். வெயிலால் ஏற்படும் உடல்வெப்பத்தைத் தணிக்கும்.
மாப்பிள்ளை சம்பா அரிசி (500 கிராம்) - ரூ 70/-

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணமாக உள்ள மாப்பிள்ளைகளுக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைக்க மாப்பிள்ளை சம்பா சாதம்செய்து தரும் பழக்கம் உண்டு. அந்த அளவுக்கு சத்துக்களைத் தன்னுள் அடக்கிவைத்திருக்கிறது இந்த அரிசி.
கேழ்வரகு (500 கிராம்) - ரூ 30/-

சைவ உணவுகளில் கேழ்வரகில்தான் அதிக அளவு கால்சியம் உள்ளது. ரத்தசோகையைத் தீர்க்கும் அற்புத உணவு. எலும்புகளின் உறுதிக்கு உதவும்.
தினை அரிசி (500 கிராம்) - ரூ 50/-

மலைப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்குத் தேனும் தினை மாவுமே பிரதான உணவாக இருந்தன. தினையில் சத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. தேராத உடலையும் தேற்றும் சக்தி தினைக்கு உண்டு.
பனங்கிழங்கு சேவை (1 பாக்கெட்) - ரூ 60/-

பனங்கிழங்கால் தயாரிக்கப்பட்ட சேவை இது. ரவை உப்புமா, சேமியா என்றால் முகம் சுளிப்பவர்களே அதிகம். கிழங்கால் தயாரிக்கப்பட்ட இந்த சேவையில் சத்துக்களும் அதிகம். இதன் சுவையும் பிரமாதம்.
பனிவரகு (500 கிராம்) - ரூ 50/-

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க உதவும். எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்கலாம்.
கறுப்புக்கவுனி (500 கிராம்) - ரூ 140/-

இதயத்தைப் பலப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மூட்டு வலியைச் சரிசெய்யும். பாரம்பரிய அரிசி வகை இது. சுவை மிகுந்த புட்டு செய்ய சிறந்த அரிசி.
மலைத்தேன் (500 கிராம்) - ரூ 255/-

இனிப்பு என்றதுமே, நாட்டு சர்க்கரை, பனை வெல்லம், தேன் போன்றவைதான் முன்பு பிரதான இனிப்பு வகை. அதில் மலைத்தேன் சுவையூட்டியாக மட்டும் இல்லாமல் மருந்துகளோடு சேர்த்து சுவைக்கப் பரிந்துரைப்படுகிறது.
தேன்நெல்லி (1 பாக்கெட்) - ரூ 90/-

தினம் ஒரு நெல்லி சாப்பிட, வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம். இதனுடன், தேனில் ஊறவைத்த நெல்லி சாப்பிட்டுவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் பலப்படும்.
- மினு
படங்கள்: எம்.உசேன்
உதவி: திங்கள் இயற்கை அங்காடி, மாடம்பாக்கம், சென்னை