Published:Updated:

அந்தப்புரம் - 34

அந்தப்புரம் - 34
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 34

ஓவியம்: ஸ்யாம்

அந்தப்புரம் - 34

ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
அந்தப்புரம் - 34
பிரீமியம் ஸ்டோரி
அந்தப்புரம் - 34
அந்தப்புரம் - 34

குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள், ஒருவரை ஒருவர் குறை சொல்லி சண்டை போடுவதால் பிரச்னை தீர்ந்துவிடாது என்பதை உணர்ந்தனர். ஒருவர் மீது ஒருவருக்கு அன்பும் பரிவும் அதிகரித்தன. இருப்பினும், என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தனர். அப்போது, ப்ரீத்தமின் தோழனான அஸ்வின்தான், “நீங்க ரெண்டுபேரும் ஏன் ஒரு செக்ஸாலஜிஸ்ட்டை ப் பார்க்கக் கூடாது?” என்று ஆலோசனை சொன்னான்.

“முதல்ல நான் மட்டும் போனா போதாதா? ப்ரியாவும் வரணுமா?” என்று அப்போதும் தன் மனைவியை விட்டுக்கொடுக்காமல் கேட்டான் ப்ரீத்தம். “என்ன பிரச்னைன்னே தெரியலை. அதனால, ரெண்டு பேரும் போய் பார்க்கிறதுதான் நல்லது” என்று மருத்துவரிடம் அனுப்பிவைத்தான் அஸ்வின்.

இருவருக்கும் பொதுவான உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று ரிப்போர்ட் வந்தது. இவர்களுக்கு இருப்பது மனம் சார்ந்த பிரச்னை என உணர்ந்த மருத்துவர், இருவரிடமும் தனித்தனியே பேசினார். முதலில், ப்ரீத்தமிடம் பேசும்போது, எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, ப்ரியாவிடம் பேசினார்.

செக்ஸ் பற்றிய ப்ரியாவின் அபிப்பிராயத்தைக் கேட்டபோது, “செக்ஸ்னா கொஞ்சம் பயம் டாக்டர். இருந்தாலும், ப்ரீத்தம் எப்பக் கேட்டாலும் முடியாதுன்னு சொன்னது இல்லை. கண்ணை இறுக்கமா மூடிக்குவேன்” எனத் தன் ஆழ்மனதில் இருந்த பயத்தைக் கொட்ட ஆரம்பித்தாள். ஏன் என்று விசாரித்தபோது, “நான் காலேஜ்ல படிக்கும்போது, என் தோழி ஒருத்திக்குக் கல்யாணம் ஆச்சு. அவ முதல் இரவுல நடந்த விஷயங்களை எங்கிட்ட ஷேர் செய்தாள். ரொம்ப வலிச்சுதாம், வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும் கேட்காம அவ புருஷன் இன்டர்கோர்ஸ் செய்தாராம். அதில், அவளுக்கு ப்ளீடிங் ஆச்சாம். ரொம்ப அழுதாளாம். இதை எல்லாம் கேட்டதில் இருந்து எனக்கும் செக்ஸ்னா ரொம்ப பயம். அதனால கல்யாணப் பேச்சு எடுத்தாலே டென்ஷன் ஆகிடுவேன். திடீர்னு, ப்ரீத்தம் கல்யாணம் செய்துக்கலாமானு கேட்டதும் பிடிச்சுப்போயிடுச்சு. அதனால, ஓ.கே சொன்னேன். ஆனாலும், செக்ஸ் பற்றிய பயம் மட்டும் இருந்துக்கிட்டே இருந்துச்சு.

அந்தப்புரம் - 34

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணத்துக்கு முன்னாடி, எங்க பாட்டி எனக்கு நிறைய அட்வைஸ் செஞ்சாங்க. அதில, தாம்பத்தியவாழ்க்கை பற்றிய அட்வைஸும் இருந்துச்சு. ‘ப்ரீத்தம் இனி உன் ஃப்ரெண்ட் இல்லை. உன் கணவன். அவன் என்ன சொன்னாலும் சரின்னு கேட்டு நடக்கணும்.  அவனுடன் விவாதம் செய்யக் கூடாது. அவன் சொல்றதை அப்படியே கேட்டுக்கணும். அவன் என்ன சொல்றானோ, அதை எல்லாம் செய்யணும்... நாமதான் படிச்ச பொண்ணாச்சே, நம்மகிட்ட அவன் அதிகாரம் செல்லாதுனு எல்லாம் நினைச்சுக்கிட்டு,  ‘முடியாது’னு சொல்லக் கூடாது. முதல்முறை தாம்பத்திய உறவு நடக்கும்போது அப்படி இப்படின்னுதான் இருக்கும். வலிச்சாலும் அதைத் தாங்கிக்கணும். கொஞ்சங்கொஞ்சமாச் சரியாகிடும்’ என்றார்கள். இதெல்லாம் என் மனசில் ஆழமா பதிஞ்சிடுச்சு. ப்ரீத்தம் ஃபோர்பிளே செய்யும்போது சந்தோஷமா இருக்கிறேன். ஆனா, செக்ஸ் செய்யணும்னு வரும்போது என்னையும் மீறி என்ன ஆகுதுன்னே தெரியலை. கண்ணை இறுக்க மூடிக்கிட்டு இருந்துடுவேன்” என்றார்.

டாக்டருக்கு என்ன பிரச்னை என்று புரிந்தது...

“உங்கள் இருவரிடமும் உடல் சார்ந்த குறை இல்லை. உங்களுக்குள் தாம்பத்தியம் நிகழாமல் இருக்க இரண்டு காரணங்கள் உள்ளன. தாம்பத்தியத்தில் தொடக்கத்தில் இப்படித்தான் இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல அனுபவத்தின் காரணமாக, தாம்பத்திய உறவு மகிழ்ச்சியானதாக மாறிவிடும். தொடக்கத்திலேயே எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு முதல் தவறு.

இரண்டாவது பிரச்னை, ‘தாம்பத்திய உறவின்போது வலி ஏற்படும்’ என்ற தவறான பயத்தின் காரணமாக ப்ரியா தன்னையும் அறியாமல் வெஜைனல் தசையை இறுக்கமாக வைத்துக்கொள்வதுதான்.

தாம்பத்தியம் தொடர்பாக அவளது பொதுவான கருத்தை அறிய சிலவற்றைக் கேட்டேன். அப்போது அவள், தன்னுடைய தோழிகள் சொன்ன சில விஷயங்களைக் கேட்டு, “செக்ஸ் என்றாலே மிகவும் வலி நிறைந்தது, கொடுமையானது என்பதாக மனதில் பதிந்துவிட்டது” என்றாள். மேலும், அவள் பயத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில், திருமணத்துக்கு முன்பு அவளது பாட்டி ஓர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். இதனால், தாம்பத்தியத்தை ரசிக்க ஆசை இருந்தாலும் அவளது ஆழ்மனது தடையாக மாறிவிடுகிறது. இதனால், ஃபோர்பிளே சந்தோஷமாக இருந்தாலும், ஆண் உறுப்பை உள்ளே நுழைக்கும்போது, அவள் ஆழ்மனதுத் தூண்டல் காரணமாக வெஜைனல் தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதற்கு வெஜைனமைஸ் என்று பெயர். இது பொதுவாக, நிறையப் பெண்களிடம் காணப்படும் பிரச்னை. இதனால்தான் ப்ரீத்தம்  என்னதான் முயற்சிசெய்தும் உள்ளே நுழைக்க முடியவில்லை. இதனால்தான் அறுவைசிகிச்சைக்குப் பிறகும் இவர்களுக்கு பிரச்னை சரியாகவில்லை. இந்தப் பிரச்னைக்கு ப்ரியாவின் மனதில் உள்ள பயத்தை அகற்ற வேண்டும்.”

அந்தப்புரம் - 34

ஏன்? எதற்கு? எப்படி?

மருத்துவத்தின் மிக முக்கியப் பிரிவாக உள்ள பாலியல் மருத்துவம், பாலியல் சார்ந்த உடலியல் மற்றும் உளவியல் பிரச்னைகளைக் கையாள்கிறது. 

பொதுவாக, மனிதர்களுக்கு ஏற்படும் சில பாலியல் பிரச்னைகள்

ஆண்

பாலியலில் ஆர்வமின்மை அல்லது குறைவான ஆர்வம். ஆண்மைக்குறைபாடு. அதாவது, ஆணுறுப்பு விரைப்புத்தன்மை குறைபாடு அல்லது நீண்ட நேரம் விரைப்புத்தன்மை இன்மை. மிக விரைவாக விந்தணு வெளியேற்றம். உடலுறவின்போது விந்தணு வெளியேற்ற முடியாமை (விரைப்புத்தன்மை குறைந்துவிடுவதால்), தாம்பத்தியத்தில் போதுமான திருப்தி ஏற்படாமை, தாம்பத்திய உறவின்போது அல்லது உறவுக்குப் பின் உறுப்பில் அதிகப்படியான வலி ஏற்படுவது போன்றவை ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான சில பிரச்னைகள் ஆகும்.

பெண்

பொதுவாக, பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் இவைதான் என்று துல்லியமாகச் சொல்லும் அளவுக்கு நமக்கு புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், உடலுறவின்போது அதிகப்படியான வலி, உச்சத்தை எட்ட முடியாத நிலையில் பலரும் வருகின்றனர்.

பாலியல் செயல்பாட்டில் விருப்பமின்மை அல்லது ஆர்வம் குறைவு. போதுமான அளவு தூண்டல் அடையாமை காரணமாகப் பிறப்புறுப்பு உலர்ந்த தன்மை. உடலுறவின்போது உச்சம் எட்ட முடியாத நிலை (ஆர்கஸமிக் டிஸ்ஃபங்ஷன்), வெஜைனஸ்மஸ் (Vaginismus) எனப்படும் வெஜைனல் தசை இறுக்கம் அடைந்து, தாம்பத்தியம் மேற்கொள்ள இயலாமை. தாம்பத்திய உறவின்போது அல்லது உறவுக்குப் பிறகு வலி போன்றவை பெண்கள் மத்தியில் காணப்படும் பொதுவான பிரச்னைகள்.

பொதுவாக, பெண்களுக்குப் பாலுணர்வு என்பது ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஓவலேஷன் எனப்படும் முட்டை வெளிப்படும் நாட்களில் பாலுணர்வு அதிகமாக இருக்கும். சிலருக்கு இதனுடன், மாதவிலக்கு நேரத்தில்கூட பாலுணர்வு அதிகமாக இருக்கும். தவிர, அவர்கள் உடல்நலத்தைப் பொருத்து, வாழ்க்கைச்சூழலைப் பொருத்து பாலியல் ஆர்வம், விருப்பத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம்.

இவை தவிர, சில பொதுவான பிரச்னைகளும் உள்ளன.

- ரகசியம் பகிர்வோம்!

டவுட் கார்னர்

“செக்ஸ் பிரச்னைக்கு அலோபதியைவிட மூலிகை மருந்துகள் எடுப்பதுதான் நல்லதா?”


பி.ராதிகா, சென்னை.

“எந்த மருந்தாக இந்தாலும், அது முறையான பரிசோதனைக்குப் பிறகு, தேவைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படுவதாக இருக்க வேண்டும். ஒரு மருத்துவர், தான் பரிந்துரைக்கும் மருந்தைப் பற்றி அதாவது, அதை எப்படி எடுக்க வேண்டும், எவ்வளவு காலத்துக்கு எடுக்க வேண்டும், அதன் பக்கவிளைவுகள் என்னென்ன என்று எல்லாம் முழுமையாகத் தெரிந்திருப்பார். அவர் அலோபதியாக மட்டும்தான் இருப்பார் என்று இல்லை... சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி என்று எந்த ஒரு மருத்துவமுறையைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் தகுதியானவர்தானா? அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்தவரா என்பதைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவமுறையும் அதற்கெனப் பிரத்தியேக நோய் கண்டறிதல், சிகிச்சை அளித்தலைப் பின்பற்றுகின்றன. எனவே, எந்த மருத்துவமுறையைப் பின்பற்றினாலும், அவர் தகுதிவாய்ந்தவரா என்பதை அறிந்து சிகிச்சைப் பெற வேண்டும். தொலைக்காட்சி, சுவரொட்டி, விளம்பரங்களைப் பார்த்து முடிவுசெய்யக் கூடாது.”

“மது அருந்தும்போது, அது பாலியல் உணர்வைத் தூண்டி, அதிகப்படியான திருப்தியை அளிக்கும் என்கிறார்களே இது உண்மையா? அதேபோலஆண் உறுப்பின் மேல் நுனித் தோலை நீக்கினால் (விருத்தசேதனம்) பாலியல் செயல்திறன் அதிகமாக இருக்கும் என்கிறார்களே?”

எஸ்.ஈஸ்வரன், சேலம்.

“இரண்டுமே தவறான கருத்துக்கள். ஆல்கஹால் மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடியது. எனவே, இது பாலியல் உணர்வையும் பாதிக்கும். நேரடியாக, திடீரென இந்தச் செயல்பாடு நடந்துவிடாது. கொஞ்சம் கொஞ்சமாக இது இந்த பாதிப்பை ஏற்படுத்தும். இது ஆர்வத்தை, ஆசையைத் தூண்டும். ஆனால், செயல்திறனை எடுத்துச் சென்றுவிடும். எனவே, மதுவைத் தவிர்ப்பது நல்லது. விருத்தசேனம் செய்தால் பாலியல் செயல்திறன் அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.”

“பொதுவாக, அலோபதி மருத்துகளில் பக்கவிளைவுகள் அதிகம். ஆனால், மூலிகை சிகிச்சை பக்கவிளைவுகள் அற்றது என்பார்கள். இதில், எந்த அளவுக்கு உண்மை டாக்டர்?”


கே.ராஜேஷ், சென்னை.

“இதில் உண்மை இல்லை. நியூட்டனின் மூன்றாவது விதியைப் பற்றி கேள்விப்பட்டிருக் கிறீர்களா? எப்படி ஒரு வினைக்கு எதிர்வினை இல்லாமல் போகும்? ஒரு தேர்ந்த மருத்துவர், தான் பரிந்துரைக்கும் மருந்தின் தன்மையை உணர்ந்து, முடிந்தவரை எப்படி பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம் எனக் கணக்கிட்டு மருந்து அளிக்கிறார். அதேபோலதான், மூலிகை மருந்துகளிலும் பக்கவிளைவுகளைக் கருத்தில்கொண்ட சில வழிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர். அதனால்தான், சில சூழ்நிலையில், மூலிகை மருந்தை எடுக்கவே கூடாது என்றும் சொல்கிறார்கள்.”

“ ‘செக்ஸ் பிரச்னைகளுக்கு அலோபதி மருத்துவத்தில் நல்ல தீர்வு கிடைக்காது. சித்த மருத்துவம், ஆயுர்வேதா போன்ற நம் ஊர் சிகிச்சைதான் பெஸ்ட்’ என்கிறான் என்னுடைய நண்பன். மாற்று மருத்துவத்தைப் பின்பற்றலாமா?”

என்.ஞானதேசிகன், மதுரை.

“அலோபதியில் தீர்வு இல்லை என்பதில் துளி கூட உண்மை இல்லை. அலோபதி நவீன மருத்துவமுறை. இது ஆதாரங்கள், ஆராய்ச்சிகள், அறிவியல் உண்மையின் அடிப்படையில் செயல்படுகிறது. பல விதங்களில் பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கு அலோபதி மருத்துவம் தீர்வு அளிக்கிறது. இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மருந்து வயாகரா. அறுவைசிகிச்சை முறையில் பீனைல் இம்பிளான்டேஷன். இவை இரண்டுமே அலோபதி மருத்துவத்தின் வெற்றியைச் சொல்லும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism