Published:Updated:

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்
பிரீமியம் ஸ்டோரி
ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

Published:Updated:
ஈஸி 2 குக்
பிரீமியம் ஸ்டோரி
ஈஸி 2 குக்
ஈஸி 2 குக்

பிரெட் சாட்

தேவையானவை

பிரெட் துண்டுகள் - 4

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 1

புதினா, கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்ஸ்பூன்

பச்சைமிளகாய் - 1

ஓமப்பொடி (மிக்ஸர்) - அரை கப்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஈஸி 2 குக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை

கிரீன் சட்னி:
புதினா, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, பச்சைமிளகாயுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும்.

பிரெட்டைத் துண்டுகளாக நறுக்கி, வெறும் வாணலியில் நன்றாக வாட்ட வேண்டும். ஈரப்பதம் நீங்கி மொறுமொறுவென ஆகும் வரை வதக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில், வெங்காயம், தக்காளி, கிரீன் சட்னி, உப்பு, மிளகாய்த்தூள், உருளைக்கிழங்கைப் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும். பிறகு, வறுத்துவைத்த பிரெட் துண்டுகள், ஓமப்பொடி மிக்ஸர் சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லி தூவி, சாப்பிடலாம்.

பலன்கள்

வெங்காயம், தக்காளி, புதினா, எலுமிச்சைச் சாறு சேர்ப்பதால், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் கிடைக்கின்றன.

வேகவைத்த உருளைக்கிழங்கில் இருந்து கார்போஹைட்ரேட், புரதம் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக கொடுக்கலாம். பெரியவர்களும் அடிக்கடி சாப்பிடலாம்.

பப்பட் பராத்தா

தேவையானவை

கோதுமை மாவு - 1 கப்

பப்பட் (மிளகு போட்ட அப்பளம்) - 4

கொத்தமல்லி - அரை கப்

நெய், உப்பு - தேவையான அளவு

ஈஸி 2 குக்

செய்முறை

கோதுமை மாவைச் சப்பாத்திக்குப் பிசைவது போல பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பப்பட்டை, அப்பளம் போல பொரித்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு, ரவைப்பதத்தில் அரைக்க வேண்டும். இதை, ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதில், தேவையான அளவு நெய், கொத்தமல்லி சேர்த்துக் கலந்துவைக்கலாம். தவா சூடானதும், சின்னதான உருண்டை அளவுக்கு கோதுமை மாவை எடுத்து, அதில் பப்பட் மிக்ஸரை ஸ்டஃப் செய்து, சப்பாத்தி மாவில் புரட்டி எடுத்து, சின்னச் சின்ன பராத்தாவாகத் தேய்த்து, தவாவில் இருபுறமும் சுட்டு எடுக்க வேண்டும்.

பலன்கள்

புதிய சுவை தரும் பராத்தாவாக இருப்பதால், குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

நார்ச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது. நல்ல கொழுப்பு இருப்பதால் பசி நீங்கும். உடலுக்கும் நல்லது.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு ஆரோக்கியமான லஞ்ச் இது.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

- ப்ரீத்தி,

படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism