Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

பேபிகார்ன் சாலட்

தேவையானவை: பேபிகார்ன் - 4, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1, வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பேபிகார்னை சின்னச் சின்ன வட்டமாக வெட்டிக்கொள்ளவும். இதை, கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவியிலும் வேகவைக்கலாம். பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி, வேகவைத்த பேபிகார்னுடன் கலக்கவும். மிளகுத்தூள், உப்பு தூவி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

உணவு நல்லது வேண்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பலன்கள்: கலோரி குறைந்த உணவு. எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானக் குறைபாடுகளைப் போக்கும். அரை கப் பேபிகார்னில் ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் ஏ, இரும்புச்சத்தில் நான்கு சதவிகிதம் கிடைக்கிறது.

வயிறு - இஞ்சி

வயிற்றுக்கு நன்மை செய்யக்கூடிய உணவுகளில் முக்கியமானது இஞ்சி. செரிமான சக்தியை மேம்படுத்தும். மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறுகளைச் சரிசெய்யும். நிறையப் பேருக்கு அல்சர் பிரச்னை பாடாய்ப்படுத்தும். இவர்கள், 50 மி.லி அளவு இஞ்சி, சீரகம் போன்றவற்றில் டீ தயாரித்துச் சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள் தீரும். இஞ்சி, சுக்கு, சீரகம், சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் குர்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது.

உணவு நல்லது வேண்டும்!

**வயிற்றுக்கான உணவுகள்: வாழை, பப்பாளி, மோர், ஆப்பிள், பட்டை, வெங்காயத் தாள்.

மிக்ஸ்ட் ஃபுரூட் ஜூஸ்

தேவையானவை: தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிய அன்னாசிப்பழம் - 50 கிராம், முலாம்பழம்  -  பாதி,  பப்பாளி  - 50 கிராம், நடுத்தர வாழைப்பழம் - 1, பச்சை திராட்சை - 25 கிராம், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு (விருப்பப்பட்டால்).

உணவு நல்லது வேண்டும்!

செய்முறை: அன்னாசி மற்றும் திராட்சைப் பழங்களை மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சாறு எடுக்க வேண்டும். இதனுடன், முலாம் பழம், பப்பாளி, வாழை மற்றும் ஐஸ்கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் அருந்த வேண்டும்.

**ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

**மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள், இதய நோயாளிகள் இந்த ஜூஸை அருந்துவது மிகவும் நல்லது.

**தொடர்ந்து இந்த ஜூஸை எடுத்துக்கொள்வது, புற்றுநோய் ஆபத்தில் இருந்து காக்கும். சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும்.