Published:Updated:

எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!

எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!
பிரீமியம் ஸ்டோரி
எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!

பியூட்டி அண்ட் ஹெல்த் ஸ்பெஷல்

எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!

பியூட்டி அண்ட் ஹெல்த் ஸ்பெஷல்

Published:Updated:
எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!
பிரீமியம் ஸ்டோரி
எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!
எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!

‘‘திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் நாம் பார்க்கும் பெண்களுக்கு மட்டும் கூந்தல் எப்படி அவ்வளவு பளபளப்பாக இருக்கிறது என்று வியந்திருப்போம். கேசத்துக்கான ஊட்டச்சத்தும் கண்டிஷனரும் கிடைக்கப்பெற்றால், உங்கள் கூந்தலும் மின்னும். ஹோம்மேட் எக் ஷாம்பு, அதற்கான சிறந்த வழி!’’

- மதுரை, அண்ணாநகரில் உள்ள ‘பாக்யா’ பியூட்டி பார்லரின் பியூட்டிஷியன் மலர்பாக்கியம், முட்டையுடன் கேச நலனுக்கான இன்னும் சில பொருட்கள் சேர்த்து வீட்டிலேயே செய்யக்கூடிய எக் ஷாம்பு பற்றியும், அதன் பலன்களைப் பற்றியும் பேசினார்...

எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘முட்டையில் உள்ள புரதம், விட்டமின்கள் மற்றும் மினரல்கள்... கூந்தலின் ஆரோக்கியத்தையும், அழகையும் மெருகேற்றக்கூடியவை. கேசத்துக்கான ஈரப்பதத்தை தந்து, கண்டிஷனராகவும் வினைபுரிந்து, பட்டுப்போல பளபளக்கச் செய்யும் ஆற்றல் முட்டைக்கு உண்டு. குறிப்பாக, வறண்ட மற்றும் சேதமடைந்த கூந்தலுக்கு முட்டை கொண்டு செய்யப்படும் ஷாம்பு, சிறந்த நிவாரணியாக இருக்கும்’’ என்ற அறிமுகத்துடன், எக் ஷாம்புவுக்கான செய்முறைக்குத் தயாரானார் மலர்.

‘‘தேவையான பொருட்கள்

எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!

முட்டை,

ஆலிவ் ஆயில்,

எலுமிச்சைப் பழம்,

மைல்டு ஷாம்பு (ரசாயனங்கள் இல்லாதது), எசன்ஷியல் ஆயில் (நறுமணத்துக்காகச் சேர்க்கப்படுவது).

செய்முறை: ஒரு முட்டையுடன் அரை டீஸ்பூன் ஆலிவ் ஆயில், அரை மூடி எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் மைல்டு ஷாம்பு, சில துளிகள் எசன்ஷியல் ஆயில் சேர்த்து, நன்கு நுரைத்துவரும்படி எக் பீட்டரால் (egg beater) கலக்கவும். அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்குள் ஹோம்மேட் எக் ஷாம்பு தயார்.

எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!

பயன்படுத்தும் முறை

வழக்கமாக ஷாம்பு பயன்படுத்துவதுபோலவே, இந்த ஷாம்புவை தலையில் அப்ளை செய்து தேய்த்து, குளிர்ந்த நீரால் நன்கு அலசவும் (வெந்நீர், முட்டையின் வாசத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதால் அதைத் தவிர்க்கவும்). இந்த ஷாம்புவை ஃப்ரிட்ஜில் வைத்து, இரண்டு நாட்கள்வரை பயன்படுத்தலாம்.

பலன்கள்

முட்டை... முடிவளர்ச்சி, ஊட்டம், கண்டிஷனர் என்று பல பலன்களைக் கொடுக்கும். ஆலிவ் ஆயில், கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதம் கொடுக்கும், அது 15 நாட்கள் வரை நீடித்திருக்கும். எலுமிச்சைச் சாறு, பொடுகுத் தொல்லை நீக்கி ஸ்கால்ப்பை சுத்தமாக்கும். எசன்ஷியல் ஆயில், முட்டையின் விரும்பப்படாத வாசனையைப் போக்கி நறுமணம் தரும். விலை உயர்ந்த ஷாம்பு, கண்டிஷனர், ஹேர் ஸ்பிரே, சீரம் என்று காசைக்கொட்டத் தேவை  இல்லை... வீட்டிலேயே குறைந்த செலவில் சிறப்பாகப் பெறலாம் கூந்தலுக்கான இன்ஸ்டன்ட் ஷைனிங்கை.

நிரந்தரமாகவே எக் ஷாம்பு!

நாம் பொதுவாகப் பயன்படுத்தும் பிராண்டட் ஷாம்புகள்கூட, சோப் பவுடர், பிரிசர்வேட்டிவ்கள், நறுமணப் பொருட்கள் என ரசாயனங்களின் கலவைதான். ரசாயன அளவு 9% இருக்கும் ஷாம்புகள் ஓ.கே. ஆனால், பெரும்பாலான ஷாம்புக்களில் அது 13%க்கும் அதிகமாகவே இருக்கிறது.  தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது, கேசத்துக்கு இயற்கையாக அமையப்பெற்ற ஈரப்பதத்தை அது நாளடைவில் இல்லாமல் செய்துவிடும். மேலும், பொடுகுக்கான பிரத்யேக ஷாம்பு என்று சொல்லப்படுபவை எல்லாம், அதில் உள்ள அடர் ரசாயனங்களால் பொடுகை நீக்கிவிட்டாலும், அந்த இடங்களில் இந்த ரசாயனங்கள் தங்கி விடும். விளைவு, வறட்சி, கேசப் பிளவு, முடி உதிர்வு, கூந்தல் மீண்டும் வளரும் (ரீகுரோத்) சாத்தியங்களைக் குறைப்பது என கேசத்தின் அத்தனை பிரச்னை களுக்கும் ஷாம்புவும் காரணமாக அமையும்.

அதுவே வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எக் ஷாம்புவையே தொடர்ந்து பயன்படுத்தும்போது, ரெடிமேட் ஷாம்புவில் உள்ள ரசாயனங்கள் மற்றும்

அது தரும் பக்கவிளைவு களில் இருந்து கேசம் பாதுகாக்கப்படும். மேலும், இயற்கை பொருட்களால் வீட்டிலேயே செய்யப்படும் இந்த ஷாம்பு, ஒவ்வொரு முறையும் கூந்தலுக்கு ஆரோக்கியம் கொடுத்துக் கொண்டே இருக்கும். வாரம் இருமுறை என இந்த எக் ஷாம்புவை பயன்படுத்தி வர, வித்தியாசத்தை கண் கூடாக உணரலாம்.

மொத்தத்தில், வீட்டி லேயே சில நிமிடங்களில் செய்துகொள்ளக்கூடிய இந்த எக் ஷாம்பு, மிகவும் சிக்கனமானது; கூந்தலை பட்டுப்போல மின்னச் செய்வது; தொடர்ந்து பயன்படுத்தும்போது, கேசத்துக்கான மிகச் சிறந்த ஊட்டமாக அமையும்’’

- பளபள கூந்தலுக்கு, பல பல தகவல்கள் தந்து நிறைவு செய்தார் மலர்.

எக் ஷாம்பு... இனி உங்கள் வீட்டிலும்தானே?!

ஜெ.ஜனனி

கவனிக்க..!

• நீளமான, அடர்த்தியான கூந்தலுக்கு ஏற்ப, இங்கே கொடுக்கப்பட்டுள்ள சேர்மானப் பொருட்களின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!

• கூந்தல் அதிக வறட்சியாக இருக்கிறவர்கள், முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து, இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவைப் பயன்படுத்தலாம்.

• எசன்ஷியல் ஆயிலும், மைல்டு ஷாம்புவும் அழகுப் பொருட்களுக்கான கடைகளில் கிடைக்கும். நறுமணத்துக்காகப் பயன்படுத்தும் எசன்ஷியல் ஆயில்... ரோஸ், லாவண்டர் என பல ஃபிராக்ரன்ஸ்களில் கிடைக்கும். ஒருவேளை முட்டையின் மஞ்சள்கருவை ஷாம்புவில் பயன்படுத்தவில்லை எனில் அந்த வாசனை இருக்காது என்பதால், எசன்ஷியல் ஆயிலும் தேவையிருக்காது. ரசாயனங்கள் இல்லாத மைல்டு ஷாம்புவில் கற்றாழை ஷாம்பு பயன்படுத்துவது, கேசத்தின் ஈரப்பதத்துக்கு பரிந்துரைக்கத்தக்கது.

எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!

• முதன்முதலில் பயன்படுத்தும்போது, எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பு அளவுக்கு இது எண்ணெய் நீக்கியாகச் செயல்படவில்லை என்று நினைப்பவர்கள், இந்த ஷாம்பு பயன்படுத்திய பின், ரெடிமேடு ஷாம்புவால் ஒருமுறை கேசத்தை அலசிக்கொள்ளலாம். அப்போது, 90 நொடிகளுக்கு மேல் அந்த ஷாம்பு கேசத்தில் இல்லாதவாறு உடனடியாக அலசிவிடவும். இல்லையெனில், எக் ஷாம்புவில் உள்ள இயற்கைப் பொருட்கள் தரவல்ல ஈரப்பதம் மற்றும் ஊட்டத்தை, ரெடிமேடு ஷாம்புவின் வீரியம் கேசத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கிவிடும்.

• இந்த ஷாம்புவை ஹேர் பேக் ஆகவும் அப்ளை செய்து, அரை மணி நேரம் ஊறவைத்தும் அலசலாம். வடியாமல் இருக்க, ஷவர் கேப் போட்டுக்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism