Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

`நேரம்’ படத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் நிவின் பாலி. கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டி இயக்கத்தில் ஹிட் அடித்த `உலிடவாரு கண்டன்டே' படத்தின் தமிழ் ரீமேக்கில் ரீ என்ட்ரி ஆகிறார் நிவின். த்ரில்லர் படமான இதை தமிழில் இயக்குவது ராஜீவ் மேனன் மற்றும் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்த கௌதம் ராமச்சந்திரன். நேரமாச்சு... சீக்கிரம் வாங்க நிவின்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

• சமீபத்தில் நடந்துமுடிந்த உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், ஒரே இந்தியராக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் சோனியா லாதர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் 24 வயதான சோனியா,  உலகின் முதல் நிலை வீராங்கனையான அலிஸா மெஸானோவுடன் மோதினார். முதல் ரவுண்டில் பன்ச்களைச் சிறப்பாக விட்ட சோனியா, இரண்டாவது சுற்றில் கவனம் இழக்க தோல்வி அடைந்தார். இருப்பினும் மேரி கோம் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் எல்லாம் இரண்டாம் சுற்றிலேயே வெளியேறிவிட சோனியா மட்டும் வெள்ளிப் பதக்கத்தோடு, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றிருக்கிறார். ஆல் தி பெஸ்ட் சோனியா!

இன்பாக்ஸ்

• சல்மான் கான் - அனுஷ்கா ஷர்மா நடித்திருக்கும் `சுல்தான்’ படத்தின் ட்ரெய்லர்தான் கடந்த வார யு-ட்யூப் வைரல். `முதலில் நான் சுல்தானில் நடிக்கப் பயந்தேன். காரணம், என்னைப் பார்த்தால் ஒரு மல்யுத்தப் போட்டியில் ஜெயிப்பவரைப்போல இல்லை என்பதுதான். பிறகு என்னைப் போன்ற பலரும் மல்யுத்தத்தில் இருப்பதைப் பார்த்த பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. ஒருவழியாக இப்போது நானும் மல்யுத்த வீராங்கனை ஆகிவிட்டேன்' என  உற்சாகமாகிறார் அனுஷ்கா ஷர்மா. ரெஸ்லிங் ராணி!

இன்பாக்ஸ்

`டின்னர் வித் மினிஸ்டர்’ என்ற திட்டத்தைச் சத்தம் இல்லாமல் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. திடீரென மத்திய அமைச்சர்களுக்கு போன் போட்டு, `இன்று இரவு உங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருகிறேன்' எனச் சொல்லி சர்ப்ரைஸ் கொடுக்கிறார் மோடி. முதலில் மோடி டின்னர் சாப்பிட்டது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வீட்டில். அடுத்ததாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ராம் விலாஸ் பஸ்வான்... என ஒவ்வோர் அமைச்சர் வீடாக டின்னருக்குப் போய்வருகிறார் மோடி. இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு, அமைச்சரின் குடும்பத்தினருடன் அறிமுகமாகி, ஜாலியாகப் பேசுகிறாராம். இதனால் பல அமைச்சர்கள் மோடியின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். டின்னர் பயணம்!

• தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தன் வீட்டில் பிரமாண்டமான ஒரு மாடித் தோட்டத்தைப் பராமரித்துவருகிறார். இங்கு முக்கிய விளைச்சலே கீரைகள்தான். 20-க்கும் மேற்பட்ட வகைகளில் கீரைகள் வளர்க்கும் ஜெயக்குமாரின் பிடித்த உணவும் கீரைகளே! கீரை வளர் துறை!

இன்பாக்ஸ்

• `பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' ஹீரோ ஜானி டெப் மீது கொலைமுயற்சி குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் அவரது மனைவி ஆம்பர் ஹியர்டு. 52 வயது ஜானி டெப், 30 வயது ஹாலிவுட் நடிகை ஆம்பரை, கடந்த ஆண்டு திருமணம் செய்தார். 15 மாதங்களே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியது. இந்த நிலையில், `கடந்த வாரம் திடீரென என் வீட்டுக்குள் நுழைந்த ஜானி டெப், ஐபோனை என் முகத்தில் தூக்கி எறிந்து என்னைக் காயப்படுத்தியதோடு, தவறான சொற்களால் திட்டினார். அவரால் என் உயிருக்கு ஆபத்து' என நீதிபதிகளிடம் ஆம்பர் முறையிட, ஆம்பர் வீடு இருக்கும் பக்கமே போகக் கூடாது என ஜானிக்குத் தடைவிதித் திருக்கிறது நீதிமன்றம். வெளியே ஹீரோ... உள்ளே வில்லன்!