ஹெல்த்
Published:Updated:

கொலஸ்ட்ரால் டேட்டா

கொலஸ்ட்ரால் டேட்டா
பிரீமியம் ஸ்டோரி
News
கொலஸ்ட்ரால் டேட்டா

கொலஸ்ட்ரால் டேட்டா

கொலஸ்ட்ரால் டேட்டா

ம் உடலின் இயக்கத்துக்குக் கொழுப்பு அவசியம். நம் உடலுக்குத் தேவையான கொழுப்பை கல்லீரல் உருவாக்கி, உடல் முழுவதுக்கும் அனுப்புகிறது. கொழுப்பைப் பயன்படுத்தித்தான் நம் உடல் பல்வேறு ஹார்மோன்களையும் வைட்டமின் டி உள்ளிட்டவற்றையும் உருவாக்குகிறது. நாம் உட்கொள்ளும் உணவில் இருந்தும் கொழுப்பு கிடைக்கிறது. ஹைகொலஸ்ட்ரால் என்றால், நம் உடல் இயக்கத்துக்குத் தேவையைக் காட்டிலும் மிக அதிகக் கொழுப்பு என்று அர்த்தம். இதை, எளிய ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். கொழுப்பின் அளவு அதிகரித்தால், உடலில் ஏற்படும் பாதிப்புகளைப் பார்க்கலாம்.

கொலஸ்ட்ரால் டேட்டா

கல்லீரலில் தொடங்குகிறது

கல்லீரல்தான் குளுக்கோஸைக் கொழுப்பாக மாற்றுகிறது. அதிகப்படியான கொழுப்பு உடலின் எந்தப் பகுதியிலும் சேகரித்துவைக்கப்படலாம். இது, கல்லீரலில் படியும்போது ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படுகிறது.

ரத்தம் மூலம் பாய்கிறது


கல்லீரல் தயாரித்த கொழுப்பானது ரத்தம் மூலம் உடல் முழுக்கக் கொண்டு செல்லப்படுகிறது. நல்ல கொழுப்பு பயணித்துக்கொண்டே இருக்கிறது. கெட்ட கொழுப்பு, கல்லீரலுக்குத் திரும்புகிறது.

ரத்தக் குழாய்களில் படிகிறது

ரத்தத்தில் பாயும் கொழுப்பில், நல்ல கொழுப்பின் அளவு குறைந்து, கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது, அதிகப்படியான கெட்ட கொழுப்பு, ரத்தக் குழாய் சுவர்களில் படிகிறது. தொடர்ந்து படியும்போது, மூளையில் அடைப்பை ஏற்படுத்துகிறது.

மூளையில் அடைப்பை ஏற்படுத்துகிறது

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது. இது தொடரும்போது, பக்கவாதம் ஏற்படுகிறது. கடைசியில், மூளை செல்கள் மரணிக்கின்றன.

நெஞ்சுவலி

இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் கொழுப்புப் படிந்து அடைப்பை ஏற்படுத்தும்போது, இதயத் திசுக்கள் மரணிக்கின்றன. இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.

பித்தப்பை கல் உருவாகக் காரணமாகிறது

அதிகப்படியான கொழுப்பு காரணமாக, பித்த நீர் அதிக அளவில் சுரக்கிறது. இப்படி அதிக அளவில் உற்பத்தியாகும்போது, பித்தப்பையில் கற்களை உருவாக்குகிறது.

தொடையில் பாதிப்பு

தொடைப் பகுதியில் கொழுப்புப் படியும்போது, காலுக்குப் பாயும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், வலி, பிடிப்பு, நமைச்சல் மற்றும் மரத்துப்போதல் பிரச்னை ஏற்படுகிறது.

எப்படிக் கண்டறிவது?

கொலஸ்ட்ரால் டேட்டா

எளிய ரத்தப் பரிசோதனை மூலம் கொழுப்பு அளவைக் கண்டறியலாம். அதற்கு, சாப்பிட்டு 9 முதல் 12 மணி நேரம் கழித்து ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். எனவே, இரவு 8 மணிக்கு உண்டுவிட்டு, அடுத்தநாள் காலையில் ரத்தப் பரிசோதனை செய்யலாம்.

கொலஸ்ட்ரால் டேட்டா

மொத்தக் கொழுப்பு

200 மி.கி/டெ.லி -க்கு கீழ் இருக்க வேண்டும்

நல்ல கொழுப்பு (ஹெச்.டி.எல்)


60 மி.கி/டெ.லி -க்கு மேல் இருக்க வேண்டும்.

குறைந்தால்...

மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படும்.

கெட்ட கொழுப்பு (எல்.டி.எல்)

100 மி.கி/டெ.லி -க்கு கீழ் இருக்க வேண்டும்.

அதிகரித்தால்...

மாரடைப்பு, பக்கவாதம், ஆர்த்தரோஸ்கிளிரோசிஸ்

(Artherosclerosis) ஏற்படும்.

ட்ரைகிளிசரைட்

150-க்கு கீழ் இருக்க வேண்டும்

அதிகரித்தால்...

இதுவும் ஒரு வகைக் கெட்ட கொழுப்புதான். நம் உணவில் இருந்து கிடைக்கும் கலோரியை உடல் செலவிட முடியாதபோது அது ட்ரைகிளிசரைட்டாக மாற்றப்பட்டு, கொழுப்பு செல்களுடன் சேமித்துவைக்கப்படும்.

- பா.பிரவீன்குமார்