சாலை ஓரங்களில், காலி இடங்களில் புதர் போல மண்டி வளர்ந்திருக்கும் நாயுருவியை நாம் தினமும் கடந்து் செல்கிறோம். ஆனால், அது மிகச்சிறந்த மூலிகை என்பது தெரியாது. நாயுருவிக்கு `சிறு கடலாடி’, `மாமுனி’, `நாய்க்குருவி’, `நாயரஞ்சி’ எனப் பல பெயர்கள் உள்ளன.

நாயுருவியின் இன்னொரு வகை செந்நாயுருவி. ‘இது, உடலைத் தேற்றுவதற்கும், சிறுநீரைப் பெருக்குவதற்கும், முறைச்சுரம் அகற்றுவதற்கும் உதவும்’ என்கிறது, சித்த மருத்துவம்.

இதன் இலைக்கு, கழிச்சல், ரத்தக்கழிச்சல், வெள்ளைப்படுதல் அதிக வியர்வை ஆகியவற்றைப் போக்கும் குணம் உண்டு. இதன் முழுச் செடியை அந்தக் காலத்தில் பெண்களுக்குப் பேறுகாலத்துக்குப் பின் ஏற்படும் அழுக்குத்தடைகளை போக்குவதற்குப் பயன்படுத்தினார்கள்.

உடலில் ஏற்படும் வீக்கம், ரத்தக்குறைவு, காமாலை போன்றவற்றைப் போக்குவதோடு, மாதவிடாயை ஒழுங்குபடுத்தும் தன்மையும் நாயுருவிக்கு உண்டு.

நாயுருவி இலைச்சாற்றை அருந்திவந்தால், வயிற்று வலி நீங்கும். சொறி ஏற்பட்ட இடங்களில் தடவிவர குணம் கிடைக்கும்.

இதன் இலைகளை வெல்லத்தோடு சேர்த்து அரைத்தோ அல்லது மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தோ சாப்பிட்டுவர, காய்ச்சல் குணமாகும்.

சிறு பூச்சிக்கடிகளால் ஏற்படும் நஞ்சை முறிக்க, நாயுருவி இலைகளைத் தண்ணீர்விட்டு அரைத்துப் பூசலாம்.

நாயுருவி வேரை நன்றாகக் கழுவி, சுத்தம்செய்து, காயவைத்து, சிறிதளவு மிளகு சேர்த்து அரைத்துப் பொடித்துவைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட, இருமல் குணம் ஆகும்.

நாயுருவி வேரைச் சுட்டு சாம்பலாக்கி, அதனுடன் 325 மி.கி வெல்லத்தைச் சேர்த்துக் கலந்து சாப்பிட்டுவந்தால், கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

நாயுருவி விதைகளை எடுத்து, அரிசி கழுவிய நீரில் கலந்து உட்கொள்ள மூல நோய் குணமாகும்.

இதன் பச்சை வேரால் பல் துலக்கிவர, பல்லில் உள்ள கறைகள் நீங்கும்.

- பு.விவேக் ஆனந்த்