ஹெல்த்
Published:Updated:

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

துளசி சூப்

தேவையானவை:
துளசி இலைகள் - 1 கப், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் - தலா 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு, மிளகுத் தூள், சீரகத் தூள் - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

ஈஸி 2 குக்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அளவாகத் தண்ணீர் ஊற்றி, அதில் பீன்ஸ், கேரட், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, துளசி இலைகளைச் சேர்த்து வேகவைக்க வேண்டும். இதை வடிகட்டி, நீரைத் தனியாக எடுத்துவைக்க வேண்டும். காய்கறிகளை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். தனியாக எடுத்துவைத்த நீரைக் கொதிக்கவைத்து, அரைத்த விழுதைக் கொட்டி, மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு கலந்து, ஒரு கொதி வந்த உடன் இறக்கிப் பரிமாறலாம்.

பலன்கள்: தொண்டைப்புண், தொற்றுகளைத் தடுக்கும்.வயிற்றுப்புண்கள் குணமாகும். அல்சர் வராமல் காக்கும். இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். சிறுநீரகக் கற்கள் இருப்போர் குடித்துவர,  நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.

வெள்ளைப் பூசணி ஊத்தப்பம்

தேவையானவை:
பச்சரிசி - 2 கப், உளுந்து - 1/2 கப், வெள்ளைப் பூசணி - அரை கிலோ, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசியை இரண்டு மணி நேரமும், உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரமும் ஊறவைத்துத் தனித்தனியே அரைத்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கிவைக்க வேண்டும். அடுத்த நாள், தோசை சுடும் முன்பு, வெள்ளைப் பூசணியைத் தோல், விதை நீக்கி சுத்தம்செய்து, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அரைத்த பூசணி விழுதை, தோசை மாவுடன் சேர்த்துக் கலக்கி, தோசைக்கல்லில் சின்னச்சின்ன ஊத்தப்பங்களாக வார்க்கலாம். 

ஈஸி 2 குக்

குறிப்பு: தேவை எனில், ஊத்தப்பத்தைச் சுற்றிலும் சிறிது எண்ணெய்விட்டுக்கொள்ளலாம். மூடியிட்டு வேகவைக்கவும். இருபக்கமும் திருப்பிப்போடக் கூடாது.

பலன்கள்: நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. மலச்சிக்கலைத் தீர்க்கும். வயிறு, செரிமானப் பிரச்னைகளைப் போக்கும்.

உடல் வெப்பத்தைக் குறைக்க, அடிக்கடி இந்த தோசையைச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

பூசணியைச் சாப்பிட மறுப்போருக்கு, இந்த தோசை சிறந்த மாற்று. ஆரோக்கியமான அரிசி தோசையாக இருப்பதால், அடிக்கடி சாப்பிடலாம்.

-ப்ரீத்தி, படங்கள்: எம்.உசேன்