திருமணம் என்ற சமூக நிறுவனத்தின் புனிதத்தன்மையே, இரு மனங்களை, இரு குடும்பங்களை ஒன்றுசேர்ப்பதும், அதன் மூலம் புதிய புதிய உறவுகளைப் பெருக்குவதும், இணையும் இருவரின் வாழ்க்கைக்கும் புது அர்த்தத்தைக் கொடுப்பதும்தான். அனன்யாவுக்கு அர்ஜுனைப் பார்த்ததுமே காதல். அவளது கண்கள், அர்ஜுனின் கூர்மையான கண்களையே பார்த்துக்கொண்டிருந்தன. அர்ஜுனைத் தவிர்த்து, அந்த அரங்கில் இருந்த அனைவரும் கொஞ்சம் நேரத்துக்கு அவளது பார்வையில் இருந்தே மறைந்துபோய்விட்டனர்.

அர்ஜுன் மிகவும் அழகான, ஃபிட்டான, அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஆண்மகன். 26 வயதான அவன் வெளிநாட்டு வங்கி ஒன்றில் பணியாற்றிவந்தான். ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவன், படிப்பில் ஆர்வம் கொண்டவன். அவன் அழகே, அவன் அணியும் கண்ணாடிதான். எப்போதும், புத்தகமும் கையுமாக இருப்பவன். எதையும் உன்னிப்பாகக் கவனிப்பவன், எந்த ஒரு விஷயத்துக்கும் தன்னை முழுமையாகத் தயார்ப்படுத்திக்கொண்டு வருபவன். எங்கே சென்றாலும் தன் அதீதப் புத்திசாலித்தனம் மற்றும் அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்தத் தயங்க மாட்டான். எந்த வகையிலும் தான் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் விழிப்பாக இருப்பவன். தினசரி காலையில் ஜாகிங் செல்வான். வாரத்துக்கு இரண்டு நாட்கள் தீவிர டென்னிஸ் பயிற்சி செய்வான். அவனது மிகத் தீவிரப் பொழுதுபோக்கே சி.என்.பி.சி உள்ளிட்ட நிதி மற்றும் செய்தி தொடர்பான தொலைக்காட்சிகளைப் பார்ப்பதுதான். அவனது முடிவற்ற அறிவுத்தாகம் அவனை இதுபோன்று டி.வி., இணையம் மற்றும் தொழில் தொடர்பான இதழ்களில் மூழ்கத் தூண்டியது. அவனது இந்த சின்சியாரிட்டி மற்றும் ரிசர்வ்டு சுபாவம் அனன்யாவுக்கு ஆச்சர்யத்தை அளித்து, அவன் பக்கம் ஈர்த்தது.

அனன்யா... கலகலப்பானவள். ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று எப்போதும் மகிழ்ச்சியுடன் துள்ளித் திரிபவள். அவள் வேலைபார்க்கும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் செல்லக் குட்டி. 5 அடி, 7 அங்குல உயரம். தோள்பட்டை வரை வெட்டிவிட்ட முடி, கச்சிதமான உடல்வாகு என அனைவரையும் கவரும் தோற்றம்கொண்டவள். எல்லாவற்றையும் விருப்பத்துடன் செய்யும் தன்மை கொண்டவள். தன் கலகலப்பால், சிரிப்பால் அவள் இருக்கும் இடத்தையே உற்சாக வெள்ளத்தால் நிரப்புவாள்.

சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்வதுடன், மற்றவர்களையும் அந்தச் சூழலுக்கு ஏற்றவர்களாக மாற்றுவதுதான் அனன்யாவின் ஸ்பெஷாலிட்டி. அவளது இந்தத் தன்மைதான் அர்ஜுனை அவளிடம் அழைத்துவந்தது. ‘எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும்’ என்ற பழைய தத்துவத்துக்கு இவர்கள் காதல் ஒரு சிறந்த உதாரணம். அர்ஜுனின் வங்கி பார்ட்டியில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அந்த பார்ட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்தது அனன்யாவின் நிறுவனம்தான். இருவருக்குமே பார்த்ததும் பற்றிக்கொண்டது காதல். பிறகு, ஒரு சுபயோக சுபதினத்தில் காதலர்கள் மணமக்கள் ஆனார்கள். இல்லறம் என்னும் நல்லறம் தொடங்கியது.

ஏன்? எதற்கு? எப்படி?

திருமணம் என்பது ஒரு சமூக நிறுவனம். பெரும்பாலானவர்கள் செய்துகொள்வது. இந்த சமுதாயமும் அதைத்தான் எதிர்பார்க்கிறது. தங்கள் பிள்ளைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் பொறுப்பும் அழுத்தமும் பெற்றோருக்கு ஏற்படுகிறது. தங்கள் மகன் நன்கு படித்து, நல்ல வேலையில் அமர்ந்துவிட்டால்போதும், மருமகளைத் தேட ஆரம்பித்துவிடுகின்றனர். தங்கள் தகுதிக்கு ஏற்ற பெண்ணாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுகிறார்கள். பெண் வீட்டில் நிலைமை வேறு, கொஞ்சம் முன்னதாகவே மாப்பிள்ளை தேட ஆரம்பித்துவிடுகின்றனர். என்னதான் சமூகத்தின் அழுத்தம் இருந்தாலும், குறைந்த வயதில் அதாவது திருமணத்துக்குத் தயார் இல்லாத வயதில் திருமணம் செய்துவைப்பது. தவிர, ஒரு சிலரால், வரதட்சணை உள்ளிட்ட சில பிரச்னைகள் காரணமாகத் திருமணம் செய்ய முடிவது இல்லை.

தங்கள் மகன் அல்லது மகளுக்குத் திருமணம் என்னும் இந்த மிகப் பெரிய நிகழ்வு நடக்க, பெற்றோர்கள் சில வரையறைகளை வைத்திருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கது, தங்கள் இனம், மதம், சாதி, சமூக நிலை, ஜாதகம் போன்றவை பொதுவானவை. பெண் வீடாக இருந்தால், மாப்பிள்ளையாக வரப்போகிறவரின் வருமானம், அவருக்கு உள்ள சொத்துக்கள், திருமணத்துக்குப் பிறகு தனிக்குடித்தனம் செல்வார்களா என்று எல்லாம் பார்க்கப்படும். இதுவே, மாப்பிள்ளை வீடாக இருந்தால், வரப்போகும் மருமகள் எவ்வளவு வரதட்சணை கொண்டுவருவாள், ஒரே பெண்ணா, வேலை பார்க்கிறாளா என்றெல்லாம் பார்க்கப்படும்.

இவை எல்லாம் கூடிவந்தால், அதன் பிறகு திருமணத்துக்கு மண்டபம் புக் செய்ய வேண்டும், திருமண அழைப்பிதழ் டிசைன், யாரை அழைக்க வேண்டும் என்ற பட்டியல், திருமண உணவு மெனு, போட்டோ, வீடியோகிராபர் என்று சில வேலைகள் பெருகும். திருமணம் செய்யப்போகும், ஆண், பெண்ணுக்கோ திருமணம் முடிந்து எங்கே தேன்நிலவு செல்வது, திருமணத்துக்குப் பிறகு மகிழ்ச்சியான வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று இருக்கும். நம் திரைப்படங்கள், நாவல்களில் மகிழ்ச்சியான முடிவாகத் திருமணத்தைக் காட்டுவார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு என்ன ஆனது எனக் காண்பிக்க மாட்டார்கள். உண்மையில் திருமணத்துக்குப் பிறகு எத்தனை தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று பார்த்தோம் என்றால், ஒவ்வொரு தம்பதியினரும் ஏதாவது ஒரு புகாரைச் சொல்வார்கள். இவற்றை எல்லாம் தெரிந்துகொள்ள, முதலில் திருமணம் என்றால் என்ன? திருமணத்தின் வாயிலாக நாம் எதைப் பெறுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

- ரகசியம் பகிர்வோம்!

டவுட் கார்னர்

“திருமணம் என்றால் உண்மையில் என்ன டாக்டர்?”

சி.சரவணன், தஞ்சாவூர்.

“திருமணம் என்பதற்கு உலக அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை ஏதும் இல்லை. மேற்கத்தியக் கலாசாரத்தில், திருமணம் என்பது இரு தனி நபர்களுக்கு இடையே நடப்பது என்று மக்கள் மத்தியில் கருத்து உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில், திருமணம் என்பது ஆண், பெண் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு இடையே புதிய உறவு தோன்றுவதாகக் கருதப்படுகிறது. பொதுவாக, திருமணம் என்பது சமூக மற்றும் சட்டப்படியான ஓர் உடன்படிக்கை. பெரும்பாலான சமூகங்களில், தங்கள் பாலியல் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள, திருமணம்தான் சமூக மற்றும் சட்டரீதியான அனுமதியை அளிக்கிறது. முழுமையாகச் சொல்வது என்றால், திருமணம் என்பது ஆண், பெண் இடையே பாலியல் உறவை ஏற்படுத்தி, தங்களுக்கு என ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி, பாதுகாத்து, தங்கள் சந்ததியை வளர்ப்பதுதான்.”

“ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்... நண்பர்களாகவே இருந்துவிட்டுப் போய்விடலாமே?”

எஸ்.வினோத் குமார், சென்னை.

“உணர்வுரீதியான ஆதரவு, நிதிப் பாதுகாப்பு என, பல்வேறு காரணங்களுக்காகத் திருமணம் செய்துகொள்கின்றனர். சிலர், தங்களது மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்வில் இருந்து தப்பிக்க, அன்புக்காக, சமூகத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகத் திருமணம் செய்துகொள்கின்றனர். இந்தக் காரணம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள்கூட பொருத்தமாக இருக்கும்.

நட்பில் இருவரும் ஒருவிதத் தொடர்பில் இருப்பீர்கள். இருப்பினும், திருமணம் அதையும் தாண்டி ஒரு மேன்மையான நெருக்கத்தை ஏற்படுத்தும். திருமணத்தின் மூலமாகத்தான் தாம்பத்தியத்தில் அன்யோன்யம் கிடைக்கும்.”

“காதல் திருமணம், பெற்றோர் பார்த்துச் செய்துவைக்கும் திருமணம்... இரண்டில் எது சிறந்தது?”

நிஷாந்தினி, சென்னை.

“இரண்டு திருமணங்களிலுமே சாதகபாதகங்கள் உள்ளன. ஏதேனும் ஒன்று சிறந்தது, இன்னொன்று மோசமானது என்று சொல்வதற்கு இல்லை. பிரச்னையை எப்படி இருவரும் கையாள்கின்றனர் என்பதைப் பொறுத்துத்தான் மகிழ்ச்சியான வாழ்க்கையா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.”

“திருமணம்செய்ய ஏற்ற காலம் எது... ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும்?”

எம்.ஜெயந்தி, கோயமுத்தூர்.

“இது அவரவர் உடல் தகுதியைப் பொறுத்தது. ஆண், பெண் இருவரும் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராகிவிட்டால், திருமணம் செய்துகொள்ளலாம். இருப்பினும், நம் நாட்டில் திருமண வயது தொடர்பான சட்டம் உள்ளது. இதன்படி, பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியடைந்தால், திருமணத்துக்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகின்றனர்.

ஆண், பெண்ணுக்கு இடையே இவ்வளவு வயது இடைவெளி இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. நடைமுறை வாழ்க்கைச் சூழல் அடிப்படையில், மணமகனைக் காட்டிலும், மணமகளுக்கு இரண்டு முதல் ஐந்து வயது குறைவாக இருக்கலாம். இது, அவர்களது மனமுதிர்ச்சிக்காகவும், பெண்ணின் இனப்பெருக்க காலம் ஆணைவிட மிகக் குறைவானது என்பதாலும் இருக்கலாம்.”

“என் மாமா பெண்ணை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். இது சரியா?”

பிரதாப், பெங்களூரு.

“மருத்துவ அடிப்படையில் நெருங்கிய ரத்தவழிச் சொந்தத்துக்குள் திருமணம்செய்வது பரிந்துரைக்கப்படுவது இல்லை. இதற்குக் காரணம், இந்தத் தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிறவிக்குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதுதான். இதுதவிர, மரபியல்ரீதியான சில நோய்கள் இந்தக் குழந்தைகளுக்கு வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.”

“திருமண வாழ்வில் செக்ஸ் என்பது மிகவும் முக்கியமான விஷயமா?”

அனிதா, சென்னை.

“ஆம். திருமண வாழ்வை மகிழ்ச்சியுடையதாக மாற்றுவதில் செக்ஸ் மிக முக்கியப் பங்குவகிக்கிறது. அதேநேரத்தில், வெறும் பாலியல் உறவு மட்டுமே திருமண வாழ்வு இல்லை. செக்ஸ் தொடர்பான பிரச்னைகள், திருப்திப்படுத்த முடியாத தன்மை போன்ற காரணங்கள் மிகவும் அன்புமிக்க பல தம்பதிகளின் உறவையே கெடுத்துவிடுகிறது.”