ஹெல்த்
Published:Updated:

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

ணவு என்று வரும்போது, 40- 50 வயதைக் கடந்தவர்களில் பலரும் சொல்லும் டயலாக் ‘எங்க அம்மா சமையல் எப்படி இருக்கும் தெரியுமா?’ என்பதுதான்.  அதெப்படி அவர்கள் அம்மா சமையலுக்கு மட்டும் அவ்வளவு சுவை இருந்தது தெரியுமா? வெறும் சமைக்கும் பக்குவம் மட்டும் அல்ல. இயற்கையோடு கலந்து, இயற்கைமுறையில் விளைந்த பொருட்களைக்கொண்டு, விறகு அடுப்பு, மண்பாண்டத்தில் சமைத்ததுதான் காரணம். “அப்போது எல்லாம் தயிர் சீக்கிரம் புளிக்காது, வருடக்கணக்கில் உப்பை மண் குடுவைகளில் சேமித்துவைத்திருப்போம், ஒன்றுமே ஆகாது” என்பார்கள்.  சுவை, சத்து, மணம் ஆகியவை மண்பாண்டங்களில் பாதுகாக்கப்படும்.

மாக்கல் சட்டி - ரூ400-775/-

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

சோப் ஸ்டோன் எனும் கல்லில் செய்யப்படும் பாத்திரம் இது. சமைக்கச் சமைக்க, கல்லின் நிறம் கறுப்பாகிவிடும். வத்தக்குழம்பு, மீன் குழம்பு உள்ளிட்டவற்றை இந்தப் பாத்திரத்தில் செய்தால், சுவை பிரமாதமாக இருக்கும் என்பார்கள். நேற்று வைத்த மீன் குழம்பின் சுவையை அறிந்தவர்களுக்குத் தெரியும் இந்த மாக்கல் சட்டியின் அருமை.

டெரகோட்டா தண்ணீர் குடுவை - ரூ450/-

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக அழகிய, உறுதியான டெரகோட்டா தண்ணீர் குடுவையைப் பயன்படுத்தலாம். மண் பானை வைத்திருக்க முடியாதவர்களுக்கு, சிறந்த மாற்று இது. நீர், இயற்கையான முறையில் குளிர்ச்சியாக இருக்கும்.

தயிர் கிண்ணம் - ரூ390/-

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

பிளாஸ்டிக், ஸ்டீல் பாத்திரங்களில் தயிரை உறை ஊற்றினால் சீக்கிரம் புளித்துவிடும். மண்பாண்டத்தில் தயிரைவைத்தால், வெகு நேரம் அதன் சுவை அப்படியே பாதுகாக்கப்படும்.

மாக்கல் தவா - ரூ550/-

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

தோசையின் சுவை, வெறும் மாவில் இருந்து மட்டும் அல்ல. அது சுடப்படும் கல்லில் இருந்தும் வருகிறது. மாக்கல் தவாவில் தோசை செய்திட, ஸ்மோக்கி ஃபிளேவருடன், மிருதுவான பக்குவத்தில் தோசைகள் கிடைக்கும்.

மாக்கல் பணியாரம் மேக்கர் - ரூ600/-

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

ஒட்டவே ஒட்டாது என்பதால், நான் ஸ்டிக்களைப் பயன்படுத்துகிறோம். உண்மையில், அது உடலுக்குக் கேடும்கூட. அதற்குப் பதில், மாக்கல் பணியாரம் மேக்கர் பயன்படுத்தலாம். இதில், சிறிது எண்ணெய் விட்டுச் செய்யும் பணியாரங்களில் சத்துக்களும் சுவையும் சேர்ந்து கிடைக்கும்.

வேப்ப மர குக்கிங் சர்வ் - ரூ120/-

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

குழம்பு, காய்கறி, கூட்டு போன்ற சமையல் பதார்த்தங்களில், இனி மற்ற உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து, இந்த ஆர்கானிக் சர்வ் கரண்டிகளைப் பயன்படுத்தலாம். பயன்படுத்த, கழுவ, சுத்தம்செய்ய, பாதுகாக்க எளிமையானது.

மைக்ரோவேவ் கிண்ணம் - ரூ475/-

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

மைக்ரோவேவ் அவனில் பிளாஸ்டிக்கைத்தான் பயன்படுத்துவார்கள். பிளாஸ்டிக் பாத்திரம் சூடாகும்போது அதன் ரசாயனம் உணவில் சேரும். இந்த மண் கிண்ணத்தில் சமைத்திட, பிளாஸ்டிக் நச்சுக்களில் இருந்துத் தப்பிக்கலாம். ஆரோக்கியம் காக்கப்படும்.

வேம்ப மரக் கரண்டி - ரூ150/-

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

‘வேப்ப மரக் குச்சிகளில் பல் தேய்ப்பது நல்லது’ என்று தெரியும். அதுபோல், வேப்ப மரத்தால் செய்யப்படும் இந்தக் கரண்டியும் உடலுக்கு நல்லதுதான். ஒவ்வொரு சமையலிலும் வேம்பின் நலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

மர ஸ்பூன், ஃபோர்க் - தலா ரூ40/-

ஹெல்த்தி கிச்சன் ஷாப்பிங்

ஷீஷாம் மரத்தால் செய்யப்படும் ஸ்பூன், ஃபோர்க். சூப், ஜூஸ், சாலட் போன்ற உணவுகளைச் சாப்பிட நன்றாக இருக்கும். ஊறுகாய் போன்ற உணவுகளில் போட்டு வைத்தால், சாதாரண ஸ்பூனில் ஏற்படும் பூஞ்சைகள் இதில் உருவாகாது. கழுவ, பாதுகாத்துவைக்கச் சுலபம்.

- மினு,   படங்கள்: எம்.உசேன்

உதவி: தீ இண்டஸ் வேலி, மௌலிவாக்கம், சென்னை