சில குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும். “ரொம்ப அடம், வீட்டையே ரெண்டாக்குறான்” எனச் சில பெற்றோர் புலம்பித்தள்ளுவார்கள். சிலரோ, “நல்லா படிக்கிறான். ஆனால், எக்ஸாம்ல எல்லாத்தையும் மறந்திடறான்” என்பார்கள். இதற்கும் தீர்வுகளை அளிக்கிறது முத்திரை. குழந்தைகளுக்கான சிறப்பு முத்திரைகளைப் பற்றிப் பார்ப்போம்.

சின் முத்திரை

ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் செய்யலாம். நேரமும் கணக்கில்லை.

பலன்கள்: நினைவுத்திறன் அதிகரிக்கும். திருத்தமாகப் பேசவும் பாடவும் உதவும். ஹைப்பர்ஆக்டிவிட்டி குழந்தைகள்கூட அமைதியாக மாறுவர். வயிற்று வலி, வாயுத் தொந்தரவு, பசியின்மை உள்ளிட்ட பிரச்னைகளைப் போக்கும்.

மான் முத்திரை

கட்டை விரல் நுனியை, நடுவிரல் மற்றும் மோதிர விரலின் முதல் ரேகை மேல் அழுத்த வேண்டும். ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரல் நீட்டி இருக்கட்டும். இரண்டு கைகளிலும் 5-20 நிமிடங்கள் வரை செய்யலாம். இரண்டு வயதுக் குழந்தைகளுக்குக்கூட விளையாட்டுக் காண்பிப்பது போல சொல்லித்தரலாம்.

பலன்கள்: அடம்பிடிக்கும், ஆத்திரப்படும் குழந்தைகளை மென்மையாக்கும். வன்முறை குணங்கள் படிப்படியாகக் குறைவதைக் காண முடியும். வலிப்பு ஏற்படும் குழந்தைகள் தொடர்ச்சியாகச் செய்துவந்தால், வலிப்பு வராமல் தடுக்க முடியும்.

பிராண முத்திரை

மோதிரவிரல், சுண்டுவிரல், கட்டைவிரலின் நுனிகள் தொட்டுக்கொண்டிருக்க, மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும். தினமும் 20-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள்: அதிகமாக டி.வி, மொபைல் கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் கட்டாயமாகச் செய்ய வேண்டிய முத்திரை இது. கண்களின் சோர்வை நீக்கும். பார்வைத்திறன் மேம்படும். தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்துவந்தால், பார்வைத்திறன் அதிகரிப்பதை உணரலாம்.

லிங்க முத்திரை

இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோத்துக்கொள்ள வேண்டும். ஒரு கை கட்டை விரலை மட்டும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

பெண்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டை விரலை உயர்த்த வேண்டும்.

ஆண்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.

பலன்கள்: அதிகமான சளி, நெஞ்சுச் சளி வெளியே வர, லிங்க முத்திரை உதவும். சளித் தொந்தரவு இருக்கும்போதும், குளிர் காலத்திலும் செய்யலாம். இந்த முத்திரையை 5-10 நிமிடங்கள் செய்ய, பாதிப்பு நீங்கும்.

- ப்ரீத்தி

படங்கள்: எம்.உசேன், மா.பி.சித்தார்த்