Published:Updated:

நோய் நாடி..! - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

நோய் நாடி..!  - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
நோய் நாடி..! - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு

நோய் நாடி..! - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு

Published:Updated:
நோய் நாடி..!  - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
நோய் நாடி..! - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?
நோய் நாடி..!  - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

லைவலி...  இன்று பள்ளிக் குழந்தைகளையேகூட படுத்தும் பிரச்னை இது. ஒருவருக்கு வயதும் வேலையும் அதிகமாக ஆக, அவ்வப்போது வரும் தலைவலியில் இருந்து நிரந்தரப் பிரச்னையாகவே தங்கிவிட்ட தலைவலி வரை அவரது வாழ்க்கை முறையில் அது ஓர் அங்கமாக இணைந்துவிடுகிறது. நோய்களைப் பற்றிய வெளிச்சம் தந்துவரும் ‘நோய் நாடி’ தொடரில், வயது வித்தியாசமின்றி அனை வரையும் வாட்டக் கூடிய தலைவலி பற்றிய மருத்துவத் தகவல்களைத் தருகிறார், இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) வளாக மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர் தமிழ்மணி.

தலைவலி... காரணங்கள்!

தலைவலியானது தன் இயல்பில் ஒருவருக்கு ஒருவர் வேறுபடக்கூடும். சிலருக்கு அவர்களின் அப்போதைய செயல்பாடுகள் மூலமாக வந்த தற்காலிக, சாதாரண தலைவலியாக இருக்கலாம். சிலருக்கு தலையின் ஒரு பக்கமாக வலிக்கும். சிலருக்கு தலை பாரமாக இருக்கும். சிலருக்கு சுத்தியல்கொண்டு அடிப்பதுபோல இருக்கும். சிலருக்கு தலையைப் பிய்த்து எறிந்துவிடலாம்போல கொடுமையான வலியாக இருக்கும். சிலருக்கு அன்றாட வேலைகளைச் செய்யமுடியாத அளவுக்கு உடல் இயக்கத்தையே பாதிப்பதாக இருக்கும். பசியின்மை, சுவாசப் பிரச்னை, மூக்கில் நீர் கோப்பது என சிலரைப் படுத்தும். இப்படி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, ஏதேனும் ஒரு வகை தலைவலியால் பாதிக்கப் படுகிறார்கள். ஒவ்வொரு வருக்கும் அது ஏற்படுவதற்கான காரணம் வேறுபடுகிறது.

குழந்தைகளைப் பொறுத்த வரை, கண்பார்வைக் குறைபாடு, துரித உணவு உள்ளிட்ட உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் அல்லது செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றால் தலைவலி ஏற்படலாம். பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகள், தங்களின் சோர்வு, கோபம், வெறுப்பு, களைப்பு, ஓய்வின்மை போன்றவற்றாலும் தலைவலிக்கு உள்ளாகலாம்.

நோய் நாடி..!  - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பருவ வயதினர் மற்றும் இளம் வயதினர்... சைனஸ் பிரச்னை, மனஅழுத்தம், `ஏ.சி’யில் அதிக நேரம் இருப்பது, தொடர் பணிச்சுமை போன்ற காரணங்களால் தலைவலியால் பாதிக்கப்படலாம்.

முதியவர்களுக்கு, சைனஸ் பிரச்னை, பார்வைக் குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவை தலைவலிக்கான காரணமாக அமையலாம்.

அறிகுறிகள் அறிந்தால்... என்ன செய்ய வேண்டும்?

* மூக்கில் நீர் வடிதல்

* மூக்கின் உட்புறமாக தொண்டைக்குள் நீர் வடிதல்

* வறட்டு இருமல்

* சளி கலந்த இருமல்

* படிக்கும்போது, பயணத்தின் போது தலை வலிப்பது

* வாந்தி உணர்வு

* கண் எரிச்சல்

* அன்றாட செயல்பாட்டில் தொய்வு

* தூக்கமின்மை

* பார்வை மங்குவது

* ஒருபக்கம் தலை வலிப்பது

* அடிக்கடி கோபப்படுவது

நோய் நாடி..!  - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

மேற்கண்ட அறிகுறிகள், தலைவலிக்கானவை. அதில் ஏதோ ஒன்று ஒருமுறை ஏற்பட்டால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதை மாற்றியமைத்துக்கொள்ளும் வாழ்க்கை முறையால் எளிமையாக சரிசெய்து கொள்ளலாம். உதாரணமாக, வீட்டுக் கணினியில் புதுப்படம் ஒன்றை சி.டி-யில் கண்ட நாளில் ஏற்படும் கண் எரிச்சல், அதைத் தொடர்ந்துவரும் தலைவலிக்கு, அந்த கணினி திரையின் ஒளிஉமிழ்வுதான் காரணம் என்பதைப் புரிந்துகொண்டு, வருங்காலத்தில் அவ்வாறு படம் பார்ப்பதைத் தவிர்க்கலாம்.

ஒருவேளை காரணத்தைக் கண்டறிய முடியாமல் போனாலோ அல்லது அடிக்கடி இந்த அறிகுறிகள் தென்பட்டாலோ, முதலில் குடும்ப மருத்துவர் அல்லது பொதுமருத்துவரின் ஆலோசனை பெற்று, அவர் வழிகாட்டுதலின்படி இ.என்.டி அல்லது கண் மருத்துவரை அணுக வேண்டும். தலைவலி பிரச்னையைப் பொறுத்தவரை, காரணத்தை துல்லியமாக அறிய கால அவகாசம் தேவைப்படும் என்பதால், உடனடி தீர்வு எதிர்பார்க்காமல் மருத்துவருக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.

சோதனைகளும் சிகிச்சைகளும்!

1. கண் குறைபாடு:
கண் குறைபாடு சோதனை முறைகள் மூலமாக ரிஃப்ராக்டிவ் எர்ரர் (Refractive error), கண் அழுத்தம் போன்றவற்றைக் கண்டறியலாம். பார்வைக் குறைபாடு பிரச்னை, சரியான பவரில் கண்ணாடி அணிவதன் மூலம் சரிசெய்யப்படும்.

2. சைனஸ்: எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், நாசல் எண்டோஸ்கோப்பி (Nasal endoscopy) போன்றவற்றின் மூலம் சைனஸ் பிரச்னையைக் கண்டறியலாம்.  இ.என்.டி சார்ந்த பிரச்னைகளுக்கு மருத்துவ சிகிச்சையும், அது பலனளிக்காத சிலருக்கு மட்டும் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

3. செரிமானப் பிரச்னை:
மேல் வயிற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் `அப்பர் ஜி.ஐ எண்டோஸ்கோப்பி’ (Upper GI Endoscopy) சோதனை மூலமாக செரிமானப் பிரச்னைகளைக் கண்டறியலாம். இதற்கும் மருத்துவ சிகிச்சையின் மூலம் தீர்வு பெறலாம்.

4. மனஅழுத்தம்:
பெரும்பாலானவர் களின் தலைவலிக்கு இன்று மன அழுத்தம் முக்கியக் காரணமாக அமைகிறது. தேவையைப்பொறுத்து... மனநல ஆலோசகரிடமோ, மனநல மருத்துவரிடமோ தாமதிக்காமல் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

நோய் நாடி..!  - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

5. சர்க்கரை நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்படும் தலைவலியை, தாங்கள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் தவிர்க்கலாம். இயற்கை முறையில் யோகா, தியானம் போன்ற தீர்வுகளையும் நாடலாம்.

தலைவலி... முக்கிய தகவல்கள்!


* புருவத்துக்கு மத்தியில் தலைவலி வருவது போன்று தோன்றினால் அடுத்த 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்துக்குள் தலைவலி வரக்கூடும்.

* தலைவலி ஏற்பட்டால் டீ, காபிதான் அருந்த வேண்டும் என்பதில்லை, சிறிது வெந்நீர் அருந்துவது நல்லது. சூடான அந்த திரவத்தால் சுவாசம் நேர்செய்யப்படுவதோடு, செரிமானம் சார்ந்த பிரச்னைகளும் சரிசெய்யப்படும்.

* தலைவலி சமயத்திலும், தலைவலி வருவது போல் தோன்றும் சமயத்திலும் எண்ணெய் உணவுகள், துரித உணவுகளைத் தவிர்த்துவிடவும்.

நோய் நாடி..!  - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

* 40 - 50 வயதுடையவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்துக்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது பிரச்னைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள பெரிதும் உதவும்.

* சர்க்கரை நோயாளர்கள், தலை வலிக்கும் சமயங்களில் சர்க்கரை அளவின் மாற்றத்தை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும்.

* சைனஸ், ஒரு பக்க தலைவலியால் அவதிப் படுபவர்கள் தலைகுளித்த உடன் கேசத்தை ஈரமின்றி நன்றாக உலர்த்திவிட்டு, வெறும் வெந்நீரில் 5 நிமிடம் ஆவிபிடிப்பது 50% பிரச்னையைத் தவிர்க்க உதவும். 

* குழந்தைகள் ஐஸ்க்ரீம், சாக்லேட், இனிப்பு போன்றவற்றைச் சாப்பிட்ட அடுத்த 5 நிமிடங்களுக்குள் அவர்களை ஒரு கப் வெந்நீர் அருந்தச் செய்வதன் மூலம், அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை 50% தவிர்க்க முடியும்.

* வாயில் உள்ள எச்சில் மூலமாக ஆரம்பமாகும் உணவு செரிமானம் வயிற்றில் முடிவடைகிறது என்பதால், உணவினை நன்றாக மென்று எச்சில் கலந்து சாப்பிடும்போது, செரிமானப் பிரச்னைகள் முற்றிலும் தவிர்க்கப்படும். 

* சாப்பிட்டதும் படுப்பது, படுத்துக்கொண்டே சாப்பிடுவது போன்றவை எல்லாம் தவறான பழக்கங்கள். மாலை 6 மணிக்கு மேல் பால் சார்ந்த உணவுப் பொருட்களை முடிந்தவரை தவிர்த்தல் நலம். இரவு நேரம் பணிபுரிபவர்கள் அல்லது அந்நேரத்தில் உடல் இயக்கத்தில் இருப்பவர்கள் டீ அருந்தலாம்.

* தயிர், கீரை இரண்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது செரிமானப் பிரச்னை ஏற்படும் என்பதால் தவிர்க்கவும். தலைவலி பாதிப்பு உள்ளவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட நீர்காய்கறிகளையும் தவிர்த்தல் நல்லது.
 தலைவலி மாத்திரைகள் தொடங்கி பாம்கள் வரை, சுயமருத்துவம் கூடவே கூடாது.

நோய் நாடி..!  - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

``அட்டை அட்டையாக தலைவலி மாத்திரைகள் வாங்கிவைத்துச் சாப்பிட் டால், அந்நேரம் நிவாரணம் கிடைத்தாலும் உள்ளுக்குள் பிரச்னை வளர்ந்து கொண்டே தான் இருக்கும். எனவே, சுய மருத்துவம் தவிர்த்து, தாமதிக் காமல் மருத்துவர் ஆலோசனை, பரிசோதனை, சிகிச்சை என்று சரிசெய்ய வேண்டிய பிரச்னை இது. அசட்டையாக இருந்தால், தாங்க முடியாத நோயான தலைவலி, வாழ்நாள் பரிசாகிவிடும்’’ என்ற டாக்டர் தமிழ்மணியின் வார்த்தைகள், ஆரோக்கிய பாதிப்பு ஏற்படு வதைத் தவிர்ப்பதற்கான எச்சரிக்கை மணி!

 சா.வடிவரசு 

சைனஸ் பிரச்னை என்றால் என்ன?!

மூக்குத்தண்டு வளைவுப் பிரச்னை, இளம் வயதினரில் 100-ல் 70 பேருக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மூக்கில் சுவாசம் தடைபட்டு மூச்சுத்திணறல், தொண்டை சதை வளர்ச்சி போன்ற பிரச்னைகள் உருவாகக்கூடும். மூக்கில் உள்ள காற்றுப்பையில் (சைனஸ்) காற்று தடைபடுவதே, சைனஸ் பிரச்னை. இது சிலருக்கு பிறவியிலேயே இருக்கும். சிலருக்கு மூக்கை நீவுவது, அடிபடுவது, கீழே விழுவது, குத்துச் சண்டையில் ஈடுபடுவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இந்த பிரச்னை உள்ளவர்களில் வெறும் 30% பேர் மட்டுமே சிகிச்சைக்கு வருகிறார்கள். அதில் 20% பேருக்கு மாத்திரை, மருந்து சிகிச்சைகளில் நோய் சரியாகிவிடுகிறது. மீதமுள்ள 10% பேருக்கு எளிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

பெண்களும் தலைவலியும்!


பெண்களுக்கு, அடர்த்தியான கேசத்தில் ஏ.சி காற்று படும்போது கூடுதல் பாதிப்பு உண்டாவது, அலுவலகம், வீடு என காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் வரை அழுத்தும் தொடர் வேலைகள், மனஅழுத்தம், ஓய்வின்மை, போதிய உணவு உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் தலைவலி வரக்கூடும். மாதவிடாய், குறிப்பாக சீரற்ற மாதவிடாய், போதிய உணவு

நோய் நாடி..!  - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

எடுத்துக்கொள்ளாதது, அதிகமாக உணவு உண்பது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது, ரத்த சோகை போன்றவற்றாலும் தலைவலி ஏற்படக்கூடும். காரணத்தை தாமதிக்காமல் கண்டறிந்து, அதன் வேர் பிரச்னையை சரிசெய்ய வேண்டும்.

தலைவலியைச் சந்திக்காமல் இருக்க..!


* காலை நேரத்தில் தினமும் 45 நிமிட உடற்பயிற்சி/நடைப்பயிற்சி செய்யவும்.

* உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்கவும்.

* உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எலெக்ட்ரானிக் திரைகளை (டி.வி, கணினி, அலைபேசி) பார்ப்பதைத் தவிர்க்கவும்.  

* வாரத்தில் இரண்டு நாட்கள் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது.

* சாப்பிடாமல் பயணிப்பதைத் தவிர்க்கவும்.

* கூடுதல் கலோரி கொடுக்கும் துரித உணவு, இனிப்பு, எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கவும்.

* ஆரோக்கியமான, சரிவிகித உணவையே எப்போதும் எடுத்துக்கொள்ளவும்.

* எக்காரணம்கொண்டும் காலை உணவைத் தவிர்க்காததுடன், நேரத்துக்குத் தவறாமல் அளவான உணவு எடுத்துக்கொள்ளவும் (காலை உணவு: 7.30 - 8.30, மதிய உணவு: 12.30 - 1.30, இரவு உணவு: 7.30 - 8.30)

குறிப்பு: முடிந்தவரை காபி, டீ அருந்துவதைத் தவிர்க்கவும். காலை ஒரு காபி, மாலை ஒரு டீ என்பதற்கு மேல் வேண்டாம். இரவில் மிதமான உணவு எடுத்துக்கொள்ளவும். உண்ட பின் இரண்டரை மணி நேரம் கழித்து உறங்கச் செல்லவும். மாலை 4.30 - 5.00 நேர வாக்கில் காய்கறி/கீரை/சுண்டல் என எடுத்துக்கொள்ளலாம்.

மூன்றும் பிணைந்தவை!

நோய் நாடி..!  - வாட்டியெடுக்கும் தலைவலி... வராமல் தடுப்பது எப்படி?

இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதில் ஒருவருக்கு எது ஒன்று இருப்பதாகக் கண்டறியப்பட்டாலும், கூடவே மற்ற இரண்டும் இருக்கக்கூடும். தலைவலியை உண்டாக்கக்கூடிய இந்த மூன்று பிணி களிலும் கூடுதல் அக்கறையோடு இருந்து தற்காத்துக்கொள்ளவது மிக முக்கியம்.