கருத்தரித்தல் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான தருணம். அந்தக் கருவை ஆரோக்கியமாக்கி நல்லதொரு சிசுவாய் நம் கைகளில் தவழச்செய்ய மருத்துவர்கள் நம்புவது எது தெரியுமா? ஃபோலிக் அமிலச்சத்து மாத்திரைகளைத்தான். கர்ப்பிணிகளுக்கு மட்டும் அல்ல கருத்தரிப்பதற்குத் தயாராகும் பெண்களுக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன இந்த மாத்திரைகள்.சிசுவின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கும் முக்கிய உறுப்புக்களின் ஆரோக்கியமான உருவாக்கத்துக்கும் ஃபோலிக் அமிலம் மிகமிக அவசியம். ஆனால், இதுபற்றிய விழிப்புஉணர்வு தம்பதிகள் மத்தியில் மிகக் குறைவாகவே உள்ளது. குழந்தையின் எதிர்காலம் என்பது அதன், மூளை வளர்ச்சியில்தான் இருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவி, குழந்தைக்கு மூளை, முதுகுத் தண்டுவடம் தொடர்பான பிரச்னை வராமல் காக்க, ஃபோலிக் அமிலம் மிகமிக அவசியம்.

கருவின் நண்பன்

பி காம்ப்ளெக்ஸ் (பி9) குடும்பத்தைச் சேர்ந்த நீரில் கரையக்கூடிய வைட்டமின்தான் ஃபோலிக் அமிலம். இயற்கையில் பச்சைக் காய்கறி, கீரை வகைகள், பருப்பு, முழு தானியங்களில் ஃபோலேட்டாக இது நமக்குக் கிடைக்கிறது. வைட்டமின் பி12 உடன் இணைந்து, புதிய ரத்த செல்கள் உற்பத்திக்கு ஃபோலிக் அமிலம் உதவுகிறது. எனவே, ஃபோலிக் அமிலம் குறையும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. ஆர்.என்.ஏ, டி.என்.ஏ என மரபியல் அளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க ஃபோலிக் அமிலம் மிகமிக அவசியம்.

நீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், இதை நம் உடலால் சேகரித்துவைக்க முடியாது. எனவே, தினசரி உணவின் மூலமாகவோ, சத்து மாத்திரையாகவோ எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கர்ப்ப காலத்தில் இதன் பயன் இன்னும் அதிகம். முதல் ட்ரைமெஸ்டர் எனப்படும் முதல் மூன்று மாத காலத்தில் குழந்தையின் முக்கிய உடல் உறுப்புக்கள் உருவாகும். இந்தக் காலத்தில், ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்வது குழந்தைக்குப் பிறவிக்குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. கருக் கலைதலைத் தடுத்து, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

முதல் மூன்று மாதங்களில்தான், சிசுவின் முதுகெலும்பு, முதுகுத் தண்டுவடம் மற்றும் தண்டுவடத்தின் உள் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, மண்டை ஓட்டு எலும்பு வளர்ச்சி நடக்கின்றன. இந்த அத்தனைச் செயல்பாடுகளும் சிறப்பாக நடைபெற ஃபோலிக் அமிலம் பெரிதும் அவசியம்.

கருவில் இருக்கும் குழந்தையின் மூளையைச் சுற்றிலும், ஆரம்ப மாதங்களில் மண்டை ஓடு வளராமல் இருக்கும். ஃபோலிக் ஆசிட், தாய் மூலமாகக் கருவுக்குக் கிடைப்பதன் மூலம், அந்த எலும்புகள் விரைவாக வளர்ச்சி அடையும். அதோடு, மூளையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

கருவுக்கு இத்தகைய உதவிகளைச் செய்வதால், ‘கருவின் நண்பன்’ என்றே இந்த ஃபோலிக் ஆசிட்டைச் சொல்லலாம். எனவே, கர்ப்பிணிகள் தவிர்க்காமல் மாத்திரை மூலமாக ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எப்போதிருந்து சாப்பிட வேண்டும்?

20 வயதைக் கடந்த உடனே அல்லது திருமணப் பருவத்துக்கு வரும்போதே பெண்கள் ஃபோலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஃபோலிக் அமிலச் சத்துக்கள் நிறைந்த உணவை அடிக்கடி சாப்பிடலாம்.

இதனால், அவர்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும். கரு உருவாகியும் சிலருக்கு, முதல் மூன்று மாதங்கள் வரையிலும்கூட தெரியாமல் இருக்கும். கரு உருவான அந்தக் காலகட்டத்தில் கரு வளரத் தொடங்கியிருக்கும். அந்தச் சமயத்தில் ஃபோலிக் அமிலத்தின் தேவை அதிகம் இருக்கும். ஆனால், போதிய விழிப்புஉணர்வு இல்லாததால், பெண்கள் இதனைச் சாப்பிடாமல் இருப்பார்கள். குறைப்பிரசவம், மூளை வளர்ச்சியின்றி குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இது முக்கியக் காரணம்.

ஆண்களுக்கும் அவசியமா?

ஆண், பெண் இருபாலருக்குமே அவசியமானது ஃபோலிக் அமிலம். செல்களில் டி.என்.ஏ, மற்றும் ஆர்.என்.ஏ, வளர்ச்சிக்கு இதுவே உறுதுணையாக இருக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால், பக்கவாதம் உள்ளிட்டவை தவிர்க்கப்படுகிறது.

சமீபகால ஆராய்ச்சிகளில் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும், ஞாபகசக்தியுடன் இருக்கவும் இந்த சத்துக்கள் உதவி செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தவிர, செல்கள் விரைவில் மூப்படைவதையும் தடுக்கிறது. சிலருக்கு, சிறிய வயதிலேயே முதியவர் போன்ற தோற்றம் இருக்கும். ஃபோலிக் ஆசிட் சத்துக்களை எடுத்துக்கொண்டால், இந்தக் குறைபாடு தவிர்க்கப்படும்.

இதய நோய்க்கு இதமான மருந்து!

இதயம் நலமாக இருக்க உதவி செய்வதும் இந்த ஃபோலிக் அமில மாத்திரைகள்தான். இதயம் சரியாக வேலை செய்ய, மாரடைப்பு வராமல் தவிர்க்கவும் இது உதவி செய்கிறது.

‘ஹோமோசிஸ்டெய்ன்’ (Homocysteine) என்னும் வேதிப்பொருள் உடலில் அதிகம் சுரப்பதே மாரடைப்புக்குக் காரணம். ஃபோலிக் ஆசிட் இந்த வேதிப்பொருளை, ‘மெத்தியோனைன்’ (Methionine) என்னும் வேதிப்பொருளாக மாற்றிவிடும். எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவது பெருமளவு தவிர்க்கப்படுகிறது.

எனவேதான், இதய நோய்க்கான மருந்துகள், பைபாஸ் உள்ளிட்ட அறுவைசிகிச்சைகள் செய்துகொண்டோருக்குத் தரப்படும் மருந்து, மாத்திரைகளில், இந்த சத்து முக்கிய மூலக்கூறாகச் சேர்க்கப்படுகிறது.

40 வயதைத் தாண்டிய ஆண்கள், இதய நோய் வராமல் தவிர்க்க, மருத்துவர்களின் ஆலோசனையுடன் இதனை மாத்திரையாக எடுத்துக்கொண்டு வரும் முன் காக்கலாம்.

- ப்ரீத்தி

யாருக்கு ஃபோலிக் அமிலம் தேவை?

அனைவருக்கும் ஃபோலிக் அமிலம் அவசியம். கருத்தரிக்கத் திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும், மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தே தினசரி ஃபோலிக் அமில மாத்திரை எடுத்துக்கொள்வது நல்லது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு அவசியம்.

வலிப்பு நோயாளிகள், டைப் 2 சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், கல்லீரல் நோயாளிகள், குடிநோயாளிகள் ஆகியோருக்கும் அவசியமான சத்து இது.

ஃபோலிக் அமில உணவுகள்

பச்சை நிறக் காய்கறிகள், கீரை உள்ளிட்டவற்றைச் சாப்பிடுவதன் மூலம் ஃபோலிக் அமிலத்தைப் பெற முடியும்.

முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பாலக்கீரையைச் சாப்பிடுவதால், அதிகப் பலன் பெற முடியும்.

பால், முட்டையின் மஞ்சள் கரு, அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடலாம்.

கர்ப்பிணிகள் ஃபோலிக் சத்து நிறைந்த உணவை உட்கொண்டாலும், ஃபோலிக் அமில மாத்திரையைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.