Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்
கன்சல்ட்டிங் ரூம்

கே.ராதாமணி, மயிலாடுதுறை.

“என் வயது 30. எனக்குக் கடந்த ஆறு மாதங்களாக அடிக்கடி வாய்ப்புண் ஏற்படுகிறது. உதட்டின் உட்புறம், வாயின் மேல் அன்னம், நாக்கின் கீழ்ப்பகுதி, ஈறுகள் ஆகிய பகுதிகளில் புண்கள் தோன்றுகின்றன. பிறகு, இரண்டொரு நாட்களில் சரியாகிவிடுகின்றன. வாய்ப்புண் அடிக்கடி ஏன் ஏற்படுகிறது? இதற்கு என்ன தீர்வு?”

டாக்டர் பி.செந்தில்நாதன்

ஜீரணமண்டல அறுவைசிகிச்சை நிபுணர், கோவை.

கன்சல்ட்டிங் ரூம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



“தொடர்ச்சியாகப் புண் இருக்கிறது என்றால், ஏதேனும் நோய்த்தொற்றாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு விட்டு விட்டு வருவதால் வேறு காரணங்களால் வந்திருக்கலாம். பொதுவாக, வாய்ப்புண் ஏற்படுவதற்கு, மனஅழுத்தம், தூக்கமின்மை, துத்தநாகம், பி12, இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுகள் எனப் பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு, பற்கள் கூர்மையாக இருக்கும். அது நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் பட்டு புண்களை ஏற்படுத்தலாம். எதுக்களிப்பு (Reflections of acid) காரணமாகவும் வாய்ப்புண் ஏற்படலாம். எலுமிச்சை, அன்னாசி போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் எடுத்துக்கொள்வதுகூட வாய்ப்புண்களுக்குக் காரணமாகிறது. எனவே, எதனால் புண் ஏற்படுகிறது எனக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை பெறுவதன் மூலம் பிரச்னையில் இருந்து விலகலாம்.

பொதுவாக, இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, கட்டாயம் ஏழெட்டு மணி நேரம் தூங்க வேண்டும். மனஅழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். உணவில், அதிகப் பழங்கள், காய்கறிகள், கீரைகளைச் சேர்க்க வேண்டும். கூர்மையான பற்கள் இருந்தால், பல் மருத்தவரிடம் சென்று சரிசெய்துகொள்ள வேண்டும். தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும், அவ்வப்போது வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால், நோய்த்தொற்றுக் கிருமிகளின் தாக்கத்தைக் குறைக்க முடியும். எதுக்களிப்புப் பிரச்னை இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அதிக மசாலா உள்ள உணவுப் பொருட்கள், கார்பனேட்டட் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.”

கன்சல்ட்டிங் ரூம்

டி.ரம்யா, பொள்ளாச்சி.

“எனக்கு வயது 21. மூச்சு விட சிரமமாக உள்ளது. அதிக நேரம் வாயால்தான் மூச்சுவிடுகிறேன். காலை, மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் இந்தப் பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னை சில வருடங்களாகவே இருக்கிறது. ஆனால், இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தற்போது, உடலில் ஏதேனும் பிரச்னை உள்ளதோ என அஞ்சுகிறேன். இது என்ன பிரச்னை? இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.”

டாக்டர் வீ.சதீஸ்பாபு, நுரையீரல் சிறப்பு மருத்துவர், ஆத்தூர்.

கன்சல்ட்டிங் ரூம்



“மூக்கில் ஏதேனும் அடைப்பு இருந்தால், மூக்கின் வழியாக மூச்சுவிட முடியாமல் வாய்வழியாக மூச்சுவிடுவார்கள். சிலர், அவர்களையும் அறியாமல் வாய்வழியாக மூச்சுவிட்டுப் பழக்கப்படுத்திக்கொள்வதும் ஒரு காரணம். சிலருக்கு, பிறக்கும்போதே மூக்கு அல்லது வாயில் பிரச்னை இருந்தால், அவர்களும் வாய்வழியாகத்தான் சுவாசிப்பார்கள். வாய்வழியாக சுவாசிப்பதால், நுரையீரலில்தான் பிரச்னை என்று இல்லை. மூக்கு, தொண்டை, வாய் போன்ற இடங்களிலும் பிரச்னை இருக்கலாம். 85 சதவிகித அடைப்பு மூக்கில் தசை வளர்ச்சி இருப்பதால் ஏற்படும். 15 சதவிகிதப் பிரச்னை மூக்கில் அடைப்பு சளி மற்றும் அலர்ஜி ஏற்படுவதால் ஏற்படக்கூடும். பிறக்கும்போதே மரபணு காரணமாக மேல் உதடு வளர்ச்சி இல்லாமல் இருக்கும். அப்படி இருக்கும்போது, இரண்டு உதடுகளும் இணைந்து இருக்காது. இதனால், வாய் திறந்தே இருப்பதால், வாய்வழியாக சுவாசிக்க நேரிடும். தொடர்ந்து வாய்வழியாக சுவாசித்தால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து, மூளை பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, எதனால் பாதிப்பு என்று நுரையீரல் மற்றும் காது, மூக்கு, தொண்டை (ஈ.என்.டி) சிறப்பு மருத்துவரை அணுகி, பரிசோதித்து அதன்படி சிகிச்சை எடுக்க வேண்டும்.”

கன்சல்ட்டிங் ரூம்

கே.ரோகிணி, வடமதுரை.

“எனக்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. கடந்த சில நாட்களாக அவனது இடது கண் மட்டும் பொங்கிக்கொண்டே இருக்கிறது. என் மாமியார் குழந்தையின் உடல் வெப்பம் அதிகமானால், இப்படிப் பொங்கும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினால் சரியாகும் என்கிறார்கள். எதனால் இப்படி ஏற்படுகிறது?”

டாக்டர் அருள்மொழி வர்மன், கண் நோய் நிபுணர், சேலம்.

கன்சல்ட்டிங் ரூம்



“பொதுவாக, குழந்தை பிறந்த உடன் அதன் கண்ணீர்க் குழாய் (Nasolacrimal Duct) தானாகத் திறந்துவிடும். ஐந்து சதவிகிதக் குழந்தைகளுக்கு மட்டும் இந்தக் குழாய் திறக்காமல் அடைத்துக்கொள்ளும். இதன் காரணமாக, கண்ணில் சுரக்கும் நீர், இந்தக் குழாய் மூலம் வெளியேற முடியாமல், கண்ணின் வெளியே வடியும். சிலருக்கு, நீர்ப்பையில் கிருமித் தாக்குதல் ஏற்படுவதால், கண்களில் அழுக்கு (Discharge) வரும். இதனாலும் கண்கள் பொங்கும். நீர்ப்பை மீது (மூக்கின் பக்கவாட்டில்) மூன்று மாதங்களுக்கு மசாஜ் செய்துவர குணமாகும். எனவே, உடல் உஷ்ணம் என அலட்சியப்படுத்தாமல், உடனடியாகக் குழுந்தைகள் நல மருத்துவர் மற்றும் கண் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அவர்கள், என்ன மாதிரியான சிகிச்சை, எப்படிச் செய்ய வேண்டும், என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். அதைப் பின்பற்றினால் இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.”

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism