
பேரீச்சை - எள் போலி
தேவையானவை: கோதுமை மாவு, கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - தலா 1 கப், பால் - 6 டேபிள்ஸ்பூன், வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் - 1/4 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எள்ளை வறுத்து ஆறவைத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துப் பாத்திரத்தில் கொட்ட வேண்டும். பேரீச்சம் பழம், வெல்லத்தை மிக்ஸியில் தனித்தனியாக, லேசாக அரைத்து அதையும் பாத்திரத்தில் போட வேண்டும். இரண்டு டேபிள்ஸ்பூன் பால் விட்டு, இந்தக் கலவையைக் கலந்தால், பூரணம் தயார்.
கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, பால் சேர்த்துப் பிசைந்து, சிறிய சப்பாத்தியாக உருட்டி, அதில் சிறிது பூரணம் சேர்த்து மூடித் திரட்டிக்கொள்ளவும். இரண்டு பக்கமும் நெய் விட்டு சுட்டு எடுக்க, ஹெல்த்தி போலி தயார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பலன்கள்
இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளன.
சமச்சீர் உணவாக இருக்கும். குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸில் கட்டிக் கொடுக்கலாம். வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும்.
சுவை மிகுந்த, ஆரோக்கியம் நிறைந்த உணவு என்பதால், குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம்.
வேப்பம்பூ சாதம்
தேவையானவை: சாதம் - 1 கப், உலர்ந்த வேப்பம்பூ - 1 டேபிள்ஸ்பூன், மோர் மிளகாய் - 5, பூண்டு - 10 பற்கள், கறிவேப்பிலை, கடுகு, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு வேப்பம்பூ, மோர் மிளகாயை லேசாக வறுத்து, மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்ற வேண்டும். கடாயில் சிறிது நெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பூண்டு போட்டு வறுக்க வேண்டும். பிறகு, வேப்பம்பூ, மோர் மிளகாய் கலவையைப் போட்டு, சாதத்தையும் போட்டு நன்றாகக் கிளறி, சூடாகப் பரிமாறலாம்.

பலன்கள்
மோர் மிளகாயுடன் சாப்பிடுவதால், வேப்பம்பூவின் கசப்பு தெரியாது.
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும். செரிமானத்தை மேம்படுத்தும்.
ஆரோக்கியமான உணவாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிடலாம்.
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். உடலின் வளர்ச்சிதை மாற்றத்தைத் தூண்டும்.
வேப்பம்பூவுடன் பூண்டும் சேர்வதால், சிறந்த ஆன்டிபயாட்டிக்காகச் செயல்பட்டு, கிருமிகளை அழிக்கும்.
- ப்ரீத்தி, படங்கள்: எம்.உசேன்