Published:Updated:

சிறிய விதைகள் பெரிய பலன்கள்

சிறிய  விதைகள் பெரிய பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
சிறிய விதைகள் பெரிய பலன்கள்

சிறிய விதைகள் பெரிய பலன்கள்

சிறிய விதைகள் பெரிய பலன்கள்

சிறிய விதைகள் பெரிய பலன்கள்

Published:Updated:
சிறிய  விதைகள் பெரிய பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
சிறிய விதைகள் பெரிய பலன்கள்
சிறிய  விதைகள் பெரிய பலன்கள்

சூரியகாந்தி விதை

இதில் நிறைவாக உள்ள வைட்டமின் இ திசுக்கள் ஆக்சிஜன் பயன்படுத்துவதால் உருவாகும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் பிரச்னையைத் தவிர்க்கிறது. செலீனியம், டி.என்.ஏ அளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்குகிறது. மக்னீசியம் வலுவான எலும்புக்கு உதவுவதுடன், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க, தசைகளில் ஏற்படும் அதிகப்படியான இறுக்கத்தைப் போக்க உதவுகிறது. சோர்வு, ஒற்றைத் தலைவலி போன்றவற்றையும் போக்குகிறது.

சிறிய  விதைகள் பெரிய பலன்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எள்

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைவாக உள்ளதால், எலும்பு உறுதித்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் மாங்கனீசு ஃப்ரீ ராடிக்கல்ஸ் பாதிப்பைத் தவிர்க்கின்றன. துத்தநாகம் எலும்பின் வளர்ச்சிக்கு உதவும், எலும்பு அடர்த்திக் குறைதல் பாதிப்பில் இருந்து காக்கிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது.

சிறிய  விதைகள் பெரிய பலன்கள்

பூசணி விதை

புரதம், பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்புச்சத்து, தாமிரம், வைட்டமின் பி, கே, இ நிறைவாக உள்ளன. எலும்பு அடர்த்திக் குறைவுப் பிரச்னையில் இருந்து காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நாட்பட்ட நோய்த் தாக்கத்தையும் குறைக்கிறது. நுண்கிருமி, ஒட்டுண்ணிகளை அழிக்கிறது. ப்ராஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட, நல்ல தூக்கம் வர உதவுகிறது.

சிறிய  விதைகள் பெரிய பலன்கள்

ஆளி விதை (ஃபிளாக்ஸ் சீட்)

ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. இதில் நிறைவாக உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உடலில் ஏற்படக்கூடிய வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகளைப் போக்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. தொடர்ந்து எடுத்துவருவதன் மூலம் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

- பா.பிரவீன்குமார்