Published:Updated:

ஆண்மையை பெருக்கும் ஓரிதழ் தாமரை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆண்மையை பெருக்கும்  ஓரிதழ் தாமரை!
ஆண்மையை பெருக்கும் ஓரிதழ் தாமரை!

ஆண்மையை பெருக்கும் ஓரிதழ் தாமரை!

பிரீமியம் ஸ்டோரி
ஆண்மையை பெருக்கும்  ஓரிதழ் தாமரை!

யல்வெளிகளில் வளரக்கூடிய சிறு செடி, ஓரிதழ் தாமரை. ‘ரத்தின புருஷ்’ என்றொரு பெயரும் உண்டு. இந்த முழுத் தாவரமும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. இதன் இலைகளை வாயில் இட்டு மென்று சுவைத்தால், கொழகொழ எனப் பசை போன்று இருப்பதை உணர முடியும்.

ஓரிதழ் தாமரைச் செடியை சித்த மருத்துவத்தில் `காயகற்ப மூலிகை’ எனக் கொண்டாடுகிறார்கள்.

இதன் இலைகளைச் சாப்பிட்டுவந்தால், ஆண்களுக்கு சுக்கிலம் கெட்டிப்படும். மேக நோய்கள் சரியாகும்.

உடலுக்கு அழகு சேர்க்கும் ஓர் அரிய மூலிகைக் செடி இது.  இதனைப் பறித்து, நன்றாகத் தண்ணீரில் கழுவி உண்டுவந்தால், உடல் வெப்பம் குறையும்.

தினமும் காலை புதிதாக இதன் இலைகளைப் பறித்து, மைபோல அரைத்து 200 மி.லி பசும்பாலில் எலுமிச்சை அளவுக்குக் கலந்து, 48 நாட்கள் சாப்பிட்டுவந்தால், அழகும் பொலிவும் கூடும். நரம்புத்தளர்ச்சி, சிறுநீர் நோய்கள் நீங்கும்.

ஆண்மையை பெருக்கும்  ஓரிதழ் தாமரை!

இது, சுரம், நீர் எரிச்சல், உடல் எரிச்சல் ஆகியவற்றைப் போக்குவதுடன், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

முழுச்செடியுடன் சிறு அளவு பச்சைக்கற்பூரம், கோரோசனை ஆகியவற்றைச் சேர்த்து, மை போல அரைத்துப் பசு நெய்யுடன் கலந்து வெளிப் பிரயோகமாகப் பூசிவர புண்கள், மேகவெட்டையால் ஏற்படும் பாதிப்புகள் குணமாகும்.

விந்துநட்டம் ஏற்பட்டவர்கள் சித்த மருத்துவரின் அறிவுரைப்படி ஓரிதழ் தாமரை இலையுடன் கீழாநெல்லியைச் சேர்த்து அரைத்து, பசுந்தயிர் அல்லது மோரில் கலந்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு தினந்தோறும் காலையில் குடித்துவந்தால், உயிரணுக்கள் பலப்படுவதுடன், உடல் வலிமையும் பெறும்.

- பு.விவேக் ஆனந்த்

படம்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு