Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

ஆர்.பேச்சிராஜன், மதுரை.

கன்சல்ட்டிங் ரூம்

“எனக்கு வயது 28. கடந்த சில நாட்களாக என் இடது கையில் வலி ஏற்படுகிறது. முதலில், மேல் கையில் மட்டும் வலிப்பதைப்போல இருந்தது. இப்போது, அக்குள் பகுதியிலும் வலியை உணர்கிறேன். எனது கை முன்பைவிட சற்று வீங்கி இருக்கிறது. மரக்கட்டில் ஒன்றை நகர்த்திப்போட்டேன். அதனால் ஏற்பட்ட தசைப்பிடிப்பாக இருக்கும் என நினைத்து, ஒத்தடம் கொடுத்துப்பார்த்தேன். சின்னச்சின்ன ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்தேன். எதற்கும் வலி குறையவே இல்லை. ஏதேனும் தீவிரமான பிரச்னையாக இருக்குமோ என பயமாக உள்ளது?”

டாக்டர் அல்போன்ஸ் ராய் எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர், திருநெல்வேலி.

“நீங்கள் சொல்வதை வைத்துப்பார்க்கும்போது, உங்களுக்கு ‘சர்விக்கல் டிஸ்க் புரோலாப்ஸ்’ (Cervical Disc Prolapse) எனும் பிரச்னை ஏற்பட்டிருக்கக்கூடும்.  அதாவது, நமது கழுத்தில் எலும்புகளுக்கு நடுவே வட்டுகள் (Discs) இருக்கும். அவற்றின் முக்கிய வேலை கழுத்துப் பகுதியில் உள்ள நரம்புகளுக்கு ‘ஷாக்அப்சார்பர்’போல செயல்படுவதுதான். இந்த வட்டுகள் வெளியில் சற்றுக் கெட்டியாகவும் உள்பகுதியில் ‘ஜெல்’ போலவும் இருக்கும். வெறும் எலும்புகளாக இருந்தால், நம்மால் அதனை வளைக்க முடியாது என்பதால் இப்படி அமைந்திருக்கின்றன. இந்த வட்டுகளே அதிர்வுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. நாம் அளவுக்கு அதிகமாக  பைக் பயணம் செய்வதாலும், கீழே விழுவதாலும், கனமான சுமையை தூக்குவதாலும் இந்த வட்டுக்கள் சில சமயம் கிழிந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிக் கிழிந்துவிட்டால், அதன் உள்ளே இருக்கும் நுங்கு போன்ற திரவம் வெளியே வந்துவிடும்.

முதுகு எலும்புத் தொடரில், கழுத்து எலும்புகளின் மூன்றாவது, நான்காவது எலும்புக்கு நடுவில் இருக்கும் வட்டோ அல்லது ஐந்தாவது, ஆறாவது எலும்புகளுக்கு இடையில் இருக்கும் வட்டோ விலகியும் இருக்கலாம். இதனால், கைக்கு வரும் நரம்புகள் அழுத்தப்படுவதால் வலி ஏற்படலாம். இதனை முழுமையாகக் கண்டுபிடிக்க வேண்டுமானால், கழுத்துப் பகுதியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். இதன் மூலம் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இது தவிர, கைக்கு ரத்த ஓட்டம் குறைவதன் காரணமாகவும் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு உள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால், விரைவில் குணமடையலாம்.”

சி.ப்ரியா, கீரனூர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்சல்ட்டிங் ரூம்“எனக்கு வயது 24. கடந்த சில வாரங்களாக சிறுநீரில் துர்நாற்றம் வீசுகிறது. அடிவயிற்றில் தசை இறுக்கமும் திடீரெனக் கடுமையான வலியும் இருக்கிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும்போது வலியோ, எரிச்சலோ இருப்பது இல்லை. தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுகிறேன். இருந்தும் இந்தப் பிரச்னை இருக்கிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது?”

டாக்டர் சண்முகநாதன், சிறுநீரகவியல் மருத்துவர், மதுரை.

“பொதுவாக, ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகம். சிறுநீர்ப்பையில் தொற்று, மலச்சிக்கல், சிறுநீர் முழுமையாக வெளியேற்றப்படாமல் சிறுநீர்ப்பையில் தேங்கி இருத்தல் போன்ற காரணங்களால், சிறுநீரில் துர்நாற்றம் வீசக்கூடும். பெரும்பாலும் இந்தப் பிரச்னை சிறுநீர்ப்பையில் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுக் காரணமாகவே வருகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழித்த பின்னர் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, துர்நாற்றம் வீசும் சிறுநீர், காய்ச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை இதன் அறிகுறிகள்.

இந்தப் பிரச்னைக்கு, ஆன்டிபயாடிக் மாத்திரைகள் மருந்தாக அளிக்கப்படுகின்றன. தண்ணீர் அதிகமாகப் பருக வேண்டும். அடிவயிற்றை அழுத்தும் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுத்து மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.”

ம.ரகுராமன், துறையூர்.

கன்சல்ட்டிங் ரூம்“என் வயது 40. கடந்த சில மாதங்களாக என் வலது காதில் தொடர்பற்ற ஓசைகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. பைப்பில் தண்ணீர் கசிவதுபோலவும், ரேடியோ அலைவரிசை இரைச்சலாகவும் ஓசை கேட்கிறது. சில சமயங்களில் என் காதில் இருந்து சீழ் கசிவதுபோல உணர்கிறேன். ஆனால், தொட்டுப்பார்த்தால் சீழ் ஏதும் கசிவது இல்லை. சில சமயங்களில் தலைவலியும் இருக்கிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணரைச் சந்தித்தேன். அவர் காதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார். இது என்ன பிரச்னையாக இருக்கும்?”

டாக்டர் சி.வெள்ளைச்சாமி, மனநலம் மற்றும் போதை மாற்று மருத்துவ நிபுணர், கோவை.

“நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கையில், மனநலக் குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். மனச்சிதைவு (Schizophrenia) மற்றும் மனஎழுச்சி (Mania) என இரண்டு முக்கியக் காரணங்களால் இது போன்று காதுகளில் தேவையற்ற ஓசைகள் கேட்கும்.

கன்சல்ட்டிங் ரூம்

இந்த மனநலப் பிரச்னைகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு உறுதியான காரணங்கள் இல்லை. ஆனால், இந்த நோய்களுக்கு மனஅழுத்தம் மிக முக்கியமான காரணம். மனஅழுத்தத்தை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும்.இந்த மனச்சிதைவின்போது நமது மூளையில் டோபமைன் (Dopamine) என்ற வேதிப்பொருள் அதிக அளவில் சுரக்கும். அதுதான், இதுபோன்ற ஓசை கேட்பது, காதில் சீழ் கசிவதைப் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.

அருகில் உள்ள மனநல மருத்துவரை அணுகினால், அவர் உங்களைப் பரிசோதித்து, உரிய மருந்துகள் தருவதன் மூலம் டோபமைன் அளவைக் கட்டுப்படுத்துவார். இதன் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட முடியும்.”

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.