Published:Updated:

அபியங்கம் - ரிலாக்ஸ் மசாஜ் தெரப்பி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அபியங்கம் - ரிலாக்ஸ் மசாஜ் தெரப்பி
அபியங்கம் - ரிலாக்ஸ் மசாஜ் தெரப்பி

அபியங்கம் - ரிலாக்ஸ் மசாஜ் தெரப்பி

பிரீமியம் ஸ்டோரி
அபியங்கம் - ரிலாக்ஸ் மசாஜ் தெரப்பி

சாஜ் என்றதும் சொகுசு பார்லர், ஸ்பாக்களில் வழங்கப்படும் உடலுக்கு  இதம் தரும் சிகிச்சை என்ற எண்ணம்தான் பலருக்கும் உள்ளது. தாய் மசாஜ், ஹாட் ஸ்டோன் மசாஜ், அரோமா தெரப்பி மசாஜ் என்று விதவிதமான மசாஜ்கள் உள்ளன. அவரவர் உடலுக்கு, பருவ காலத்துக்கு ஏற்ப, மூலிகை எண்ணெயைப் பயன்படுத்தி, முழு உடலுக்கும் செய்யப்படும் நம் பாரம்பரிய ஆயுர்வேத மசாஜ் பற்றி பார்ப்போம். ‘அபியங்கம்’ எனப்படும் முழு உடலுக்கான எண்ணெய் மசாஜ், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கக்கூடியது. கண்கள் மூடிய நிலையில், கை, கால்களைத் தளர்த்தி, சுகந்தம் மிக்க அறையில், மூலிகை எண்ணெய்களோடு ஒரு மணி நேரம் ரிலாக்சேஷன் தெரப்பி செய்தால், அதனால் கிடைக்கும்  நன்மைகள் அநேகம். தேவையற்ற சிந்தனைகள் மட்டுப்பட்டு, உடலும் உள்ளமும் தளர்வாகி, நம்முள் நம்மைப் புதிதாக மலரச்செய்யும் அற்புத சிகிச்சை இது.

அபியங்கம் - ரிலாக்ஸ் மசாஜ் தெரப்பி

எப்படிச் செய்வது?

யாருக்கு என்ன மாதிரியான மூலிகை எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என உடல் நிலையைப் பரிசோதித்த பின்னர் ஆயுர்வேத மருத்துவர் முடிவு செய்வார்.

அதன் பிறகு, தலை, தோள்பட்டை, உட்காரும் நிலை, நேராகப் படுப்பது, வலது பக்கம், இடது பக்கம், குப்புறப் படுப்பது என ஏழு நிலைகளில் முழு உடலுக்கும் மசாஜ் செய்யப்படும். 

மசாஜ் முடிந்ததும், `ஷிரொதாரா’ (Shirodhara) எனப்படும் தலை முதல் பாதம் வரை எண்ணெய் ஊற்றும் சிகிச்சை அளிக்கப்படும். இரண்டும் சேர்த்து மொத்தம் ஒரு மணி நேரத்துக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

எப்போது செய்யலாம்?

இந்தச் சிகிச்சையை, பயிற்சி பெற்ற தெரப்பிஸ்ட்டால் மட்டுமே செய்ய முடியும். தொடர்ந்து ஏழு நாட்களுக்குச் செய்வதன் மூலம் முழுப் பலன்களும் கிடைக்கும். இயலாதவர்கள், மாதம் ஓரிரு முறை செய்யலாம். பெண்கள், ஆண்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். உணவு உண்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர்தான், இந்தச் சிகிச்சையை செய்துகொள்ள வேண்டும். சிகிச்சைக்குப் பிறகு, அன்றைக்கு மட்டும் லேசான உணவாகச் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

அபியங்கம் - ரிலாக்ஸ் மசாஜ் தெரப்பி

பலன்கள்

இணைப்புகள், மூட்டுகளுக்கு ரத்த ஓட்டம் சீராகக் கிடைக்கும்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஓய்வு கிடைப்பதை உணர முடியும்.

உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

தனிமை உணர்வு, மனஉளைச்சல், எரிச்சல் உணர்வு, பயம் போன்ற மனநலம் தொடர்பான பிரச்னைகள் தீரும்.

தலைவலி, தூக்கமின்மைக்கு நல்ல தீர்வு.

செரிமானக் கோளாறுகள் ஏதேனும் இருப்பின் தொடர்ந்து செய்துவர குணம் கிடைக்கும்.

டென்ஷன், சோர்வு நீங்கி, மன அமைதி கிடைக்கும்.

உடல் கழிவுகள் வெளியேறும்.

டென்ஷனால் ஏற்படும் முடி உதிர்வு, இளநரை சரியாகும். சருமம் பொலிவு பெறும்.

பார்வைத்திறன் மேம்படும்; நல்ல தூக்கம் வரும்.

- ப்ரீத்தி, படங்கள்: எம்.உசேன்

உதவி: சஞ்சீவனம் ஆயுர்வேதிக் தெரப்பி சென்டர், சைதாப்பேட்டை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு