பிரீமியம் ஸ்டோரி
ஈஸி 2 குக்

அவல் கட்லெட்

தேவையானவை: அவல் - 1 கப், பாசிப் பருப்பு, நறுக்கிய பாலக்கீரை - தலா 1/4 கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 1 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாசிப் பருப்பையும் அவலையும் தனித் தனியாக ஊறவைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, இரண்டையும் நீரை வடித்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, பச்சைமிளகாய், பாலக் கீரை, கொத்தமல்லி, சர்க்கரை, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைவாகப் பிசைய வேண்டும். பிறகு, சிறிய உருண்டைகளாகப் பிடித்து, வட்ட வடிவில் தட்டி, தவாவில் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் பிரட்டி எடுத்தால், அவல் கட்லெட் தயார்.

ஈஸி 2 குக்

பலன்கள்:

வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். புரதச்சத்து நிறைவாகக் கிடைக்கும்.

பாலக் கீரை, கொத்தமல்லி இருப்பதால் பெரியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகளும் சாப்பிடலாம்.

‘அரிசி சாப்பிடக் கூடாது’ என்று டாக்டர் பரிந்துரைந்திருந்தால், அவர்களுக்கான சிறந்த மாற்று இது.

லைட்டான உணவாகச் சாப்பிட விரும்புபவர்களுக்குச் சிறந்த சாய்ஸ்.

சிட்ரஸ் தர்பூசணி சாலட்

தேவையானவை: சதுரமாக நறுக்கிய தர்பூசணி - 1 கப், ஆரஞ்சு, சாத்துக்குடி சுளைகள், மாதுளை - தலா 1/4 கப், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைச் சாறு - தலா 1 டீஸ்பூன், புதினா - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, புதினா, எலுமிச்சைச் சாறு, ஆலிவ் எண்ணெய், உப்பு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கி, பரிமாறலாம்.

ஈஸி 2 குக்

பலன்கள்:

புதினா, ஆலிவ் எண்ணெய் இருப்பதால் உடலுக்குப் புத்துணர்வை அளிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செரிமானம் மேம்படும்.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

- மினு

படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு