பிரீமியம் ஸ்டோரி

பாதங்கள்தான் நமக்கு ஆணி வேர். பொருத்தம் இல்லாத, அலர்ஜி ஏற்படுத்தும் செருப்புகள்கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்குக் கால்களை அகற்ற வேண்டிய அளவுக்குப் பிரச்னை பெரிதாகலாம். எனவே, பாத வெடிப்பு, சர்க்கரை நோயாளிகள், தட்டையான பாதம் உள்ளவர்கள் என ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற செருப்புகளை அணிவது அவசியம். இவற்றின் விலை சுமார் ரூ.550 முதல் 800 வரை இருக்கும். பாதங்களைப் பாதுகாக்கும் காலணிகளின் அணிவகுப்பு இங்கே...

குதிகால் / மூட்டு வலி காலணி

ஹெல்த்தி ஷாப்பிங்

இந்தக் காலணியில் குதிகால் பகுதியில் கூடுதலான குஷன்கள் இருக்கும். இது, குதிகாலைப் பாதுகாக்கும். கால் வீக்கம் ஆகாமல் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள், காலில் புண் உள்ளவர்கள் அணியலாம்.

போலியோ / காயம்பட்ட பாதம்

ஹெல்த்தி ஷாப்பிங்

பாதத்தில் கட்டைவிரலுக்குக் கீழே உருண்டையாக இருக்கும் பகுதியில் (ball of foot) வலி உள்ளவர்கள், போலியோ பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஏற்ற செருப்பு இது.

கணுக்கால் மூட்டு (Arch support)

ஹெல்த்தி ஷாப்பிங்

ஆர்த்ரைடிஸ் மற்றும் தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு ஏற்றது. உடலுக்கு ஏற்ற போஸ்சர் தரும்.

பருமனானவர்களுக்கான காலணி

ஹெல்த்தி ஷாப்பிங்

அதிக எடை இருந்தால், அதைத் தாங்கி நிற்கும் கால்களில் வலி அதிகரிக்கும். பாதங்களுக்கு மென்மையாக, சப்போர்ட் செய்வது போன்ற பிரத்யேகக் காலணிகள் இவை. பாத வலி தடுக்கப்படும்.

தட்டையான பாதம் (Flat Sole)

ஹெல்த்தி ஷாப்பிங்

தட்டையான பாதம் இருப்பவர்கள், அடி முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தலாம். முதுகு வலி படிப்படியாகக் குறையும்.

சர்க்கரை நோயாளிகளுக்கான காலணி

ஹெல்த்தி ஷாப்பிங்

சர்க்கரை நோயாளிகள், பாதவெடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கான பிரத்யேகக் காலணி இது. கல், மண், முள் போன்றவற்றால் பாதம் பாதிக்கப்படாமல் தடுக்கிறது.

- மினு, படங்கள்: எம்.உசேன், உதவி: ஹெல்த்தி ஃபீட், குரோம்பேட்டை, சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு