Published:Updated:

ஹெல்த்தி கிச்சன்!

ஹெல்த்தி கிச்சன்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த்தி கிச்சன்!

ஹெல்த்தி கிச்சன்!

ஹெல்த்தி கிச்சன்!

ந்தக் காலத்தில், வீட்டிலேயே அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் வைத்துக்கொண்டு, பெண்கள் குனிந்து, நிமிர்ந்து சட்னி முதல் மாவு வரை எல்லாவற்றையும் கையாலேயே அரைத்தனர். வேலைக்கு வேலையும் முடிந்தது, உடலுக்குப் பயிற்சியும் கிடைத்தது. இன்று, மிக்ஸி, கிரைண்டர், அவன் என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியே மின்சாதனங்கள் வந்துவிட்டன. ஈஸியாக வேலையை முடிக்க வேண்டும் என, மின்சாதனங்களைப் பார்த்துப் பார்த்து வாங்கினாலும், அதன் பராமரிப்பில்தான் இருக்கிறது மின்சாதனங்களின் ஆயுளும் நம் ஆரோக்கியமும்.

ஹெல்த்தி கிச்சன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மின்சாத​ன​ம் கவனம்!

​​சமையலறையில் மின்சார சப்ளை ஒழுங்காக இருக்க வேண்டும். விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள பகுதி இது. ஸ்விட்ச்சுகள் சரியாக இயங்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம். சிலிண்டர் இருக்கும் இடத்தில் கொசு மருந்து அடிப்பது, கரப்பான் பூச்சி ஸ்ப்ரே அடிப்பது கூடாது. இதில், ஆல்கஹால் சிறிதளவு இருப்பதால், குபீரெனத் தீப்பிடிக்க வாய்ப்பு உண்டு. சமையலறையில் கொசு பேட் உபயோகிப்பதும், போன் பேசுவதும் கூடாது. சில எளிய மாடல் செல்போன்கள் அதிக சூடானால் வெடிக்க வாய்ப்பு உள்ளது.​ மின்சாதனத்தை வாங்கும்போது நல்ல பிராண்ட், வாரன்டி பார்த்து வாங்க வேண்டும். தேவைப்படும் சாதனங்களுக்கு மின்சார சப்ளை சீராக இருக்க, ​​ஸ்டெப்லைசர் வைக்க வேண்டும்.​

மிக்ஸி:

ஹெல்த்தி கிச்சன்!

​பலரும் மிக்ஸியின் ஸ்விட்ச்சை அணைக்காமல், கைகளால் சட்னியோ, மாவோ எடுப்பார்கள். ஏதாவது, லூஸ் கனெக்‌ஷன் ஏற்பட்டால், திடீரென பிளேடு சுற்றி, விரல் துண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே, எப்போதும், ஜாரை மிக்ஸியில் இருந்து வெளியே எடுத்துவிட்டுத்தான் கையை உள்ளே விட வேண்டும். மிக்ஸியின் ஒயர்களில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் அரைக்கும்போது, ஆறிய உணவுகளைத்தான் போட வேண்டும். சூடான உணவுகளைப் போட்டு அரைத்தால், மூடி தெறித்துவிட வாய்ப்பு உண்டு. பருப்பு, கீரை, குழம்பு மசாலா போன்றவற்றை அரைக்க மிக்ஸி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மிக்ஸியில் அரைப்பதால், இந்தப் பொருட்களின் தன்மை மாறிவிடுவதோடு, சில சத்துக்களும் அழிந்துவிடும். எனவே பருப்பு, கீரை போன்ற உணவுகளை மத்து, கரண்டி​​யால் மசித்துக்கொள்வது நல்லது.

உபயோகப்படுத்தும்போது மிக்ஸி வழக்கத்துக்கு அதிகமாக அதிர்ந்தாலோ, தண்ணீர் வெளியே கசிந்தாலோ, மிக்ஸி ஜாரிலோ அல்லது மோட்டாரிலோ பிரச்னை உள்ளது. உடனடியாகச் சரிசெய்வது அவசியம்.

மைக்ரோவேவ் அவன்:

ஹெல்த்தி கிச்சன்!

முடிந்தவரை அவனில் சமைப்பதைத் தவிர்க்கலாம். பயன்படுத்த வேண்டிய சூழல் வந்தால், குறித்த நேரத்துக்கு மேல் அவனில் உணவை வைப்பது, அதிகப்படியாகச் சமைக்கப்பட்ட உணவை உண்பது, உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அவனில் எண்ணெய்கொண்டு டீப் ஃப்ரை செய்வதைத் தவிர்க்க வேண்டும். உணவை எடுக்க அவனின் உள்ளே கைவிடும்போது கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கக் கொடுக்கப்பட்ட கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும். உணவை வெளியே எடுத்த உடனேயே சாப்பிடக் கூடாது. சிறிது நேரம் வெளிக் காற்றில் ஆறவிட்ட பின்னர் உட்கொள்வது நல்லது. அவனின் சுகாதாரம் காக்க, உணவுகளைச் சமைத்த பிறகு வாசனை நீங்கும் வரை சுத்தம்செய்ய வேண்டும்.

பாத்திரங்கள் மற்றும் ஸ்கரப்பர்

ஹெல்த்தி கிச்சன்!

குடிநீரைச் சேகரித்துவைக்க பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தாமல் செம்புப் பாத்திரங்கள் அல்லது மண்பானைகளைப் பயன்படுத்துவது சிறந்தது. தவா, கடாய் எனப் பல வகைகளில் கிடைக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்|களை அதீத சூட்டில் பயன்படுத்தக் கூடாது. மேலும், உணவுப் பொருட்கள் ஏதும் இன்றி அடுப்பில்விடுவதையும் தவிர்க்கவும். கூரான கரண்டி மற்றும் கரடுமுரடான பொருட்களைக்கொண்டு சுத்தம் செய்யக் கூடாது. பாத்திரங்களை சுத்தம்செய்ய பயன்படுத்தும் ஸ்க்ரப்பர்களை, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாற்றவும். சமையலறையிலேயே அதிகக் கிருமிகள் இருப்பது இந்த ஸ்க்ரப்பர்களில்தான். அதே போல பித்தளை, செம்பு, எவர்சில்வர், அலுமினியம் பாத்திரங்களை எலுமிச்சைத் தோலைவைத்தும் சுத்தப்படுத்தலாம்.

கிரைண்டர்:

ஹெல்த்தி கிச்சன்!

அளவுக்கு அதிகமான கொரகொர சத்தம், பொருட்களை அரைக்க மிக நீண்ட நேரமாவது, ஷாக் அடிப்பது போன்றவை கிரைண்டரின் முறையான பராமரிப்பின்மைக்கான அபாய மணி. ​கிரைண்டர் கற்களின் இடையில் மாவு ஒட்டியிருந்தால், அதை சாப்பிட பூச்சிகள் உள்ளே வரும். பயன்படுத்திய பிறகு மூடி வைப்பதும்,. பயன்படுத்தும் முன் ஒருமுறை கழுவுவதும் நல்லது.​ கிரைண்டர் சூடான பிற்பாடும் பொருட்களை உள்ளே போட்டு தொடர்ந்து அரைப்பது போன்ற செயல்கள் இயந்திரத்தைப் பழுதாக்கும்.

ஃபிரிட்ஜ்:

ஹெல்த்தி கிச்சன்!

ஃபிரிட்ஜினுள்ளே பிளாஸ்டிக் கவர்களில் கீரை, காய்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஃபிரிட்ஜினுள் குறைந்த தட்பவெப்பத்தில் பிளாஸ்டிக் கவர்கள் அடைத்து வைக்கப்படும்போது, புற்றுநோய்க்கான காரணிகளை வெளிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
காய்கறி மற்றும் பழங்களை மஞ்சள் தூள், உப்பு போட்டு கழுவிய பின்னர் உள்ளே வைக்க வேண்டும். இல்லை எனில், ஃபிரிட்ஜ் முழுக்கக் கிருமிகள் பரவ நேரிடும். உருளை, கருணை போன்ற வேர்க்கிழங்குகளை ஃபிரிட்ஜினுள் வைக்கக் ​கூடாது.

உடலுக்கு ஓய்வு தேவைப்படுவது போல, ஃபிரிட்ஜையும் 15 நாளைக்கு ஒருமுறை அரை நாள்​ அல்லது ஓரிரு மணி நேரம்​ ஆஃப் செய்துவைத்து, ஓய்வு கொடுக்க வேண்டும்.

ஃப்ரீசரில் ஐஸ் நிறைய சேரும்போது, டிஃப்ராஸ்ட் செய்து, ஐஸைக் கரைத்து வெளியேற்ற வேண்டும்.தண்ணீர் தேங்கவிட்டால், அதில் கொசுக்கள் மற்றும் கிருமிகள் உற்பத்தியாகலாம். ஒரு முறை திறக்கும்போதே, தேவையான பொருட்களை மொத்தமாக வெளியே எடுக்க வேண்டும். அடிக்கடி ஃபிரிட்ஜ் கதவைத் திறந்து, மின்சார விரயம் செய்ய வேண்டாம்.

கோடை, மழை, குளிர் காலங்களுக்கு ஏற்ப ஃபிரிட்ஜின் தட்பவெப்பநிலையை மாற்றி அமைப்பதன் மூலம், மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். பாதி எலுமிச்சைப் பழத்தை ஃபிரிட்ஜின் ஒரு மூலையில் வைத்துவிட்டால், துர்நாற்றம் நீங்குவதோடு, நுண்கிருமிகளும் அழியும்.​

- கோ. இராகவிஜயா, படம்: க.சர்வின்