Published:Updated:

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

ஹராபரா தால்

தேவையானவை: கடலைப் பருப்பு - 1/2 கப், பசலை (பாலக்) கீரை - 1 கட்டு, வெந்தயக் கீரை, சீரகம், கரம்மசாலா - தலா 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 3/4 கப், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பற்கள், தனியா தூள் - 1 டீஸ்பூன், காய்ச்சிய பால் - 1/4 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

கடலைப் பருப்பை குக்கரில் வேகவைக்க வேண்டும். கீரையை வெந்நீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு, பின் அதை சாதாரணத் தண்ணீரில் போட்டு, கீரையை மட்டும் எடுத்து குழைவாக அரைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், பெருங்காயம் போட்டுத் தாளித்து, இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் விழுது  சேர்த்து வதக்க வேண்டும். வேகவைத்த கடலைப் பருப்பை ஒன்றும் பாதியுமாக மசித்து, அரைத்துவைத்த கீரையைப் போட்டு நன்றாக ஒரு கொதிவிட்டு, தனியா தூள், கரம் மசாலா, வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்த பிறகு பால் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.

ஈஸி 2 குக்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பலன்கள்

புரதச்சத்து, வைட்டமின்கள் நிறைந்துள்ளன. உடலில் ரத்தம் உற்பத்தியாக பாலக்கீரையின் சத்துக்கள் உதவும்.

சப்பாத்தி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் இது பொருந்தும். கீரையை ஒதுக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்துவரலாம். ஊட்டசத்துக்கள் கிடைக்கும்.

காய்கறிக்கூட்டைவிட சுவையாக இருக்கும், சத்துக்களும் அதிகம்.

பீட்ரூட் டிக்கிஸ்

தேவையானவை: தோல் நீக்கிய பீட்ரூட் - 2, தோல் நீக்கிய கேரட் - 1, ஓட்ஸ் - 1/2 கப், கொத்தமல்லி - தேவையான அளவு, கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

ஈஸி 2 குக்

செய்முறை: வெறும் கடாயில் ஓட்ஸை வறுக்க வேண்டும். சிறிய துண்டுகளாக பீட்ரூட், கேரட்டை வெட்டி, வேகவைத்து மசித்து, பாத்திரத்தில் போட வேண்டும். அதனுடன், ஓட்ஸ், கொத்தமல்லி, கரம் மசாலா, மிளகாய்த் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு போட்டுப் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து, கட்லெட் போல தட்ட வேண்டும். தவா சூடானதும் எண்ணெய் விட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.

பலன்கள்

உடலில் ரத்தம் உற்பத்தியாகச் சிறந்த உணவு இது. குழந்தைகள், பெண்கள் அவசியம் சாப்பிடலாம்.

சருமம் பொலிவடைவதற்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.

மாலை நேர நொறுக்குத்தீனியாக, பெரியவர்களும் சாப்பிட்டுவரலாம்.

- மினு,

படங்கள்: எம்.உசேன்