Published:Updated:

காலனாகும் கறுப்புக் காய்ச்சல்

காலனாகும் கறுப்புக் காய்ச்சல்
பிரீமியம் ஸ்டோரி
News
காலனாகும் கறுப்புக் காய்ச்சல்

காலனாகும் கறுப்புக் காய்ச்சல்

காலனாகும் கறுப்புக் காய்ச்சல்

றுப்புக் காய்ச்சல் எனப்படும் காலா அஸார் (Kala-azar) மலேரியாவுக்கு அடுத்த படியாக உலகையே அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று. ஆண்டுதோறும், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.  இந்தியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இதன் தாக்கம் அதிகம். இந்தியாவில் குறிப்பாக, பீகாரில் இதன் பாதிப்பு மிக அதிகம். ஆனால், கறுப்புக் காய்ச்சல் பற்றிய விழிப்புஉணர்வு நம் மக்களிடையே மிகக் குறைவாகவே இருக்கிறது.

கறுப்புக் காய்ச்சல்


நோய் முற்றிய நிலையில் உடலின் நிறம் கறுத்துவிடுவதால், இதற்குக் கறுப்புக் காய்ச்சல் என்று பெயர். இது, சுகாதாரமற்ற இடங்களில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் மிக அதிகமாகப் பரவும் ஒரு உயிர்கொல்லிக் நோய் இது.  பிலிபோட மோமஸ் அர்ஜென்டிப்ஸ் எனப்படும் பெண் மணல் பூச்சி கடிப்பதால், லீஸ்மானியா டோனவனி எனும் நுண்ணுயிர்க் கிருமி உடலில் செலுத்தப்பட்டு இது பரவுகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவரை மணற்பூச்சி கடித்துவிட்டு, ஆரோக்கிய மானவரைக் கடிக்கும்போது இந்த நோய் எளிதாகப் பரவுகிறது. நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிய, இந்தக் கிருமிகள் மனித உடலில் உட்புகுந்த நாளில் இருந்து, 10 நாட்கள் முதல் இரண்டு ஆண்டுகள்கூட ஆகலாம்.எப்படிப் பரவுகிறது?

மணல் பூச்சி மனிதனைக் கடிப்பதன் மூலம் மனித உடலுக்கு லார்வா நிலையில் உள்ள  ஒட்டுயிர் தொற்றுகிறது.ரத்தத்தை உறிஞ்சுவதற்காக பூச்சி ஒரு மனிதனைக் கடிக்கும் போது அந்த மனிதனுக்குத் தொற்று ஏற்பட்டிருந்தால், அவர் உடலில் இருந்து காலா அசார் ஒட்டுண்ணிகளும் உறிஞ்சி எடுக்கப்படுகின்றன.ஒட்டுண்ணிகள், பூச்சியின் உடலில் வளர்ச்சி அடைந்து பல மடங்கு பெருகுகின்றன. ஆறு முதல் 10 நாட்களுக்குப் பின் முழு வளர்ச்சிஅடைந்து, மற்றொரு மனிதனின் உடலில் செலுத்தப்படத் தயாராகின்றன.

பாதிப்புகள்

இது, மனிதனின் எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், கல்லீரல் மற்றும் எண்டோதீலியல் தசைகளில் தங்கி, மெள்ள அவற்றைப் பாதிக்கின்றன. தொடர்ந்து கவனிக்காமல் விடும்போது, ஒரு கட்டத்தில் கடுமையான காய்ச்சல் மற்றும் வயிறு வீக்கம் போன்றவை ஏற்பட்டு, உயிரிழப்புகூட ஏற்படுகிறது.

காலனாகும் கறுப்புக் காய்ச்சல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அறிகுறிகள்

கடுமையான காய்ச்சல்.

மலேரியாவுக்கான மருந்துகளுக்குக் கட்டுப்படாத தொடர் காய்ச்சல்.

மண்ணீரல் வீங்கி, வயிறு பானை போல் வீங்குதல்.

பசியின்மை, ஈறுகளில் ரத்தக்கசிவு.

ரத்தசோகை, தோல் மற்றும் கண்கள் வெளிறுதல்.

கல்லீரல் வீக்கம், முடி உதிர்தல், தோல் கறுத்துப்போதல்.

இவற்றோடு சிலருக்கு, பி.கே.டி.எஸ் எனப்படும் ஸ்கின் லீஸ்மேனியாசிஸ் பிரச்னையும் ஏற்படும் இதை, போஸ்ட் காலா அஸார் என்பார்கள்.

சிகிச்சை


தொடர் காய்ச்சல் இருந்தால், ரத்தப் பரிசோதனை மற்றும் எலும்பு மஜ்ஜை பரிசோதனை செய்வதன் மூலம் இந்தப் பிரச்னையைக் கண்டறிய முடியும். சுமார் ஒரு மாதம் வரை சிகிச்சை எடுக்க வேண்டியது இருக்கும். முன்பு, கறுப்புக் காய்ச்சலை ஊசி மருந்து மூலமாக மட்டுமே குணப்படுத்த முடியும்.இப்போது வாய் வழியே உட்கொள்ளும் மருந்துகளும் வந்துவிட்டன.

கறுப்புக் காய்ச்சல் தவிர்க்க

மணற்பூச்சிகள் இரவில்தான் கடிக்கும் எனவே, சன்னல்களை மெல்லிய வலைகளால் மூட வேண்டும்.

இவை, கொசுவைவிட சிறியவை என்பதால், நுண்ணிய வலைகளைப் பயன்படுத்த வேண்டும்.

சுத்தமான, உலர்வான இடத்தில் வசிக்க வேண்டும்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கறுப்புக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவரை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி பாதுகாக்க வேண்டும். மீண்டும் அவரை பூச்சி கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பூச்சிவிரட்டிகளை வீட்டில் பயன்படுத்தலாம்.

பூச்சிகள் அதிகம் முட்டையிடும் சுகாதாரமற்ற ஈரமான இடங்களை பூச்சி மருந்து அடித்து கட்டுப்படுத்த வேண்டும்.

- இளங்கோ கிருஷ்ணன்

மணல் பூச்சிகள்

எந்தச் சூழலில் அதிகம் வசிக்கின்றன?

எல்லா மணல் பூச்சிகளும் கறுப்புக் காய்ச்சலை பரப்புவது இல்லை. பிலிபோடமஸ் அர்ஜென்டிப்ஸ் என்ற மணல் பூச்சிகள் மட்டுமே கறுப்புக் காய்ச்சலைப் பரப்புகின்றன.

இருண்ட, ஈரப்பதம் நிறைந்த, பராமரிப்பற்ற வெளியிடங்களில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. சிதிலம் அடைந்த சுவர்கள், கால்நடைக் கொட்டகைகள், சிதைவடைந்த மரங்கள், மரக்கட்டைகள் குவிந்திருக்கும் இடங்கள், மரப்பொந்துகளில் இவை வசிக்கும்.
மேலும், விலங்குகளின் வலைகள், மண் ஈரமாக உள்ள இடங்களிலும் வசிக்கின்றன.