மரத்தில் இருக்கும் பலாக்காயைவிட, கையில் இருக்கும் களாக்காய் மேல்’ என்று சொல்வார்கள். உண்மையில், வடிவில் சிறியது என்றாலும் களாக்காய் மருத்துவக் குணத்தில் பெரியது. முட்புதர்களிலும், கிராமங்களில் வேலி ஓரங்களிலும் வளரும் களா, நம் மண்ணின் மகிமை சொல்லும் சித்த வைத்தியத்தில் முக்கிய மருந்து. இன்றும் கிராமங்களில் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்.

களாகாயில் உள்ள சத்துக்கள்

இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம், புரதச்சத்து, கொழுப்புச்சத்து நிறைதுள்ளன. களாச்செடி, எப்போதும் பசுமையாக இருக்கும் பெருஞ்செடி. இது, ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பூக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் காய்க்கும். காயாகவும் பறிக்கலாம் பழமாகவும் பறிக்கலாம். களாக்காயில், சிறுகளா, பெருங்களா என இருவகை உள்ளன. இரண்டுமே மருத்துவப் பயன்கள் நிறைந்தது.

மருத்துவப் பயன்கள்

களாக்காயை உண்பதால், அதிக தாகம், வாந்தி, காது அடைப்பு, உயர் ரத்த அழுத்தம் பிரச்னை தீரும்.

காளாப்பழம் இரைப்பைக்கு வலிமையை உண்டாக்கும், களாப்பூ கண் நோய்க்கு நல்ல மருந்து.

சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்குப் பயன்படும் ‘நாரி கேளாஞ்சனம்’ என்ற மருந்து, களாப் பூக்களில் இருந்து செய்யப்படுகிறது.

உணவுக்கு முன் வெறும் வயிற்றில் உண்டால், நன்கு பசியைத் தூண்டும். உணவுடன் உட்கொண்டால் செரிமானத்தை அதிகரிக்கும்.

பழத்தில் இரும்புச் சத்து உள்ளதால், ரத்தசோகை தவிர்க்கப்படும். ரத்தசோகை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் விரைவில் முன்னேற்றம் ஏற்படும்.

எப்படிச் சாப்பிடலாம்?

இதனை அப்படியே மென்று உண்ணலாம். ஜூஸ் போடுவது கடினம்.

களாக்காயை மிளகாய்த்தூள், கறி மஞ்சள்தூள், உப்பு, பூண்டு, வெந்தயம் கலந்து, காயோடு பிசறி புளித்த மோரில் இட்டு, வெயிலில் வைத்து, கடுகு போட்டு பொரித்த நல்லெண்ணெய்விட்டு பதப்படுத்தி, ஊறுகாய் போல உணவுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

புளித்த மோரில் உப்பு சேர்த்து ஊறவைத்து, தயிர் சேர்த்துப் பச்சடிசெய்து சாப்பிடலாம்.

ஊறுகாய் பச்சடி போன்று செய்துவைத்தால், சீஸன் இல்லாத நேரத்திலும் சாப்பிடலாம்

- ச.மோகனப்பிரியா,

படங்கள்: வீ.சக்தி அருணகிரி