பெயருக்கு ஏற்றதுபோல உடலுக்கு சக்தி தரும் முத்திரை இது. ‘உடலுக்கு சக்தி வேண்டும்’ என்று, கடைகளில் விற்கும் பானங்கள் பலவற்றையும் பருகுகிறோம். ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றினாலே, போதிய சக்தி கிடைத்துவிடும். கூடுதலாக, எந்தச் செயற்கையான பானங்களும் தேவை இல்லை. ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சக்தி முத்திரையையும் செய்துவந்தால், நல வாழ்வு நம் வசம்!

எப்படிச் செய்வது?

கட்டை விரலை மடக்கி, நடுவிரலின் அடியில் வைத்து, நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நீட்டி இருக்க வேண்டும். பின்னர், இரண்டு கைகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டுமாறு வைக்க வேண்டும். சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, கால் தரையில் ஊன்றி இருப்பது போன்ற நிலையிலோ நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து, நீட்டியிருக்கும் விரல்கள் மேல்நோக்கி இருக்குமாறு செய்ய வேண்டும். 10 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைச் செய்யலாம்.

பலன்கள்

மனம், உடல்சோர்வை நீக்கி, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. உடலில் ஏற்படும் இறுக்கம், உடல்வலி நீங்கும்.

உடல் வெப்பத்தால் அடிவயிறு இழுத்துப்பிடிப்பது போன்ற வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்குச் சிறந்த தீர்வாக அமைகிறது.

அடிவயிறு, அடிஇடுப்புப் பகுதியில் உள்ள வலி, இறுக்கம் குறைகிறது. ஆண்களுக்கு, ப்ராஸ்டேட் வீக்கம் காரணமாக ஏற்படும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கசிதல் போன்ற பிரச்னைகளுக்குத் தினமும் 10 நிமிடங்கள் சக்தி முத்திரை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

வாயில் அளவுக்கு அதிகமாக உமிழ்நீர் ஊறுதலுக்கு சக்தி முத்திரை தீர்வாக அமையும்.

தூக்கமின்மை பிரச்னை சரியாக, சக்தி முத்திரையைத் தினமும் செய்துவரலாம்.

சுவாசிக்கும் மூச்சு ஆழமாவதால், நுரையீரல் பலம் பெறும். சளி, சுவாசத் தொந்தரவுகள் சரியாகும். ஆஸ்துமா கட்டுப்படும்.

- ப்ரீத்தி

படம்: எம்.உசேன்