சர்க்கரை நோய்க்கும் பல், ஈறு பிரச்னைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், சர்க்கரை நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்குக்கூட இது தெரியாது. சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் செல்லும்போது, வாய் தொடர்பான பிரச்னைகள்... குறிப்பாக, ஈறு தொடர்பான பிரச்னைகள் தலைதூக்கும். இரண்டுவிதங்களில் இது சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலில், சர்க்கரை அளவு ரத்தத்தில் மட்டும் அல்ல... எச்சிலிலும் அதிகரிக்கிறது. இது, கிருமிகளுக்குக் கொண்டாட்டமான விஷயம். அவற்றுக்குத் தேவையான உணவு கிடைத்துவிடுவதால், கிருமிகள் அபரிமிதமாகப் பெருகுகின்றன.

இரண்டாவதாக, கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்துவிடுகிறது. இதனால், பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் ஈறுகளைப் பாதிக்கின்றன. அதோடு, ஈறு பிரச்னை உடனடியாகச் சரியாவதும் இல்லை. இதனால்தான், பல் மருத்துவர்கள் கூட்டமைப்பு, சர்க்கரை நோயையும், பல்-ஈறு நோய்களையும் `இருவழிப்பாதை’ என வர்ணிக்கின்றன. அதாவது, சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் ஈறு தொடர்பான பிரச்னை ஏற்படுகிறது என்பது இல்லை. மிக மோசமான ஈறு பிரச்னைகூட, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதைப் பாதித்து, சர்க்கரை நோய்க்குக் காரணமாகிவிடும்.

ஈறு நோய்கள்

ஆரம்பத்தில் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. ஈறு பாதிப்படைந்த நிலையில்தான் பிரச்னையை நாம் உணர்வோம். அதனால்தான், `குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி, ஈறுகளைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்று சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கிறோம்.

ஈறு பாதிக்கப்பட்டதும் ஈறு அழற்சி அல்லது வீக்கம் (Gingivitis) ஏற்படும். இதைப் புறக்கணித்தோம் என்றால், மிகத்தீவிர ஈறு நோய் ஏற்படும். இதை, `பெரியோடோன்டைடிஸ்’ (Periodontitis) என்போம். இந்த நிலையில், ஈறு அறுவைசிகிச்சை செய்வதன் மூலம் மட்டுமே பற்களைப் பாதுகாக்க முடியும்.

ஈறு வீக்கம்

ஈறு நோய் ஏற்பட்டது என்றால், வாயில் உள்ள கிருமிகள் ஈறுகளை அழிக்க ஆரம்பித்துவிட்டன என்று அர்த்தம். அதனுடன், பல் மற்றும் ஈறைச் சுற்றியுள்ள எலும்புகளையும் அழிக்க ஆரம்பித்திருக்கும். இதன் முதல்கட்டம் பற்குழி. பற்குழியில் உணவுத் துணுக்குகள், எச்சில் மற்றும் கிருமிகள் எளிதில் நிரம்பிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக சொத்தைப்பல்லாக மாறிவிடும். மேலும், கிருமிகளுக்கு ஈறுகளில் தங்கியிருக்கவே பிடிக்கும். ஈறுகளில் தங்கி ஈறை சிவப்பாக, தளர்வுற்றதாக மாற்றி ரத்தக் கசிவை உருவாக்கிவிடும். நாம் பல் துலக்குவதன் மிக முக்கிய நோக்கமே, இந்தக் கிருமிகளை, காரைகளை அகற்றுவதாகத்தான் இருக்க வேண்டும். பற்களில் தொடர்ந்து காரை படியும்போது, அது கடினமானதாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் இதை நம்மால் அகற்ற முடிவது இல்லை. பல் மருத்துவரால் மட்டுமே காரையை அகற்ற முடியும். காரையை அகற்ற அழுத்தி பல் துலக்கினால், ஈறு பாதித்து வீங்கிவிடும். எனவே, தினசரி இரண்டு முறை பல் துலக்குவதன் மூலம் பற்களில் காரை படிவதையும் கிருமி வளர்ச் சியையும் தடுக்க முடியும்.

தீவிர ஈறு நோய்

ஈறு வீக்கத்தைப் புறக்கணிக்கும் போது நிலைமை மோசமாகி, தீவிர ஈறு நோய் ஏற்படும். இந்தநிலையில், ஈறுகள் பற்களை விட்டு விலக ஆரம்பிக்கும். பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் இடைவெளி ஏற்படும். இந்த இடைவெளியில் உணவுத்துகள்கள், கிருமிகள் தங்குகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடைவெளி அதிகரிக்கும். இந்தநிலையில், பற்களைப் பாதுகாக்க ஈறு அறுவைசிகிச்சை அவசியமாகிறது. இந்தநிலையையும் புறக்கணித்தோம் என்றால், கிருமிகள் பற்களைத் தாங்கிப்பிடிக்கும் எலும்பையும் அரித்துவிடும். இதனால், பற்கள் ஆட்டம் காண ஆரம்பிக்கும். ஒன்று தானாக விழும்; அல்லது பிடுங்கவேண்டிய நிலை ஏற்படும்.

வாய் சுகாதாரம் காக்க...

ஈறுப் பிரச்னைகளைத் தவிர்க்க செய்யவேண்டியது தினமும் இரண்டு முறை பல் துலக்குவதுதான். பற்கள் முழுதையும் சுத்தம்செய்ய குறைந்தது இரண்டு நிமிடங்களாவது எடுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நேரமும் பிரஷ் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், பல்லின் எனாமல் பாதிக்கப்படும். பல் துலக்க மென்மையான, தலைப்பகுதியில் வளைவுகள் உள்ள பிரஷ்ஷைப் பயன்படுத்த வேண்டும். மென்மையான பிரஷ் பயன்படுத்துவதன் மூலம் ஈறுகள் பாதிக்கப்படுவது குறையும். அவசர அவசரமாகப் பல் துலக்காமல், மெதுவாக, பொறுமையாகப் பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின் ஈறுகளை விரல்களால் துலக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

- தொடரும்

ஸ்வீட்டர்

2:2:2 விதியைப் பின்பற்ற வேண்டும்.ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரஷ் செய்ய வேண்டும். இரண்டு நிமிடங்களுக்கு பிரஷ் செய்ய வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

ஈறு வீக்கம் மற்றும் தீவிர ஈறு நோய் அறிகுறிகள்...

ஈறு சிவந்துவிடும்.

ஈறுகளில் வீக்கம் இருக்கும்.

ஈறுகளில் இருந்து ரத்தம் கசியும்.

சுவாசத்தில் துர்நாற்றம் வீசும்.

பற்கள் ஆட்டம் காணும்.

விழ ஆரம்பிக்கும்.

உணவு மெல்வதில் மாற்றம் இருக்கும்.

டயாபடீஸ் டவுட்

எஸ்.என்.ஸ்ரீதரன், மதுரை.

``சர்க்கரை நோய் காரணமாக வரக்கூடிய பல் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் டாக்டர்?’’

``இதற்கு முதலில், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருக்க வேண்டும். தினமும் இரண்டு முறை பல் துலக்குவது உள்ளிட்ட வாய்ப் பராமரிப்பு விஷயங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். பல் செட் அணிபவராக இருந்தால், அதைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். வாயில் மிகக் கச்சிதமாகப் பொருந்தும் வகையில் அதை அவ்வப்போது சரிசெய்ய வேண்டும். புகையிலைப் பொருட்களை மெல்வதன் மூலம் வாயில் பூஞ்சைத்தொற்று, ஈறு பிரச்னைகள் ஏற்படும். எனவே, புகைப்பழக்கம், புகையிலை மெல்லும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறையாவது பல் மருத்துவரைச் சந்தித்து, பல் பரிசோதனை செய்துகொண்டு, பற்களைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.’’