நகரங்களில் சாலை விபத்துகள் பெருகிவிட்டன. நமது அன்றாட வாழ்க்கையும், நம்மைச் சார்ந்திருப்பவர்களின் எதிர்காலமும் தினம் தினம் கேள்விக்குள்ளாகிக்கொண்டு இருக்கிறது. விபத்துகளால் பலருக்குக் கை, கால் மற்றும் மூட்டு எலும்பு முறிவுச் சேதங்கள் ஏற்படுகின்றன. தலையில் அடிபட்டால், கபாலச் சிதைவு ஏற்படுகிறது.

வெளிநாட்டில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்த ராஜேஷ் சில மாதங்களுக்கு முன்பு, விடுமுறைக்காகச் சென்னை வந்திருந்தார். இவர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதியதால் தூக்கியெறியப்பட்டு, தலையில் பலமாக அடிபட்டது. இதனால் இவரது கபாலம் உடைந்தது. மண், தலைமுடி ஆகியவை உடைந்த மண்டை ஓட்டுக்குள் புகுந்து, மூளையை பாதித்தன. இதனால் மூளை வீங்கியது. நான்காம் நிலை கோமாவுக்குத் தள்ளப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அடி பலமாக இருந்ததால், மூளையின் வீக்கம் அதிகரித்துக்கொண்டேபோனது. மருந்துகள் மூலம் மூளை வீக்கத்தைக் குறைத்து, ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மூளையின் நியூரான்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. எனவே, வீக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பின்பு மூளையின் செயல்பாடு சராசரியாக இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், 30 நாட்கள் கோமாவில் இருந்த இவர், பின்பு சுயநினைவுக்குத் திரும்பினார்.

கபாலத்தின் வலது புறத்தில் சிதைந்த பகுதி முற்றிலுமாக நீக்கப்பட்டது. மூளை இயல்பு நிலையை அடைந்ததும், தற்காலிகமாக திறக்கப்பட்ட சருமத்தை மூடினார்கள் மருத்துவர்கள். கபாலத்தின் வலது மற்றும் இடது பகுதிதான் மூளையைப் பாதுகாக்கிறது. இந்தப் பகுதி இல்லாமல் தோலை மூடுவது பாதுகாப்பற்ற நிலை. எனினும், வேறு வழி இல்லை. ரத்தக்கசிவு நின்று, மூளை வீக்கம் கட்டுக்குள் வரும் வரை செயற்கைக் கபாலம் பொருத்தமுடியாது. அதற்குக் குறைந்தது மூன்று மாதங்களாகும். அதன் பிறகு செயற்கை கபாலம் பொருத்த திட்டமிடப்படடது.

செயற்கைக் கபாலம், மூன்று வகைகளில் தயாரிக்கப்படுகிறது. முதல் வகையில், மாவுக் கலவை மூலம் அச்சில் வார்க்கப்படும். மெத்தில் மேதாகிரைலேட் (Methyl methacrylate) பவுடரில் ரசாயன திரவம் கலக்கப்படும். அடுத்த 5 நிமிடத்தில், வேதியியல் மாற்றங்கள் மூலம், இந்தக் கலவை பொங்கிப் பெரிதாகும். கபாலத்தின் உடைந்த பகுதியைப் பொருத்தும் அச்சில் இந்த மாவு வார்க்கப்படும். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், உடைந்த பகுதியின் தனித்துவ வடிவம், இந்த முறையின் மூலம் கிடைக்காது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, தலையின் வடிவம் மாறுபட வாய்ப்புள்ளது. இரண்டாவது, ‘வயர் மெஷ்’ எனப்படும் கம்பிகள் கொண்ட கபாலம். இது ஓரளவு மூளைக்குப் பாதுகாப்பு அளித்தாலும், இதன் உத்தரவாதம் குறைவுதான். சில வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இதை மாற்ற நேரிடும். எனவே, டைட்டானியம் பொருத்துவதே சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. இது அழகு ரீதியிலும் சிறந்தது. குறைந்த நேரத்தில் இதைத் தயாரிக்க முடியும். அறுவை சிகிச்சை முடிந்த பின்பு, நிஜக் கபாலம் போலவே தோற்றம் அளிக்கும். ஆனால், டைட்டானிய எலும்பு பொருத்துவது மருத்துவர்களுக்குச் சவால்விடும் வேலை. இந்தக் கபால அறுவை சிகிச்சையின்போது பொருத்தப்படும் செயற்கைப் பகுதியின் வடிவத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், மூளையின் செரிப்ரம் (cerebrum) பகுதி பாதிக்கப்படலாம். இதனால் மூளை நரம்புகள் சேதமடைந்து, ரத்தக் கசிவு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாகிவிடும். செரிப்ரம் மிகவும் மிருதுவான பகுதி. உணர்ச்சி நரம்புகள் அதிகம் செயல்படும் பகுதி. எனவே, கபால எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்ய, மருத்துவருக்கு மிகுந்த அனுபவம் தேவை.

இதனை கருத்தில் கொண்டு முதலில், நோயாளியின் தலைப்பகுதியை சி.டி ஸ்கேன் மூலமாகப் பல்வேறு பரிமாணங்களில், ஏறக்குறைய 150 புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, முப்பரிமாண படம் உருவாக்கப்பட்டது. இதை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆய்வுசெய்து, உறுதிசெய்த பிறகு கபாலத்தின் உடைந்த பகுதியின் மெழுகு மாடல் உருவாக்கப்பட்டது. பிறகு, அந்த மெழுகு மாடலைக் கொண்டு, டைட்டானியம் இம்பிளான்ட் தயாரிக்கப்பட்டது.

டைட்டானியம் கபாலத்தில் 3 மி.மீட்டர் விட்டம் கொண்ட எட்டு துளைகள் இடப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்குப் பின்னர், ஒருவேளை மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டால், இந்த துளைகள் மூலமாக ரத்தம் வெளியேறிவிடும். இதனால், மூளையில் ரத்தம் கட்டும் அபாயம் தடுக்கப்படும்.

அறுவைசிகிச்சைக்கு முன்னதாக இத்தனை சரிபார்ப்புகளுக்குப் பிறகுதான், அறுவைசிகிச்சை தேதி முடிவு செய்யப்பட்டது. மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. கபாலத்தின் தோல் தைக்கப்பட்ட பின்னர், ‘ஸ்கால்ப்’ பகுதியில் மீண்டும் முடி வளர சிறிது காலம் ஆகலாம். அதன்பிறகு அவர் மற்றவர்களைப்போல இயல்பான மனிதராக மாறிவிடுவார்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்