அலர்ஜி நோய்களில் தனித்தன்மை வாய்ந்த ஒரு நோய் வகை இருக்கிறது. அதற்குப் பெயர் ‘தன் ஒவ்வாமை நோய்’ (Auto immune disorder). உடலில் உள்ள தற்காப்பு அமைப்பு, தன்னுள் உள்ள ஒரு பொருளை தனக்கு எதிரி எனத் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படுவதால் ஏற்படும் நோய் இது. இந்தப் பிரிவில் 80-க்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானதும் நிறையப் பாதிப்புகளைத் தருவதுமான ‘ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’ (Rheumatoid arthritis) எனும் மூட்டுவீக்க நோய் குறித்து இப்போது பார்க்கலாம்.

ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்

அலர்ஜியைத் தூண்டும் ஆன்டிஜென்கள் உடலின் வெளியில் இருந்து வந்து நோயை உண்டாக்கும் என்றுதான் இது வரை பார்த்திருக்கிறோம். அலர்ஜியைப் பொறுத்த வரை இதுதான் பொதுவான கருத்து. மாறாக, உடலின் இயல்பான திசுக்களே சில நேரங்களில் எதிரிகளாகப் பாவிக்கப்படுகின்றன. அப்போது, சில நோய்கள் நமக்கு ஏற்படுகின்றன. அதில் முதலாவது ‘ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’.

இது, ஒரே நாளில் ஏற்படும் நோய் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, நோயாளிக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நாட்பட்ட நோய். இது எந்த வயதிலும் வரலாம். என்றாலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக, புள்ளிவிவரம் சொல்கிறது. அதிலும், ஆண்களைவிட பெண்களுக்குத்தான் இதன் பாதிப்பு அதிகம். பெரும்பாலும், பரம்பரையாகவே இது வருகிறது. புகைபிடிப்பவர்களையும் மது அருந்துபவர்களையும் ஹார்மோன் பிரச்னை உள்ளவர்களையும் விரைவில் இந்த நோய் தாக்கிவிடுகிறது.

அறிகுறிகள் என்னென்ன?

இந்த நோயில் மூட்டுகள் தாக்கப்படுகின்றன. அப்போது, அங்கு அழற்சி உண்டாகி, மூட்டுவலி வருகிறது. நோயின் ஆரம்பத்தில் சிறுமூட்டுகளில் வலியும் வீக்கமும் இறுக்கமும் தொல்லை கொடுக்கும். முக்கியமாக, காலையில் எழுந்ததும் இந்தத் தொல்லைகள் அதிகமாகத் தோன்றும். விரல்களை நீட்டவோ மடக்கவோ முடியாமல்போகும். போகப் போக, ஒரே நேரத்தில் பல மூட்டுகள் பாதிக்கப்படும்; உடலில் இரண்டு பக்க மூட்டுகளும் ஒரே மாதிரி பாதிக்கப்படுவது இதன் முக்கியமான அறிகுறி. பெரும்பாலும் கை, மணிக்கட்டு, கால், பாதம் ஆகியவற்றில் உள்ள சிறிய மூட்டுகளில் வீக்கமும் அதிக வலியும் ஏற்படும். மூட்டுகளில் முண்டுகள் (Rheumatoid nodules) தோன்றுவது மற்றொரு முக்கிய அறிகுறி. அடிக்கடி காய்ச்சல் வரும். இவர்களுக்கு மூட்டில் உள்ள குருத்தெலும்பு மட்டும் அல்லாமல், சைநோவியம் எனும் உறைப்பகுதியும் அரித்துவிடும். இதனால், காலையில் எழும்போது ஒரு மணி நேரத்துக்கு மேல் கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு மூட்டுவலி கடுமையாக இருக்கும். இந்த மூட்டுவலி, சுமார் ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும்.

என்ன காரணம்?

ஒவ்வாமைத் தன்மை உடைய சிலரின் உடலில் இருக்கும் இயல்பான திசுக்களைத் தங்கள் எதிரி என நினைத்து உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புத் தவறாக அடையாளம் காட்டிவிடுகிறது. குறிப்பாக, டி நிணநீர் அணுக்கள் இந்தத் தவறைச் செய்கின்றன. பரம்பரை காரணமாக மரபணுக்களில் கோளாறு ஏற்படும்போது, இந்தத் தவறு நடக்கிறது. சில வைரஸ் கிருமிகளும் இதைத் தூண்டுகின்றன. இவற்றின் விளைவாக, டி நிணநீர் அணுக்களுக்குக் குழப்பம் உண்டாகி, இப்படியான ஒரு தவறான தகவலைத் தந்துவிடுகிறது. அப்போது, ரத்தத்தில் இந்தத் திசுக்களுக்கு எதிரணுக்கள் உருவாகி, அவற்றை முதலில் அழிக்கின்றன. பிறகு, அந்த உறுப்பைச் சிதைக்கின்றன; அதன் செயல்பாட்டை உருக்குலைக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த விளைவாக ஒரு நோய் உருவாகிறது. இந்த எதிர்வினைகள் பெரும்பாலும் மூட்டு, மூட்டு இணைப்புத் திசு, தசை, ரத்தக் குழாய், ரத்தச் சிவப்பணு, நாளமில்லாச் சுரப்பி, சருமம் ஆகியவற்றில்தான் நிகழ்கின்றன. இப்படிப்பட்ட தவறான செயல்பாடுகள் எலும்புச் சிறு மூட்டுகளில் ஏற்படும்போது ‘ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’ நோய் வருகிறது.

பரிசோதனைகள்

மூட்டுகளை எக்ஸ்-ரே, சி.டி அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.

ரூமட்டாய்டு ஃபேக்டர் பரிசோதனை (Rheumatoid factor): ரூமட்டாய்டு ஃபேக்டர் என்பது ஒரு எதிரணுப் புரதம் (Antibody). இது, ரத்தத்தில் 14 IU/மி.லி என்ற அளவுக்குக் குறைவாக இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால், ரூமட்டாய்டு ஃபேக்டர் இருக்கிறது என்று அர்த்தம். ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் நோயாளிகளில், 80 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இது இருக்கும். இது இல்லை என்பதற்காக நோய் இல்லை என்று கூறிவிட முடியாது. எனவே, மற்ற அறிகுறிகளைக் கவனித்து நோய் தீர்மானிக்கப்படும்.

சிசிபி (CCP) எதிரணுப் பரிசோதனை: நோயின் ஆரம்பகட்டத்தில் உள்ளவர்களுக்கு இது சிறந்த பரிசோதனை.

மூட்டு நீர்ப் பரிசோதனை (Synovial fluid analysis): மூட்டில் எந்த வகை அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய உதவும்.

பொதுவான ரத்தப் பரிசோதனைகளும் தேவைப்படும். இவர்களுக்கு, ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும். ரத்தச் சிவப்பணுப் படிதல் அளவு (ESR) அதிகமாக இருக்கும்.

ரத்த சிஆர்பி பரிசோதனை (C-reactive protein-CRP): இதன் அளவு 100 மில்லி ரத்தத்தில் 3 மி.கி-க்கு மேல் இருந்தால், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் இருக்க வாய்ப்பு உள்ளது.

என்ன சிகிச்சை?

நோயின் தொடக்கத்தில் வலி நிவாரணி மாத்திரைகளும் மூட்டு அழற்சியைக் குறைக்கும் மாத்திரைகளும் தரப்படும். மூட்டில் ஏற்படும் அழற்சி வினைகளை மாற்றக்கூடிய மீத்தோட்ரெக்ஸேட் (Methotrexate), ஹைட்ராக்சி குளோரோகுவின் (Hydroxychloroquine), சல்ஃபாசலசின் (Sulfasalazine), லெஃபுளுநோமைட் (Leflunomide) ஆகிய மாத்திரைகள் தரப்படும். இவற்றைப் பல மாதங்களுக்குத் தொடர்ந்து சாப்பிடவேண்டியது முக்கியம். இவற்றுக்கு பக்கவிளைவுகள் உண்டு என்பதால், மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

மூட்டுகளுக்கு ஓய்வு கொடுக்கவேண்டியதும், தினமும் கை, கால் விரல் மூட்டுகளுக்கு முறைப்படி பயிற்சி தரவேண்டியதும் அடுத்தகட்ட சிகிச்சை. சிலருக்கு, நோய் முற்றி, விரல்கள் வளைந்து, முற்றிலும் செயல்படாமல் போகும். இவர்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படுவதும் உண்டு.

இந்த நோயாளிகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். முக்கியமாக, ஒமேகா – 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகள் அல்லது மாத்திரைகளைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மது அருந்துவதையும் புகைபிடிப்பதையும் விட்டுவிட்டால் நோய் நன்றாகக் கட்டுப்படும்.

- எதிர்வினை தொடரும்

அலர்ஜி டேட்டா!

உலக அளவில் பின்லாந்தில்தான் ‘ஆட்டோ இம்யூன்’ பாதிப்பு அதிகம்.

தொற்றுநோய்கள் குறைவாக உள்ள நாடுகளில் ஆட்டோ இம்யூன் நோய்களின் தாக்கம் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டோ இம்யூன் நோய்களில், டைப் 1 சர்க்கரை நோய் முன்னிலை வகிக்கிறது.

வைட்டமின் டி குறைவாக உள்ளவர்களை இந்த நோய் அதிகம் பாதிக்கலாம் எனச் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று உறுதிசெய்துள்ளது.

தயிர் உள்ளிட்ட புரோபயாட்டிக் உணவுகள் மற்றும் மருந்துகள் ஆட்டோ இம்யூன் நோய்களின் தாக்கத்தைக் குறைக்க உதவுவதாகவும் சமீபத்தில் அறியப்பட்டுள்ளது.

முக்கியமான ஆட்டோ இம்யூன் நோய்கள்

*அடிசன் நோய் (Addison disease)

*சிலியாக் நோய் (Celiac disease)

*கிரேவ்ஸ் நோய் (Grave’s disease)

*மயாஸ்தீனியா கிரேவிஸ் (Myasthenia gravis)

*டெர்மட்டோ மயோசைட்டிஸ் (Dermato myositis)

*ஹேஸிமோட்டோ தைராய்டைட்டிஸ் (Hashimotothyroiditis)

*டைப் 1 சர்க்கரை நோய் (Type 1 diabetes)

*சிஸ்டமிக் லூப்பஸ் எரித்திமட்டோசஸ் (Systemic lupus erythematosus)

*பெர்னீசியஸ் அனீமியா (Pernicious anaemia)

*மல்ட்டிபிள் ஸ்கிலிரோசிஸ் (Multiple sclerosis)

*ரியாக்டிவ் ஆர்த்ரைட்டிஸ் (Reactive arthritis)