வெள்ளரி கேக்

தேவையானவை: ரவை, வெல்லம் - தலா ஒன்றரை கப், வெள்ளரிக்காய் - 1, சீரகத் தூள், ஏலக்காய்த் தூள் - தலா கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் - முக்கால் கப், முந்திரி - 3 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை: வெள்ளரிக்காயைத் தோல் நீக்கி, துருவ வேண்டும். வெல்லத்தை நன்றாகப் பொடித்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் ரவையை வறுத்து, பாத்திரத்தில் போட்டு, அதனுடன் வெள்ளரிக்காய், தேங்காய், முந்திரி, வெல்லம், சீரகத் தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்து, நன்றாக கலக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே, அரை டம்ளர் தண்ணீர் அல்லது பால் சேர்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, கலவையை அதில் ஊற்றி, குக்கரில் பருப்பு வைப்பதுபோல மூடி, வேகவிடவும். குக்கருக்கு வெயிட் போட வேண்டாம். 30-40 நிமிடங்களில் வெந்துவிடும். கத்தியால் குத்திப் பார்த்தால், வெந்ததைத் தெரிந்துகொள்ளலாம்.

பலன்கள்: ஆன்டிஆக்ஸிடன்ட், கலோரி நிறைந்துள்ளன. உடலுக்குக் குளிர்ச்சி தரும். அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட, நல்ல நிவாரணம் கிடைக்கும். கடையில் வாங்கும் கேக்கில், மைதா, க்ரீம் போன்றவை இருப்பதால், உடலுக்குக் கெடுதி. இது ஆரோக்கியமான கேக்.

முருங்கைக்காய் கிரேவி

தேவையானவை: முருங்கைக்காய் - 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய தக்காளி - 2, இஞ்சி-பூண்டு விழுது, வேர்க்கடலை, சீரகம், கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, துருவிய தேங்காய், மிளகாய்த் தூள் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்காயை நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு, வெந்த பிறகு ஆறவைத்து அதன் உள்சதையை எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு, ஏலக்காய் வெடித்ததும், சீரகம், வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து வதக்கி, தொக்கு போல வந்த பிறகு தண்ணீர் சேர்த்து, கொதித்து வரும்போது பொடித்த வேர்க்கடலை, முருங்கைக்காய் சதை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா போட்டு, கொதி வந்த பிறகு துருவிய தேங்காய் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கிவிடலாம்.

பலன்கள்: வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம், கால்சியம் உள்ளன. சப்பாத்தி, தோசை, இட்லி என எதற்கு வேண்டுமானாலும் பொருந்தும். கலோரிகள், கொழுப்பு குறைவு என்பதால் அனைவரும் சாப்பிடலாம்.

- மினு, படங்கள்: எம்.உசேன்