Published:Updated:

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

Published:Updated:
ஹெல்த்தி ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்!

குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள் இன்று சந்தையில் நிறையக் கிடைக்கின்றன. அனைவருக்கும் பயன்படக்கூடிய சில உபகரணங்கள் இங்கே...

டிஜிட்டல் தெர்மாமீட்டர் - ரூ100 முதல்...

ஹெல்த்தி ஷாப்பிங்!

வாயில் வைத்து உடல் வெப்பநிலையை கண்டறியும் மெர்குரி தெர்மாமீட்டரால் சுகாதாரம் தொடர்பான அச்சம் இருந்தது. தற்போது, அக்குளில் வைத்துப் பரிசோதித்து, உடல் வெப்பநிலையை தெரிந்துகொள்ள உதவும் டிஜிட்டல் தெர்மாமீட்டர் உள்ளது.  இதைச் சுத்தப்படுத்துவதும் எளிது.

டிஜிட்டல் பிளட் பிரஷர் மெஷின் - ரூ1,500

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

இதில் உள்ள பட்டையை கைகளில் கட்டி, டிஜிட்டல் போர்டில் உள்ள பட்டனை அழுத்தினாலேபோதும், அதுவே காற்றை நிரப்பி, ரத்த அழுத்த அளவைக் காண்பித்துவிடும். அதிலும், இயல்புநிலை, இயல்புக்குக் கீழ், ஆபத்து என்பதையும் சுட்டிக்காட்டிவிடும்.

முதியவர்களுக்கான டயப்பர் (ஒரு பீஸ்) - ரூ38

ஹெல்த்தி ஷாப்பிங்!

சிலருக்குத் தும்மல், இருமலின்போது சிறுநீர்க் கசிவு ஏற்படும். உட்காரும்போதும் எழும்போதும் சொட்டுச் சொட்டாக சிறுநீர் கசியும். இவர்களுக்கும், அடிக்கடி கழிப்பறைக்குப் போக முடியாத முதியவர்களுக்கும் இந்த டயப்பர் பயனுள்ளதாக இருக்கும்.

ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Finger pulse oximeter) - ரூ1,800

ஹெல்த்தி ஷாப்பிங்!

நாடித்துடிப்பைக் கணக்கிட உதவும் கருவி இது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைவருக்கும் பயன்படும்.

சர்விகல் பில்லோ - ரூ1,100

ஹெல்த்தி ஷாப்பிங்!

கழுத்துவலி, தோள்பட்டைவலி உள்ளவர்கள், நீண்ட நேரம் கணினி முன் உட்காருவோர், வாகனங்களில் நீண்ட தூரம் பயணிப்போர் இந்த சர்விக்கல் பில்லோவைப் பயன்படுத்த வலிக்கு இதமாக இருக்கும். நாளடைவில் அசௌகர்யம் குறைந்துபோகும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

ரத்த குளுக்கோமீட்டர் - ரூ990 முதல்

ஹெல்த்தி ஷாப்பிங்!

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தங்களது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பார்த்துக்கொள்ள உதவும் குளுக்கோமீட்டர் இது. இதில் உள்ள ஊசியை, இன்ஜெக்டரில் பொருத்தி,  விரலில் குத்தினால், துளி ரத்தம் வரும். இதில் உள்ள ஸ்ட்ரிப்பில் ரத்தத்தை வைத்து, டிஜிட்டல் மீட்டரில் நுழைத்தால், சர்க்கரையின் அளவைக் காண்பித்துவிடும்.

கிரீப் பாண்டேஜ் -  ரூ70 முதல்

ஹெல்த்தி ஷாப்பிங்!

பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்ட பாண்டேஜ். அடிபட்டிருந்தாலோ அல்லது மருத்துவர் பரிந்துரைத்தாலோ இதைப் பயன்படுத்தலாம். இது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும்.

ஃப்ளூ (N95) மாஸ்க் - ரூ60

ஹெல்த்தி ஷாப்பிங்!

காற்றில் பரவும் தொற்றுநோய்கள் அதிகரித்துள்ளன. அதனுடன், காற்று மாசும் கூட. இதில் இருந்து தப்பிக்க இந்த மாஸ்க் உதவும். வெளியில் செல்லும்போது பயன்படுத்திக்கொண்டால், உடலைப் பாதிக்கும் நோய்களில் இருந்து தப்பலாம். வைரஸ் கிருமிகள் பரவாமல் தடுக்கும்.

- ப்ரீத்தி

படங்கள்: எம்.உசேன்

உதவி: ஜோமெட் ஹெல்த் கேர், ராயப்பேட்டை, சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism