1996... அமெரிக்காவைச் சேர்ந்த ஷேன்னான் மில்லரை, மொத்த அமெரிக்காவும் தலை மேல் வைத்துக் கொண்டாடியது. காரணம், அட்லான்டாவில் நடந்த ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 2 தங்கங்களை அள்ளி வந்தது இந்தத் தங்கம். 2010... ‘ஸ்டேஜ்-2-வைத் தாண்டிவிட்ட ஷேன்னான் மில்லர் உயிர் பிழைப்பாரா?’ என்று சோகத் தலைப்புகளில் பத்திரிகைகளை நிரப்பினார் ஷேன்னான்.

2016... ‘ஷேன்னான், அமெரிக்காவின் தங்க மங்கை மட்டுமல்ல; சிங்க மங்கை!’ என்று இப்போதும் தலைப்புச் செய்திகளில் கெத்து காட்டுகிறார் மில்லர். ஒரே ஆள்; இப்படி வெவ்வேறு வகையான தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பது அமெரிக்காவுக்குப் புதுசு!

‘இது வந்தாலே மரணம்தான்’ என்று சொல்லக்கூடிய ‘புற்றுநோயை’ வென்று மீண்டு வந்திருக்கிற ஷேன்னான் மில்லர், பத்திரிகைகளின் எவெர்கிரீன் கன்டென்ட். அதிலும், நூற்றில் ஒரு பெண்ணுக்கு வரக்கூடிய, வரக்கூடாத ‘ஓவரி புற்றுநோய்’க்கு ‘பெப்பே’ காட்டிவிட்டு, வாழ்க்கையின் அடுத்த இன்னிங்க்ஸுக்குச் சென்றிருக்கிற மில்லரின் கதையை, அட்லீஸ்ட் சுருக்கமாகவாவது நிச்சயம் நீங்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

96-ல் ஒலிம்பிக்கில் அசால்ட்டாக தங்கம் வாங்கிய கையோடு, ‘மெக்னீஃபிஷியன்ஸ் 7’ என்ற ஜிம்னாஸ்டிக் சென்டர் ஒன்றை ஆரம்பித்தார் மில்லர். ஒலிம்பிக்கோடு சேர்த்து ஆசியன், நேஷனல் கேம்ஸ் என்று மொத்தமாக மில்லர் வாங்கிய தங்கங்களின் எண்ணிக்கை 7. அதுதான் ‘மெக்னீஃபிஷியன்ஸ் 7!’ ஆரம்பமே அமர்க்களம் மாதிரி மில்லரிடம் ஜிம்னாஸ்டிக் பயில எக்கச்சக்க மாணவர்கள் வாசலில் காத்திருந்தனர். ஒரு கதவு திறந்தால், இன்னொரு கதவு மூட ஆரம்பிக்குமே! ஒரு நாள் பயிற்சியின்போது, மில்லருக்குத் தாங்க முடியாத வயிற்று வலி.

‘‘உங்கள் சினைப்பையில் ஒரு கட்டி இருக்கிறது. ஆபரேஷன் மூலம் எடுத்து விடலாம்’’ என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆபரேஷன் முடிந்த பிறகும் மயக்கமும் கட்டியும் வர, அப்புறம்தான் தெரிந்தது - ஷேன்னான் மில்லர் ‘சினைப்பை புற்றுநோயின் ஸ்டேஜ்1’-ல் இருக்கிறார் என்பது.

34-வது வயது பிறக்க இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், ஒரு பக்க சினைப்பை மற்றும் ஃபெலோபியன் குழாய் அகற்றப்பட்டது. இனி குழந்தைக்கு வாய்ப்பில்லை என்று கைவிரித்தனர் மருத்துவர்கள். கெட்டதிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், மில்லருக்கு ஏற்கெனவே ஓர் அழகான ஆண் குழந்தை இருந்தான். “எனக்கு சோகம் வரும்போதெல்லாம் அவனைப் பார்த்துத்தான் உற்சாகமடைவேன்!’’ என்கிறார் மில்லர். ‘‘புற்றுநோய் என்ன கடவுளா - நம் வாழ்க்கையைத் தீர்மானிக்க? 2012 ஒலிம்பிக்கையும் ஒரு கை பார்க்க வேண்டும்’’ என்று பிடிவாதமாக இருந்தார். அதேநேரத்தில் கீமோதெரப்பியும் எடுத்துவந்தார் மில்லர்.

‘கீமோதெரப்பி’ எடுத்தால் சிறிது பக்கவிளைவு இருக்கும் என்றனர் மருத்துவர்கள். ஆனால், குமட்டலும் வாந்தியும் களைப்பும் ரெகுலராக வந்தன. இந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கவோ சாப்பிடவோ முடியாது. “எனது மொத்த உறுப்புகளும் ஆயிரம் கிலோ எடைக்குச் சமமாக இருப்பதைப்போல் உணர்வேன். இந்தநிலையிலும் நான் பயிற்சியை விடவில்லை! போனால் உயிர்தானே போகப் போகிறது!’’ என்று மருத்துவர்களிடம் சொன்னார் மில்லர். சில நேரங்களில் மருத்துவச் சிகிச்சைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைவிட, ‘நான் இப்படித்தான் இருப்பேன்’ என்று பிடிவாதமாக இருப்பதும் முக்கியம்தானோ என்னவோ என்பது மில்லர் வாழ்க்கையில் நாம் உணர வேண்டிய முக்கியமான விஷயம்.

‘மெடிக்கல் மிராக்கிள்...’ மில்லரின் வாழ்க்கையில் சீரியஸாகவே நடந்தது. மருத்துவர்களின் உதவியையும் தனது நம்பிக்கையையும் மட்டும் வைத்து, புற்றுநோயின் ஸ்டேஜ்1-க்குக் கீழிறங்கினார் மில்லர். ‘சினிமா பாணியில், ‘2012 ஒலிம்பிக்குக்குத் தயாராவேன்’ என்று மில்லர் அடம்பிடித்தார். ஆனால், வயதையும் நோயையும் காரணம் காட்டி ஒலிம்பிக் அவருக்கு ‘கேட்’டை மூடியது. ‘அதனால் என்ன; ஜாக்கியாகப் போகலாமே’ என்று யோசித்தார். 2012 லண்டனில் நடந்த ஒலிம்பிக்கை யூ-டியூப்பில் ரீவைண்ட் பண்ணிப் பார்த்தால், இப்போதும் மில்லரின் குரலை நீங்கள் கேட்கலாம். ‘‘கமென்டரி பயிற்சிக்கு நான் லண்டனுக்குச் சென்றபோது, மிகவும் நெர்வஸாக இருந்தேன். ஏனென்றால், சிகிச்சையின்போது தினமும் மதியத் தூக்கம் எடுத்துப் பழகியிருந்தேன். அது அவசியமானது. ஆனால், லண்டனில் எனது வேலை நேரம் தினமும் 18 மணி நேரம். மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு தூங்காமல் சமாளித்தேன். எனக்கே நம்ப முடியவில்லை!’’ என்று வலிகளை வரலாறாக மாற்றிச் சிரிக்கிறார் ஷேன்னான் மில்லர்.

‘ஒரு சினைப்பையை அகற்றியதால் குழந்தைக்குச் சாத்தியம் மிகமிகக் குறைவுதான்’ என்று எந்த மருத்துவர்கள் கை விரித்தார்களோ... அவர்களே, ‘நீங்க அம்மாவாகப் போறீங்க!’ என்று கை கொடுத்தார்கள். மெடிக்கல் மிராக்கிளாக இரண்டாவது தேவதை பிறந்தது மில்லருக்கு. ‘‘எனது வரம் அவள்!’’ என்று அடிக்கடி பூரிப்பார் மில்லர். அடுத்த ஐந்து ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு மறுபடியும், இப்போது தன் பழைய தோற்றத்தில் ஜொலிக்கிறார் ஷேன்னான் மில்லர்.

மருத்துவர்களிடமும், வக்கீல்களிடமும் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். ஆனால், ‘‘மருத்துவர்களிடம் எல்லா உண்மையையும் சொல்லக் கூடாது!’’ என்று அதிர்ச்சி கொடுக்கிறார் மில்லர். ‘‘வயிற்று வலி, வாந்தி எடுத்தது, களைப்பாவது, உடல் வீக்கம்... இது பற்றி எதையுமே நான் மருத்துவர்களிடம் சொல்லவில்லை. ஒவ்வொரு சிகிச்சையின்போதும் நன்றாகவே இருக்கிறேன் என்றுதான் என் மருத்துவர்களிடம் சொல்லி வந்தேன். ‘அதிகமாக பயிற்சி எடுக்காதீர்கள்; நடக்காதீர்கள்; ஓடாதீர்கள்’ என்று இப்போதும்கூட மருத்துவர்கள் என்னிடம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு என் மாணவர்கள்தான் முக்கியம். கர்வத்தோடே சொல்வேன்; சிகிச்சை மட்டுமின்றி, எனது நம்பிக்கையும்தான் நான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்ததற்குக் காரணம்!’’ என்று பெண் களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார், அமெரிக்கன் கேன்ஸர் சொஸைட்டியின் பிராண்ட் அம்பாஸடர் மில்லர்.

-தமிழ்

வி.ஐ.பிக்களே சாட்சி!

யுவராஜ் சிங், மனீஷா கொய்ராலா, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி... இந்த வி.ஐ.பிக்கள் எல்லோருமே புற்றுநோயிலிருந்து மீண்டு, வலியையும் வாழ்க்கையையும் ஜெயித்தவர்கள். புற்றுநோய் என்பது செல்களில் ஏற்படும் இயல்புக்கு மீறிய வளர்ச்சி. கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தவிர்த்து, மற்ற புற்றுநோயை தடுக்க இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும், புற்றுநோய் வந்துவிட்டாலே மரணம் நிச்சயம் என்று இல்லை. இதற்கு இந்த வி.ஐ.பி.க்களின் வாழ்க்கையே சாட்சி.