சென்னை விமான நிலைய அதிகாரியாகப் பணியாற்றும் வெங்கடேசன் மயங்கிவிழுந்து சுயநினைவு இழக்கவே மருத்துவமனைக்குத் தூக்கிவந்தனர். அறிகுறிகள் பக்கவாதம்போல இருக்கவே உடனடியாக சிகிச்சை தொடங்கியது. பரிசோதனையின்போது, அவருடைய பெருந்தமனி கிழிந்திருப்பது தெரியவந்தது. மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்து தடை ஏற்பட்டுத்தியதால், பக்கவாதம் போன்ற `பாரபிஸியா’ என்னும் நிலை ஏற்பட்டிருந்தது.

உடனடியாக அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் பெருந்தமனி கிழிவை சரி செய்ய வேண்டும், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும், முதுகெலும்புக்கு செல்லும் ரத்தக் குழாயை சீராக்கி, தண்டுவட விரைப்பை சரி செய்ய வேண்டும் என மூன்று வகையான சிகிச்சைகள் அவருக்கு செய்ய வேண்டிய நிலை. இதில் சிக்கல் என்னவென்றால், பெருந்தமனி கோளாறு காரணமாக மேலும் மூன்று பேருக்கு அன்று அறுவைசிகிச்சை திட்டமிடப்பட்டிருந்தது. வெங்கடேசனுக்கும் அவசரமாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை.

இதயத்தில் உள்ள மிகப்பெரிய நாளம் (ஆர்ட்டரி) பெருந்தமனி. உடல் முழுவதுக்குமான நல்ல ரத்தம் இந்த நாளம் வழியாகத்தான் பாய்கிறது. இடது கீழ் அறை (வென்ட்ரிகிள்) பெருந்தமனியுடன் பொருந்தியுள்ளது. பெருந்தமனி சுவரில் கொழுப்பு படிவதால், ரத்த ஓட்டம் பாதிக்கிறது. இதைக் கவனிக்கவில்லை என்றால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குப் பெருந்தமனி பலவீனமாகி, கிழியத் தொடங்கும். ரத்தம் வெளியே கசியும்.

உடனடியாக அவருக்கு எண்டோவாஸ்குலர் சிகிச்சை முறையில், பெருந்தமனியில் இருந்து பிரிந்து காலுக்குச் செல்லும் ரத்தக் குழாய் வழியாக, செயற்கை சிந்தெடிக் பெருந்தமனி செலுத்தப்பட்டு, இடது வென்ட்ரிகிளுடன் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டது.

தண்டுவட பாதிப்பு

பெருந்தமனியில் இருந்துதான் முதுகுதண்டு வடத்துக்கு ரத்தம் பாய்கிறது. பெருந்தமனி கிழிவுகாரணமாக, முதுகுத் தண்டுவடத்துக்கு ரத்த ஓட்டம் தடைபட்டதால், வீக்கம் ஏற்பட்டு, முதுகுதண்டுவடம் விரைப்பானது. குறிப்பாக, தண்டுவடத்துக்கு மத்தியில் இருக்கும் 12 தொராசிக் டிஸ்க்குகள் வீங்கியிருந்தது. செயற்கைப் பெருந்தமனி பொருத்தியதன் மூலம் முதுகெலும்புக்கான ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது. இதனால் கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகி, டிஸ்குகளின் வீக்கம் குறைந்து, தண்டுவடம் வளையும் தன்மையைத் திரும்பப் பெற்றது. ரத்தக் கசிவு காரணமாக கட்டிப்போயிருந்த ரத்தமும் அகற்றப்பட்டது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் இந்த அறுவைசிகிச்சை நீடித்தது.

இப்போது வெங்கடேசன் நலமாக உள்ளார். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு திரும்பிவிட்டார். சில நாள் ஓய்வுக்குப் பின்னர் வேலைக்கு திரும்புவார்.

வெங்கடேசனுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் போதே, நான்காவதாக ஆனந்த்குமார் என்கிறவருக்கு பெருந்தமனி அழற்சி ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். தொடர் அறுவைசிகிச்சைகளில் களைப்புற்று இருந்தாலும், மருத்துவர் குழு எந்த தயக்கமும் இன்றி ஆனந்த்குமாருக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்தது. அவரும் பூரண நலம் பெற்று வீடு திரும்பினார்” என்றனர்.

ஒரேநேரத்தில் நான்குபேருக்கு சிக்கலான அறுவைசிகிச்சை மேற்கொண்டு நான்கு பேரின் உயிரையும் காத்த டாக்டர்களுக்கு சல்யூட்!

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

பெருந்தமனி பாதிப்பைத் தடுக்க...

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெருந்தமனி பாதிப்பு வர முக்கியக் காரணம், உயர் ரத்த அழுத்தம். பொதுவாக இதய நோய், சர்க்கரை, உடல்பருமன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று இருந்தால், மற்ற இரண்டும் வர வாய்ப்புகள் அதிகம். பெருந்தமனி பாதிப்புக்கும் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், முறையான காலை நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதும் சிறந்த தீர்வாக அமையும்.ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் செக்அப் செய்துகொள்வதும் அவசியம்.

சிறுதுளை சிகிச்சை

பொதுவாக, வயதானவர்களுக்கும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய அறுவை சிகிச்சையின்போது ரத்தம் அதிக அளவில் வெளியேறும். அப்படி ரத்தம் வெளியேறாமல் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டதுதான், `மினிமலி இன்வேஸிவ் சிகிச்சை’ (Minimally Invasive Surgery). இந்த முறையில், மார்பைக் கிழிக்காமல் சிறிய அளவில் துளை இடுவார்கள். அதன் வழியாக, `கத்தீட்டர்’ (Catheter) என்னும் குழாய் மூலம் செயற்கை ஸ்டெண்ட்டுகளை பொருத்துவார்கள். வெங்கடேசனின் பெருந்தமனி முற்றிலும் கிழிந்திருந்தது. எனவே, அவருக்கு திறந்தநிலை சிகிச்சை செய்யப்பட்டது.