Published:Updated:

டெங்குவை பரப்பும் கொசுவின் வாழ்க்கை சுழற்சி

டெங்குவை பரப்பும் கொசுவின் வாழ்க்கை சுழற்சி
பிரீமியம் ஸ்டோரி

கவனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெங்குவை பரப்பும் கொசுவின் வாழ்க்கை சுழற்சி

மிகச்சிறிய நாடு இலங்கை. அங்கு மலேரியா காய்ச்சல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அந்த நாட்டில் மேற்கொண்ட மிகத்தீவிரமான கொசு ஒழிப்பு நடவடிக்கைதான் காரணம். அரசாங்கமும் மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற கொசுவால் பரவும் நோயை ஒழிக்க முடியும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே கொசு உற்பத்தியை தடுக்க முடியும். அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டும் என்று இல்லை, இந்த மாற்றம் மக்கள் மனதில் இருந்தும் வர வேண்டும்.

‘மழை விட்டாலும் டெங்கு விடாது’ என்று புதுமொழி சொல்லும் அளவுக்கு மழைக்காலங்கள்தோறும் டெங்கு காய்ச்சல் பரவி, மக்களின் உயிர்களைக் காவு வாங்குவது தொடர்கதையாகிவிட்டது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. சுகாதாரமற்ற சூழலே டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான அடிப்படைக் காரணம்.

டெங்குவை பரப்பும் கொசுவின் வாழ்க்கை சுழற்சி

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில் வசிப்பவை. தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டி, பிளாஸ்டிக் பக்கெட், உரல் உள்ளிட்டவற்றில் முட்டையிட்டு, நோயைப் பரப்பும் இயல்புடையவை இந்தக் கொசுக்கள்.

டெங்குவை பரப்பும் கொசுவின் வாழ்க்கை சுழற்சி

தொடக்கத்தில் சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர், சில நாட்களுக்கு உடல் வெப்பநிலை மிக அதிக அளவுக்குச் செல்லும். அதைத் தொடர்ந்து தலைவலி, மூட்டுவலி, உடலில் சிவப்புப் புள்ளிகள் போன்றவை ஏற்படும். சிலருக்கு டெங்கு வைரஸ் தாக்குதலின் தீவிரம் அதிகரித்து, ரத்தக்கசிவு ஏற்படலாம்.

சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த பயன்படுகிறது. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து டெங்கு வைரஸை அழிக்கிறது.

மற்ற கொசுக்களைப்போல அல்லாமல் இவை பகல் நேரத்தில்தான் சுறுசுறுப்பாக இயங்கும். பெரும்பாலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில்தான் கடிக்கும். டெங்கு கொசு தன்னுடைய இருப்பிடத்தில் இருந்து 50 முதல் 200 மீட்டர் சுற்றுவட்டப் பரப்பில்தான் பறக்கவே விரும்பும். ரத்தத்தை உறிஞ்சியதும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பி முட்டையிடும்.

டெங்குவை பரப்பும் கொசுவின் வாழ்க்கை சுழற்சி

வாரத்துக்கு ஒருமுறை, 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வரும் சூழலில், மக்கள் தங்களின் தேவைக்காக பக்கெட், டிரம்களில் பிடித்துவைக்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிக அளவில் வளர்ச்சியடைகின்றன. எனவே, இந்தத் தண்ணீரை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

டெங்குவை பரப்பும் கொசுவின் வாழ்க்கை சுழற்சி

மனிதனின் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை வாடை, சுவாசித்தலின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, உடலின் வெப்பம் ஆகியவை கொசுக்களை ஈர்க்கும். எனவே, உடலை முழுமையாக மூடக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.

மருத்துவர் பரிந்துரைப்பின்படி சருமத்தில் தடவக்கூடிய கிரீம்கள், பாதுகாப்பான கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம்.

எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் கொசுக்கள் நுழைந்துவிடும் என்பதால், படுக்கையில் கொசுவலை பயன்படுத்துவது நல்லது. டெங்கு பாதிப்புள்ள பகுதிகளுக்கு பயணிக்கும்போது, அதிக கவனம் தேவை.

- பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism