Published:Updated:

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

Published:Updated:
ஹெல்த்தி ஷாப்பிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி ஷாப்பிங்!

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஆரோக்கியம் காக்கும் பொருட்கள் எவ்வளவோ சந்தைக்கு வந்துள்ளன. இதில் லேட்டஸ்ட் என்னென்ன? இதோ உங்களுக்காக ஒரு ஹெல்த்தி ஷாப்பிங் டூர்...

பேபி வைப்ஸ் (60 இருக்கும்) ரூ 80/-

ஹெல்த்தி ஷாப்பிங்!

வெளியிடங்களுக்குப் போகும்போது, குழந்தைகளைச் சுத்தம்செய்ய, இந்த வைப்ஸ் உதவும். முகம், கை, கால் என உடல் முழுதும் சுத்தம்செய்ய உதவுவதால், கிருமிகளிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க முடியும். குழந்தைகளின் சருமத்துக்கு ஏற்ற, கற்றாழைச் சாறும் இதில் உள்ளது.

பெட் பாத் டவல் ரூ 70/-

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெல்த்தி ஷாப்பிங்!

படுக்கையிலே இருக்கும் பெரியவர்கள், நோயாளிகளை நாள்தோறும் குளிக்கவைப்பது கடினம். உடல் முழுதும் சுத்தமாக்கும் இந்த வைப்ஸ் முதியவர்கள், நோயாளிகளைச் சுத்தமாகப் பராமரிக்க உதவும். இதில், வைட்டமின் இ மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்திருக்கின்றன.

2 இன் 1 கோல்டு/ஹாட் பேக் (2 பேக்) ரூ 600/-

ஹெல்த்தி ஷாப்பிங்!

ஒத்தடம் கொடுக்கப் பயன்படும் பேக் இது. இதை, நீங்கள் வெந்நீரில் போட்டு சூடான ஒத்தடமும் தரலாம். அதேசமயம், ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்ற ஒத்தடமும் தரலாம். உடல்வலி, வீக்கம் போக்க எளிய வழி இது.

இன்சோல் (ஹீல் அண்ட் ஃபுல் ஃபீட்) ரூ 600/-

ஹெல்த்தி ஷாப்பிங்!

குதிகால் வலி மற்றும் பாதங்களில் வலி பிரச்னை உள்ளவர்கள், நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலை செய்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயன்படும். இதை, ஷூக்களின் உள்ளே வைத்தும் பயன்படுத்தலாம்.

மூட்டில் அணியும் நீ கேப் ரூ 225/-

ஹெல்த்தி ஷாப்பிங்!

மூட்டுவலி, தசைநார்க் கிழிவு போன்ற மூட்டு தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த நீ கேப் அணியலாம். இதை அணிந்துகொண்டு நடக்கும்போது சிரமம் ஏற்படாது. சௌகர்யமான உணர்வு இருப்பதால் வாக்கிங் செல்வதற்கும் உதவியாக இருக்கும்.

பேக் பெல்ட் - ரூ 470/-

ஹெல்த்தி ஷாப்பிங்!

முதுகுவலி இல்லாதவர்கள் இன்று குறைவு எனலாம். நீண்ட தூரம் இருசக்கரவாகனம் ஓட்டுவது, உட்கார்ந்தே வேலை செய்வது போன்றவற்றால் முதுகுவலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு இந்த பேக் பெல்ட் பயன்படும்.

நெக் சப்போர்ட் பில்லோ ரூ 400/-

ஹெல்த்தி ஷாப்பிங்!

கார் ஓட்டுபவர்கள், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இந்த நெக் சப்போர்ட் பில்லோவை கழுத்தில் வைத்துக்கொண்டால் கழுத்துவலி ஏற்படுவது தடுக்கப்படும்.

வெரிகோஸ் வெயின் ஸ்டாக்கிங் ரூ 600/-

ஹெல்த்தி ஷாப்பிங்!

முழு காலுக்கும் போடக்கூடிய உறை இது. வெரிகோஸ் வெயின் பிரச்னை இருப்பவர்கள் இதை அணிந்து கொள்ளலாம். மிதமான அழுத்தம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

பைல்ஸ் ஏர் பில்லோ ரூ 390/-

பைல்ஸ் ஃபோம் பில்லோ ரூ 960/-

ஹெல்த்தி ஷாப்பிங்!

மூலம் அறுவைசிகிச்சை செய்தவர்கள், மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள், நாற்காலியில் தொடர்ந்து அதிக நேரம் அமர்வது சிரமம். அவர்களுக்கு ஏற்ற மெத்தை இது. அசௌகர்யத்தைப் போக்கி, மூல நோயின் தொந்தரவுகளைக் குறைக்கும்.

- ப்ரீத்தி
படங்கள்: எம்.உசேன்
உதவி: ஜோமெட் ஹெல்த் கேர், ராயப்பேட்டை, சென்னை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism