பிரீமியம் ஸ்டோரி
ஈஸி 2 குக்

உருளைக்கிழங்கு புட்டிங்

தேவையானவை:
வேகவைத்து, தோல் நீக்கிய உருளைக்கிழங்கு - 3, டைஜெஸ்டிவ் பிஸ்கட் - 10, கார்ன் ஃபிளேக்ஸ் 5 டீஸ்பூன், பேரீச்சை, அத்தி, உலர்ந்த திராட்சை, பாதாம் - தலா 1 டீஸ்பூன், துருவிய தேங்காய் - அரை மூடி, வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப், பால் - அரை லிட்டர், நெய் - 1 டீஸ்பூன்.

ஈஸி 2 குக்

செய்முறை: உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளவும். கார்ன் ஃபிளேக்ஸ், பிஸ்கட்களை மிக்ஸியில் தனித் தனியாகப் பொடித்து எடுத்துகொள்ள வேண்டும். உலர் பழங்கள் அனைத்தையும் பொடியாக அரிந்துகொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி, மசித்த உருளையை லேசாக வதக்கி, பால் ஊற்றி கொதிக்கவந்ததும், பொடித்த கார்ன் ஃபிளேக்ஸ், பிஸ்கட் தூள், தேங்காய்த் துருவல் போடவும். இறுதியில், வெல்லம் போட்டு கரைந்த பிறகு, அடுப்பை அணைத்துவிடலாம். கிளாஸில் இதை ஊற்றி, அதன்மேல் நட்ஸ் தூவிச் சாப்பிடலாம். விருப்பப்படுபவர்கள், ஃபிரிட்ஜில் வைத்து ‘ஜில்’லென்றும் சாப்பிடலாம்.

பலன்கள்: மாவுச்சத்து, புரதச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. மாலை நேர ஸ்நாக்ஸாகச் சாப்பிடலாம். உடனடி ஆற்றல் கிடைக்கும். குழந்தைகளுக்குக் கொடுத்திட, எடை அதிகரிக்கும். பெரியவர்கள் இதை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சென்னா பாலக் டிக்கி

தேவையானவை: பசலைக்கீரை - 1 கட்டு, வெள்ளைக் கொண்டைக்கடலை - 1 கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2, பொடியாக நறுக்கிய பூண்டு - 5, கரம்மசாலா - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, பிரெட் தூள் - அரை கப்.

ஈஸி 2 குக்

செய்முறை: கீரையை சுத்தம் செய்து, வெந்நீரில் போட்டு, இரண்டு நிமிடங்கள் கழித்து எடுத்து, சாதாரண தண்ணீரில் அலசி, மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். வேகவைத்த கொண்டைக்கடலையை அரைத்து, கீரை, பச்சைமிளகாய், பூண்டு, கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைய வேண்டும். இதை, கட்லெட் வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் பிரட்டி, தோசைக்கல்லில் இருபக்கமும் சுட்டு எடுத்தால், சென்னா பாலக் டிக்கி தயார்.

பலன்கள்: பசலைக்கீரையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது இதயத்துக்கு நல்லது. கொண்டைக்கடலையில் புரதச்சத்து உள்ளது. கொழுப்பு குறைவாக உள்ளதால், அனைவரும் சாப்பிடலாம். பசலைக்கீரை இருப்பதால், மலச்சிக்கல் தீரும். கீரை பிடிக்காதவர்களுக்கு, இந்த முறையில் சாப்பிடக் கொடுத்தால் சத்துக்கள் உடலில் சேரும்.

- மினு, படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு