Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்
கன்சல்ட்டிங் ரூம்

ரகுபதி, திருவண்ணாமலை.

“என் வயது 20. நான்கு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் முன் பல் உடைந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பல் வேரில் தொற்று ஏற்பட்டதால், வேர்சிகிச்சை (Root canal) செய்துகொண்டேன். தற்போது, மீண்டும் பல்லில் துளை ஏற்பட்டு உள்ளது. மீண்டும் வேர் சிகிச்சை செய்ய வேண்டுமா? உடைந்த பல்லில் கேப் போட்டுக்கொள்வது நல்லதா?

டாக்டர் செந்தில்குமார், பல் சீரமைப்பு நிபுணர், புதுச்சேரி.

கன்சல்ட்டிங் ரூம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



“பல் உடைந்தால், பல்லின் நரம்புகள் வெளியே தெரியும். இதனால், கிருமித் தொற்று ஏற்பட்டு, வேர் பாதிப்படையும். அதை, மூடி சீல் செய்யும் சிகிச்சை செய்துவிட்டால், பல்லின் வேர் பாதிப்படையாது. இதன்மேல் கேப் போட்டுக்கொள்ளலாம். பல் வேர் சிகிச்சை மட்டும் செய்து, மீண்டும் துளை ஏற்பட்டிருந்தால், பல்லை ஸ்கேன்செய்து பார்க்க வேண்டும். பல் வேரிலோ அது பொருத்தியுள்ள எலும்பு அல்லது ஈறுகளிலோ பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், சிகிச்சை அளித்து அதன்மேல், கேப் போட்டுக்கொள்ளலாம். இயற்கையான பல்லைக் காப்பாற்ற முடிந்தால் அதுவே சிறந்தது. பல்லைக் காப்பாற்ற முடியாத நிலையில், அதனை எடுத்துவிட்டு, செயற்கைப் பல் பொருத்திக்கொள்ளலாம். பல் உடைந்தவர்கள், பல் ஈறுகளில் வீக்கம் அல்லது சீழ் பிடித்தல் போன்றவற்றைக் கவனிக்காமல்விடக் கூடாது. இது மிக ஆபத்தானது. எனவே, உடனடியாக பல் மருத்துவரை அணுகி என்ன பாதிப்பு என்று கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது.

பொதுவாக, விபத்துகளில் பல் முழுமையாக வெளியே வந்துவிட்டால், அந்தப் பல்லை 10 அல்லது 12 மணி நேரத்துக்குள் பல் மருத்துவமனைக்குக்கொண்டு வந்துவிட வேண்டும்.  விழுந்த பல்லைப் பாலிலோ, தண்ணீரிலோ போட்டு எடுத்து வர வேண்டும். பாலில் போட்டு எடுத்து வருவது சிறந்தது. இப்படிச் செய்தால், அதே பல்லை மீண்டும் பொருத்திக்கொள்ளலாம்.”

சு.பாபு, சிவகங்கை.


“என் வயது 57. நான் இரண்டு வருடங்களுக்கு முன் குடல் இறக்கத்தால் அவதிப்பட்டேன். அதற்காக அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். மருந்துகள் எல்லாம் சரியாகத்தான் எடுத்துவருகிறேன். இப்போது மீண்டும் அங்கு வலிக்கிறது. இதற்குக் காரணம் என்ன?”

டாக்டர் ரமேஷ், குடல் அறுவைசிகிச்சை நிபுணர், காரைக்குடி.   

கன்சல்ட்டிங் ரூம்



“பொதுவாக நெஞ்சு சளி, பலத்த இருமல், மலச்சிக்கல், அதிக பளுவைத் தூக்குதல் போன்ற காரணங்களால்தான் குடல் இறக்கம் ஏற்படுகிறது. இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் வலி என்று நீங்கள் கூறுவதால், உங்களுக்குக் குடலில் வலை வைத்து அறுவைசிகிச்சை செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், வலை வைக்காத சாதாரண அறுவைசிகிச்சையே பலருக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. கடுமையான வலி குடலிறக்கத்துக்கான அறிகுறி. உங்களுக்கு மீண்டும் வலி இருப்பதால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பொதுவாக, சரிந்த குடலை எடுத்துச் சரியான இடத்தில் வைத்து, மீண்டும் சரியாதவாறு தையல் போடுவோம். நோயாளியின் கவனக்குறைவால் மீண்டும் குடல் சரியும்பட்சத்தில், அவர்களின் விருப்பத்துக்கு இணங்க, வலையை வைத்துக் குடலை கீழே இறங்காதவாறு தைப்போம். அந்த வலையில் பாதிப்பு ஏற்பட்டால், மீண்டும் அறுவைசிகிச்சை செய்வது கடினம். ஆனால், வலையில் பாதிப்பு ஏற்பட 0.1 சதவிகிதம்தான் வாய்ப்புள்ளது. முற்றிய நிலையில் குடல் சரிந்து, விதைப்பைக்கு அருகே சென்றுவிடும். அப்போது கடுமையான வலி ஏற்படும். சிறுநீர் கழிக்கச் சிரமமாக இருக்கும். இவர்கள் கடினமான வேலைகள் செய்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சைக்கிள், இருசக்கர வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.”

கன்சல்ட்டிங் ரூம்

கே.லதா செல்வம், திருப்பூர்.

“என் மகனுக்கு ஏழு வயதாகிறது. சில வாரங்களுக்கு முன்பு,  அவனுக்கு இடைவிடாத அடுக்கு தும்மல் மற்றும் தலைவலி ஏற்பட்டது. புழுதியில் கிரிக்கெட் விளையாடியதாலேயே அவனுக்குத் தும்மலும் தலைவலியும் வந்ததாக நினைத்தோம். பிரச்னை தொடரவே, டாக்டரிடம் சென்று காட்டினோம். அவனுக்கு சைனஸ் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக டாக்டர் கூறினார். புழுதியில் விளையாடினால் சைனஸ் வருமா? குழந்தைகளுக்கு சைனஸ் பிரச்னை வராமல் தடுக்க என்னசெய்ய வேண்டும்?”

டாக்டர் எஸ்.சரவணன்,குழந்தைகள் மற்றும் பொது நல மருத்துவர், திருப்பூர்.

கன்சல்ட்டிங் ரூம்



“நமது முகத்தில் மூக்கைச் சுற்றிலும் ஆறு காற்றுப்பைகள் உள்ளன. அவற்றை நாம் சைனஸ் என்கிறோம். இவற்றில் உள்ள திரவத்தில் பாக்டீரியா தொற்று ஏற்படுவதை சைனசைடிஸ் என்கிறோம். இதனால் சளி, அடுக்குத் தும்மல், தலைவலி, கண்களில் நீர் வடிதல் முதலிய தொந்தரவுகள் ஏற்படும். பொதுவாக சைனஸ் பிரச்னைகள் காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ள மழை மற்றும் குளிர் காலங்களிலேயே கடுமையாக இருக்கும். கோடை காலங்களில் புகை, தூசு நிறைந்த சூழலில் இருக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள், மண் புழுதியில் விளையாடுவதால், சைனஸ் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மேலும், பள்ளியில் சைனஸ் தொந்தரவு உள்ள குழந்தையோடு புழங்குவதால் மற்ற குழந்தைகளுக்கும் இந்தத் சைனஸ் தொற்று பரவுகிறது. குழந்தைகளுக்கு சைனஸ் பிரச்னை வராமல் இருக்க, ஆரோக்கியமான உணவுகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு உடற்பயிற்சி தேவை இல்லை என்பதால், அவர்களை தூசற்ற சூழலில் ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும்.  மூச்சுப்பயிற்சி, யோகா மேற்கொள்வதும் நல்ல பலனைத் தரும். சாதாரண சளி, தும்மல்தானே என அலட்சியம் செய்யாமல், சுயமருத்துவம் நாடாமல், குழந்தை நல மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை பெறுவது அவசியம்.

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism