Published:Updated:

முதுமையிலும் இனிமை!

முதுமையிலும் இனிமை!
பிரீமியம் ஸ்டோரி
முதுமையிலும் இனிமை!

அக்டோபர் 1 - உலக முதியோர் தினம்

முதுமையிலும் இனிமை!

அக்டோபர் 1 - உலக முதியோர் தினம்

Published:Updated:
முதுமையிலும் இனிமை!
பிரீமியம் ஸ்டோரி
முதுமையிலும் இனிமை!
முதுமையிலும் இனிமை!

முதுமையை இரண்டாவது குழந்தைப்பருவம் என்பார்கள். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என குடும்பத்தினர் ஒவ்வொருவரின் அன்பையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கும் காலம். அது கிடைக்காதபோது மனம் ஏக்கம் அடைந்து மனநலப் பிரச்னைகள் ஏற்படும். அதேபோல, முதுமையை ‘நோய்களின் மேய்ச்சல் காடு’ என்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு, முதுமை காரணமாக உறுப்புக்களின் செயல்திறன் குறைவு காரணமாக பல்வேறு உடல்நலக் குறைவு ஏற்படும். முதுமைக்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்க முடியாது, ஆனால், முன்னெச்சரிக்கையாக இருந்தால், பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும். மகிழ்ச்சியான வாழ்வு வாழ முடியும்.

வயதாவதால் ஏற்படும் பிரச்னைகள்


பார்வை மங்குதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தூக்கமின்மை, மலச்சிக்கல், காது மந்தம், சோர்வு, கை, கால்கள் நடுக்கம் போன்ற பிரச்னைகள் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும். உதாரணமாக, காது மந்தம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் காது கேட்கும் கருவி பொருத்திக்கொள்ள வேண்டும். முதுமையால் ஏற்படும் இயல்பான பிரச்னைகளைக் கவனிக்காமல் இருந்தால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, தன்னம்பிக்கையும் குறைந்து தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது.

முதுமைக்கால நோய்கள்

டிமென்ஷியா எனும் மறதி நோய், பார்க்கின்சன் எனும் உதறுவாதம், சிறுநீர் அடக்கவியலாமை (Urinary incontinency), புற்றுநோய், அடிக்கடி கீழே விழுதல் பிரச்னை, எலும்புத் தேய்மானம், ப்ராஸ்டேட் வீக்கம் போன்றவை முதுமையில் ஏற்படக்கூடிய நோய்களில் குறிப்பிடத்தக்கவை. மத்திய வயதில், உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும். இவற்றைப் பெரும்பாலும் குணமாக்க இயலாது என்றாலும், தேவையான சிகிச்சைகள், பயிற்சிகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இவற்றின் பாதிப்பின் கடுமையில்இருந்து தப்பலாம்.

முதுமையிலும் இனிமை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதுமையை எதிர்கொள்ள...

துடிப்பான வாழ்க்கை:
வயதாகிவிட்டாலே, உடற்பயிற்சி செய்ய வேண்டியது இல்லை என்று அர்த்தம் அல்ல. தினசரி முடிந்தவரை நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றலாம். இது தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னையை விரட்ட உதவும்.

சரியானதைச் சாப்பிட வேண்டும்: உடற்பயிற்சியுடன் இணைந்து நன்கு சாப்பிடும்போது, உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலமாகவே உடல்பருமன், இதய நோய்கள், எலும்பு அடர்த்தி குறைவு, டைப் 2 சர்க்கரை நோய் என பல்வேறு பிரச்னைகளை தவிர்க்க முடியும் அல்லது கட்டுக்குள் வைக்க முடியும். பெண்கள், மருத்துவர் ஆலோசனையின் படி வைட்டமின் டி மற்றும் கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.

உணவை ஐந்து அல்லது ஆறு வேளையாகப் பிரித்து உண்பது நல்லது.

உடலுக்கு ஊட்டம் தரும் பல வண்ணக் காய்கறிகள், கீரைகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடல் எடை பராமரிப்பு: கூடுதல் எடை காரணமாக இதய நோய்கள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு ஏற்படலாம். எனவே, அவரவர் உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். இதற்கு, சரியானதை உட்கொண்டு, துடிப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே போதும். காபி, டீ, ஜூஸ் போன்றவற்றைத் தவிர்த்தாலே கூடுதல் கலோரிகள் சேருவது தவிர்க்கப்படும்.

தடுப்பூசி மற்றும் மருத்துவ பரிசோதனை:
சின்னம்மை, மணல்வாரி, அம்மைக்கட்டு, ருபெல்லா, ஃப்ளூ, நிமோனியா, மஞ்சள்காமாலை, டெட்டனஸ், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் போன்ற நோய்களைத் தடுக்க முதியோருக்கான பிரத்யேக தடுப்பூசிகள் தற்போது உள்ளன. மருத்துவரை அணுகி தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையும் குறித்த இடைவெளிகளில் மருத்துவரைச் சந்தித்து உரிய ஆலோசனைகளும் பெற வேண்டியது அவசியம். 

ஆண்டுக்கு ஒரு முறையாவது பல் மற்றும் கண் மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

மன அழுத்தம் தவிர்த்தல்: மூளைக்கு வேலை, உடற்பயிற்சி, நண்பர்களுடன் பேசுவது போன்றவை மன அழுத்தம் போக்க உதவும். இதனுடன், யோகா, தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.

- இளங்கோ கிருஷ்ணன

அக்டோபர் 1 - உலக முதியோர் தினம்

முதியோர் நலனைப் பாதுகாக்கவும் மகிழ்ச்சியான வாழ்வை உத்தரவாதப்படுத்தவும் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி ‘உலக முதியோர் நாள்’ எனக் கொண்டாடப்படுகிறது. வயோதிகத்தை காரணம் காட்டி மறுக்கப்படும் நிலைக்கு எதிரான நிலைப்பாடு எடுப்போம்’ என்ற மையக்கருத்தில் இந்த ஆண்டு முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. வயது மூப்பு காரணமாக காப்பீடு, நிதி உதவி, உரிய சிகிச்சை   கிடைக்க மறுப்பதாக பல முதியவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற புறக்கணிப்புக்களை தங்கள் தினசரி வாழ்வில் சந்திப்பதாக தெரிவிக்கின்றனர். இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்தி இந்த ஆண்டு முதியவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism