Published:Updated:

ஆர்த்ரைட்டிஸ் வெல்வோம்!

ஆர்த்ரைட்டிஸ்  வெல்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்த்ரைட்டிஸ் வெல்வோம்!

ஆர்த்ரைட்டிஸ் வெல்வோம்!

ஆர்த்ரைட்டிஸ் வெல்வோம்!

ஆர்த்ரைட்டிஸ் வெல்வோம்!

Published:Updated:
ஆர்த்ரைட்டிஸ்  வெல்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்த்ரைட்டிஸ் வெல்வோம்!
ஆர்த்ரைட்டிஸ்  வெல்வோம்!

டுற பாம்பை மிதிக்கிற வயசு’ என்று சொல்லும் இளம் வயதினர்கூட, ‘கை, கால்வலி, மூட்டுவலி’ என மருத்துவமனைக்குப் படை எடுக்கிறார்கள். இவர்களுக்கு ஆஸ்ட்டியோ ஆர்த்ரைட்டிஸ், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று எலும்பு மூட்டு தொடர்பான பிரச்னைகள் இருப்பதைக் கண்டறியும்போது, அதிர்ச்சியுடன் அவர்கள் கேட்பது, “வயதானவர்களுக்குத்தானே இந்த பிரச்னைகள் வரும்?” என்பதுதான்.  உண்மையில், ஆர்த்ரைட்டிஸ் வருவதற்கான பல காரணங்களில் வயது அதிகரித்தலும் ஒன்று. ஆர்த்ரைட்டிஸ் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும்.

உடலில், இரண்டு எலும்புகள் சேரும் இடத்தை இணைப்புகள் (Joints) என்கிறோம். இரண்டு எலும்புகளை ஒருங்கிணைக்க இணைப்புத் திசுக்களும் கார்டிலேஜ் திசுக்களும், லிகமென்ட் எனப்படும் தசைநார்களும், குறுத்தெலும்புகளும் உதவுகின்றன. கை, கால்மூட்டுகள் மற்றும் உடலில் இரண்டு எலும்புகள் கூடும் இணைப்புகளில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு இருந்தால் அது ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையாக இருக்கக்கூடும்.

இணைப்பு எலும்புகளுக்கு இடையே மெத்தை போன்று உள்ள கார்ட்டிலேஜ் எனப்படும் குழைவான திசுக்களின் அமைப்பு நைந்துபோகும் போது குறுத்தெலும்புகளும், மூட்டு எலும்புகளும் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தேய்வதால், வலி, வீக்கம் ஏற்பட்டு ஆர்த்ரைட்டிஸ் பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு அதிக எடை, வயதாகுதல், பரம்பரை, லிகமென்ட் கிழிந்துபோதல், விபத்துகளில் அடிபடுதல், புகைபிடித்தல், தன்நோய் எதிர்ப்பு ஆற்றல் எனப் பல காரணங்கள் உள்ளன.

நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களே நம்முடைய மூட்டுப்பகுதியைத் தாக்கி, வீக்கம் உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்துவது ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ். இது ஆட்டோ இம்யூன் பாதிப்பு. இளம் வயதினர் அதிக அளவில் பாதிக்கப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம்.

ஆர்த்ரைட்டிஸ்  வெல்வோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்

இணைப்புகள், மூட்டுக்களில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு ஆகியவைதான் ஆர்த்ரைட்டிஸின் பொதுவான அறிகுறி. இந்த வலி மற்றும் இறுக்கம் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இருக்கக்கூடும்.

சிலருக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் வந்து போகலாம்.நாட்பட்ட ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டால், இணைப்புகளில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு சிலவகை ஆர்த்ரைட்டிஸ்கள் இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளையும் பாதிக்கலாம்.

பரிசோதனைகள்

பொதுவாக, வலி எந்த அளவுக்கு உள்ளது, எவ்வளவு தூரத்துக்கு மூட்டுப் பகுதியை அசைக்க முடிகிறது என்பது உள்ளிட்ட பொதுவான பரிசோதனைகள் செய்யப்பட்டு, எக்ஸ்ரே, தேவையெனில் எம்.ஆர்.ஐ பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும்.

ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் தீர்வுகள்


நிரந்தரத் தீர்வு அளிக்கக்கூடிய சிகிச்சை இல்லை. இருப்பினும், வலி மற்றும் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் பிரச்னையை கையாள மிக முக்கியமானது தொடர் இயக்கம் பாதிக்கப்பட்ட மூட்டுப் பகுதிக்கு தொடர் பயிற்சி, இயக்கம் கொடுப்பதன் மூலம் வலி குறையும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்க உதவும்.

நம் முழு உடல் எடையும் கால் மூட்டுக்களில் தாங்கப்படுவதால், உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் எடையைக் குறைத்தால் வலி உள்ளிட்ட பாதிப்புகளின் தீவிரத்தைக் குறைக்கவும், எதிர்காலத்தில் பாதிப்பு அதிகரிக்காமல் காக்கவும் உதவும்.

மூட்டுப் பகுதியில் மெதுவாக, எளிய ஸ்டிரெச்சிங் பயிற்சிகள் செய்வது மூட்டின் நெகிழ்வுத் தன்மையை (Flexibility) அதிகரிக்க, இறுக்கம் (Stiffness) அடைவதைத் தடுக்க சிறந்த வழி.

வலி மற்றும் வீக்கம் தவிர்க்க உதவும் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் மேற்கொள்ளக் கூடாது.

ஃபிசிக்கல் மற்றும் ஆக்குபேஷனல் தெரப்பி போன்றவற்றை மருத்துவர் பரிந்துரைப்பார். இதில், மூட்டுக்களை எப்படி முறையாகப் பயன்படுத்துவது, குளிர் மற்றும் வெப்ப ஒத்தடம் செய்வது எப்படி, மூட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பயிற்சிகள் சொல்லித்தரப்படும். இவற்றை முறையாகப் பயின்று செய்துவர வேண்டும்.

சிலருக்கு பாதிப்பு தீவிரமாக இருக்கும். இவர்களுக்கு அறுவைசிகிச்சை மட்டுமே தீர்வாக இருக்கும். சிலருக்கு பாதிப்பை சரி செய்யவும், சிலருக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையும் பரிந்துரைக்கப்படும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது, துடிப்பான வாழ்க்கை முறை வாழ்வது, தினசரி உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது, மூட்டுக்களில் காயம் ஏற்படுவதைத் தவிர்ப்பது, மது, சிகரெட் பழக்கத்தை விடுவது போன்றவை ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்கும் அல்லது குறைக்கும்.

இதனுடன், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், ஃபிளாக்ஸ் விதைகள், வால்நட், முட்டையின் மஞ்சள் கரு, சோயா பீன்ஸ், காலிஃபிளவர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

- இளங்கோ கிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism