Published:Updated:

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்
பிரீமியம் ஸ்டோரி
ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

ஈஸி 2 குக்

Published:Updated:
ஈஸி 2 குக்
பிரீமியம் ஸ்டோரி
ஈஸி 2 குக்
ஈஸி 2 குக்

உளுந்து லட்டு

தேவையானவை: கறுப்பு உளுந்து - 1 கப், வெல்லம் - முக்கால் கப், நெய் - 1 டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் உளுந்தை வறுத்து, ஆறவைத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். தண்ணீரில் வெல்லம் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதி வந்த பிறகு, அரைத்து வைத்த உளுந்துமாவைப் போட்டுக் கிண்டவும். நெய்யைக் கையால் தொட்டு, உருண்டை செய்து, அதில் பாதாம் ஒட்டிப் பரிமாறலாம்.

ஈஸி 2 குக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பலன்கள்: இதில் மிதமான கொழுப்புதான் இருக்கும் என்பதால் அனைவரும் சாப்பிடலாம். இடுப்பு எலும்பு உறுதியாகும். அடிமுதுகுவலியால் அவதிப்படுவோருக்கு நல்லது. பிரசவித்த பெண்களுக்குக் கொடுக்க, எலும்பு மற்றும் மூட்டுவலி நீங்கும். கார்ப்பிணிகளுக்குக் கொடுத்துவர, இரும்புச்சத்து உள்ளிட்ட போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

வேப்பம்பூ ரசம்

தேவையானவை: உலர்ந்த வேப்பம்பூ, துவரம் பருப்பு - தலா அரை கப், நெய் - 1 டீஸ்பூன்,  சிவப்பு மிளகாய் - 5, கடுகு, மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, உப்பு, புளி கரைசல், கறிவேப்பிலை - தேவையான அளவு.

ஈஸி 2 குக்

செய்முறை: துவரம் பருப்பை அரை வேக்காடாக வேக வைத்துக்கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு புளிக் கரைசலை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், சிவப்பு மிளகாய் உடைத்துப் போட்டு, வேகவைத்த பருப்பையும் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். மற்றொரு வாணலியில், நெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உலர்ந்த வேப்பம்பூவைத் தாளித்து, இந்தக் கலவையை ரசத்தில் போட்டு இறக்கவும்.

பலன்கள்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் ரசம் இது. கல்லீரலைச் சுத்தகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, அஜீரணம், வாயுத் தொல்லை சரியாகும்.

- மினு, படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism