Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்
கன்சல்ட்டிங் ரூம்

கே.மாலினி, தாராபுரம்.

“என் வயது 35. எனக்கு அடிக்கடி கை விரல்கள், இடுப்பு, கழுத்துகளில் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. சமீபமாக, கழுத்தில் வலி ஏற்படுகிறது. இதற்கும் நெட்டி முறிக்கும் பழக்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? நெட்டி முறிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்தாலும் அதைச் செய்தால்தான் என்னால் இயல்பாக இருக்க முடிகிறது. இந்தப் பழக்கத்துக்கு நான் அடிமையாகிவிட்டேனா? இதில் இருந்து எப்படி வெளிவருவது?”

ரா.பிரசாத், பிசியோதெரப்பி நிபுணர், திருச்சி.

கன்சல்ட்டிங் ரூம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!“பொதுவாக, காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் சோம்பல் முறிப்பதில் தவறு இல்லை. இது நம் உடலின் வளைவுத்தன்மையை மேம்படுத்தும். ஆனால், சோம்பல் முறிப்பது போல உடலை விரைத்துத் தளர்த்துவது, கழுத்தை இடதும் வலதுமாய் திருப்பி நெட்டி முறிப்பது, கை விரல்களில் நெட்டி முறிப்பது போன்றவற்றை அடிக்கடி செய்துவரும்போது எலும்புகளும் இணைப்புகளும் பாதிப்படையும்.

 இந்தப் பழக்கத்தால் உடல்வலி மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. இவ்வாறு சாதாரணமாக இருக்கும்போதெல்லாம் நெட்டி முறிப்பதால், உடலின் உயவுத்தன்மைக்கு பயன்படும்  ‘சைனோவியால் திரவம்’ (synovial fluid) வேகமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும். இதனால் நெட்டிமுறிக்கும் இடத்தில் வெற்றிடம் தோன்றி ‘நைட்ரஸ் ஆக்ஸைடு’ உருவாகிறது. இதனால் தான் ‘சொடக்’ சத்தம் வருகிறது. மேலும் இதனால் மூட்டுகளின் உயவுத்தன்மையும் பாதிக்கப்படுகிறது. இதனால்தான் அடிக்கடி நெட்டி முறிப்பவர்களுக்கு கை, கழுத்துவலி ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள் என்று எண்ண வேண்டாம். சிறிது சிறிதாக இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட மனஉறுதியுடன் முயற்சி செய்யுங்கள். ஆரம்பத்தில் இந்தப் பழக்கத்தில் இருந்துவிடுபட, இரவுப் படுக்கப்போகும் முன் வலி இருக்கும் இடங்களிலும் தசையின் மேற்பகுதியிலும் வலி நிவாரண ஜெல்களைப் பயன்படுத்தலாம். இதனால் வலி தானாகவே சரியாகும்.

சி.ஆர்.ராஜேஸ்வரி, நாமக்கல்.

“எனது மகளுக்கு 2 வயது ஆகின்றது. வயிற்றில் உண்டாகும் புழுக்களை இயற்கையான முறையில் எப்படி வெளியேற்றுவது. எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை இதைச் செய்ய வேண்டும்?”

டாக்டர் க.சிராஜ்தீன், சித்த மருத்துவர், கம்பம்.

கன்சல்ட்டிங் ரூம்“சித்த மருத்துவர் ஆலோசனையின்படி கடுகரோகிணி, தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘நாக்குப்பூச்சிக் குடிநீர்’ (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) கொடுக்கலாம். இது, புழுக்களை வெளியேற்ற உதவும். ஒன்று முதல் ஐந்து வயதுக் குழந்தைகளுக்கு 5 கி நாக்குப்பூச்சிக் குடிநீரை இரண்டு டம்ளர் (200மி.லி) நீருடன் சேர்த்து, அரை டம்ளராக (50மி.லி) வரும்வரை கொதிக்கவைத்து, தினமும் ஒருமுறை மட்டும் கொடுக்க வேண்டும். 5-15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 10 கி நாக்குப் பூச்சிக் குடிநீரை மூன்று டம்ளர் (300மி.லி) தண்ணீருடன் சேர்த்து, ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி, ஒருவேளை என மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்துவர புழுக்கள் நீங்கும். இப்படி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடிக்க வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டு முருக்கன் விதை மாத்திரையை அதிகாலை வெந்நீருடன் சேர்த்து ஆறு மாதங்களுக்கு தினமும் ஒருமுறை இரவில் மட்டும் சாப்பிட்டுவர, புழுக்கள் நீங்குவதோடு மலச்சிக்கல் பிரச்னையும் கட்டுப்படும்.

குடல் புழுக்கள் பிரச்னையைத் தவிர்க்க பொது சுகாதாரம் காப்பது அவசியம். கைவிரல் நகங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதால் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். மலம் கழித்த பின் கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். சாக்லெட், சுகாதாரமற்ற இடங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் போன்றவற்றால் வயிற்றில் புழு உருவாகும். எனவே, குழந்தைகளுக்கு இவற்றைத் தவிர்க்க வேண்டும்.”

கே.அருள்பாலாஜி, நாகூர்.


“என் வயது 45. கடந்த ஆறு மாத காலமாக மலச்சிக்கலால் அவதிப்பட்டுவருகிறேன். புகைப் பழக்கத்தால் கடந்த ஆண்டு எனக்கு மாரடைப்பு வந்துவிட்டது. அதிலிருந்து நான் தொடர்ந்து மருந்து எடுத்துவருகிறேன். இதனால்தான், மலச்சிக்கல் வந்துவிட்டதோ என்று சந்தேகமாக உள்ளது. இந்த மலச்சிக்கலால் மீண்டும் மாரடைப்பு வருமா? மலச்சிக்கலை தவிர்ப்பதற்கான வழிகளைச் சொல்லுங்கள்.”

டாக்டர் கே.பாலசுப்பிரமணியம், சர்க்கரை மற்றும் இதய அறுவைசிகிச்சை நிபுணர், காரைக்குடி.

கன்சல்ட்டிங் ரூம்இரண்டு நாட்களுக்கு மேல் மலம் கழிக்கவில்லை என்றால், அதுதான் மலச்சிக்கல். மாரடைப்புக்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் வர வாய்ப்பு இல்லை. ஆனால், மலச்சிக்கலால் நிச்சயம் மாரடைப்பு வரலாம். ஆம், மிகவும் சிரமப்பட்டுக் காலைக்கடன் கழிப்பதால், மாரடைப்பு வர வாய்ப்பிருக்கிறது. உங்கள் வயிற்றில் புண்களோ, கட்டிகளோ இருந்தால், உங்கள் ஜீரணத்தில் குறை ஏற்பட்டு, மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். மருத்துவர் பரிந்துரையின் பேரில், லேக்ஸேட்டிவ்ஸ் (Laxatives) எனும் மலமிளக்கி மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். எளிய மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு கடுக்காய்ப் பொடி போன்ற நாட்டுமருந்துகளே போதும். தினசரி உணவில் நார்ச்சத்து உள்ள கீரை, காய்கறிகளை நிறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தினசரி உணவை ஐந்து முறை சாப்பிடுவது நல்லது. தூங்குவதற்குக் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவது நல்லது. அது உங்கள் தூக்கத்துக்குக் கைகொடுப்பதோடு, மறுநாள் காலையில் எளிதாக மலம் கழிக்கவும் உதவும். இரவில் அதிக நேரம் கண்விழிப்பதைத் தவிருங்கள். காலை எழுந்ததும் வெந்நீர் அருந்துவது மலச்சிக்கலைப்போக்க உதவும். உடற்பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் வயிறு மற்றும் இரைப்பை நிபுணரை ஆலோசித்து தேவையான சிகிச்சை பெறுங்கள்.”

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism