Published:Updated:

குறைமாதக் குழந்தைகளைக் காக்கும் ‘அதிதி’ இன்குபேட்டர்!

குறைமாதக் குழந்தைகளைக் காக்கும் ‘அதிதி’ இன்குபேட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
குறைமாதக் குழந்தைகளைக் காக்கும் ‘அதிதி’ இன்குபேட்டர்!

#VikatanHackathon 2016

குறைமாதக் குழந்தைகளைக் காக்கும் ‘அதிதி’ இன்குபேட்டர்!

#VikatanHackathon 2016

Published:Updated:
குறைமாதக் குழந்தைகளைக் காக்கும் ‘அதிதி’ இன்குபேட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
குறைமாதக் குழந்தைகளைக் காக்கும் ‘அதிதி’ இன்குபேட்டர்!
குறைமாதக் குழந்தைகளைக் காக்கும் ‘அதிதி’ இன்குபேட்டர்!

வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது விகடனின் முதல் ஹேக்கத்தான் நிகழ்ச்சி! தமிழ்ச் சமூகம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தேடும் முயற்சியில் உள்ளவர்களை ஒருங்கிணைப்பதுதான் விகடன் ஹேக்கத்தான்! இதில், வேளாண்மை, மகளிர் சுய உதவிக்குழுக்கள், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் உள்ள ஒரு முக்கியப் பிரச்னைக்கு தீர்வை தரும் முன்மாதிரியை (prototype) வடிவமைத்தனர், பல அணிகளாக கலந்துகொண்ட டெக்கும் டெஸ்க்கும் சார்ந்த இளைய தலைமுறையினர்.

இந்தியா முழுவதிலும் இருந்து 1,500 பேர் இதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, தரமணியில் உள்ள தாட்வொர்க்ஸ் நிறுவனத்தில் நடந்த ஹேக்கத்தான் போட்டிக்கு, முதல் சுற்றில் 40 அணிகள் தேர்வாகின.

அவர்கள் அளித்திருந்த ஐடியாவை 50 மணி நேரத்தில் தயாரிப்பாக மாற்ற வேண்டும் என்பதுதான் சவால். அப்படி அசத்திய பல குழுக்களில் ஒரு குழுவின் புராஜெக்ட்தான்அதிதி- அஃபோர்டபிள் டயக்னோஸ்டிக் தெர்மல் இன்குபேட்டர் (Affordable Diagnostic Thermal Incubator- ADITI).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறைமாதக் குழந்தைகளைக் காக்கும் ‘அதிதி’ இன்குபேட்டர்!

2013-ம் ஆண்டு, உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட  ஒரு மில்லியன் குழந்தைகள் இறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது, குறைப்பிரசவத்தால் ஏற்பட்ட சிக்கல்கள்தான். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை வைத்துப் பாதுகாக்க உதவும் நியோநேட்டல் இன்குபேட்டர் (Neonatal incubator) கிடைப்பது மிகவும் சிரமம். இதன் விலை மிக மிக அதிகம். வாடகையும் அதிகம். எனவே, குழந்தையின் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணிப்பது இயலாத காரியமாகிறது. ஏற்கெனவே சந்தையில் கிடைக்கும் ‘பேபி வார்மர்’கள் குழந்தையைக் கதகதப்பாக வைத்துக்கொள்கின்றனவே தவிர, உடல் நலத்தைக் கண்காணிப்பது இல்லை.  எனவே, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிப்பது எப்படி என்று பல தரப்பினர் ஆய்வில் ஈடுபட்டனர். கிராமப்புறங்களில் இன்குபேட்டர்கள் தட்டுப்பாடு உள்ளது. இதற்காகத்தான் குழந்தைகளின் உயிர்காக்கும் தீர்வாக ‘அதிதி’யை உருவாக்கியது இந்த அணி.

துணியை அடிப்படையாகக் கொண்ட இவர்களுடைய தயாரிப்பில் ரெசிஸ்ட்டிவ் இழைகள், குழந்தைகளுக்கு இதமான கதகதப்பைத் தருகின்றன. பி.ஐ.டி கன்ட்ரோல் மூலம் வெப்பம் கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. துணியை அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரோடுகள் குழந்தையின் சுவாசம் மற்றும்  இதயத்துடிப்பைக் கண்காணிக்கின்றன. காதுகள் அருகே பல்ஸ் ஆக்ஸிமெட்ரி, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைக் கணக்கெடுக்கிறது.ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும் ஹைப்போக்ஸேமியா (Hypoxemia), ஆப்னியா (Apnea) எனப்படும் மூச்சுத்திணறல் என இரண்டையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும்.

குறைமாதக் குழந்தைகளைக் காக்கும் ‘அதிதி’ இன்குபேட்டர்!

இன்குபேட்டர்கள் கிடைக்காத கிராமங்களுக்கு இந்த ‘அதிதி’ ஒரு வரப்பிரசாதம். மேலும், இதைச் சமூக சுகாதாரத் தொழிலாளர்கள் மூலம் வாடகைக்குக்  கொடுக்கவும் முடியும் என்கிறார்கள் இதை உருவாக்கியவர்கள். விகடன் ஹேக்கத்தானுக்காக இதை அவர்கள் தயார் செய்ய ரூ.6,000 செலவானது. ஆனால், சந்தைக்குக் கொண்டு செல்லும்போது ரூ.5,000-க்குள் தர இயலும் என்றார்கள்.

விகடன் ஹேக்கத்தானுக்குப் பிறகு, யுனிசெஃப்புடன் இணைந்து இந்த ‘அதிதி’ இன்குபேட்டர்களின் செயல்திறனை இன்னும் மேம்படுத்தவும் திட்டம் வைத்துள்ளார்கள். மேலும், இந்த ‘அதிதி’ இன்குபேட்டர்களைச் சந்தைப்படுத்துவதிலும் இவர்கள் மும்முரமாக உள்ளனர்.

குறைப்பிரசவக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் இவர்களின் அக்கறையுடனான முயற்சியை நாமும் இரு கரம் கூப்பி, வரவேற்று, வாழ்த்துவோம்!

- ர.ராஜா ராமமூர்த்தி

படங்கள்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism