Published:Updated:

மருந்தில்லா மருத்துவம் - 20

மருந்தில்லா மருத்துவம் - 20
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 20

ஆஸ்துமா

மருந்தில்லா மருத்துவம் - 20

ஆஸ்துமா

Published:Updated:
மருந்தில்லா மருத்துவம் - 20
பிரீமியம் ஸ்டோரி
மருந்தில்லா மருத்துவம் - 20
மருந்தில்லா மருத்துவம் - 20

சுவாச மண்டலத்தின் முதல் உறுப்பான மூக்கில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றிக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். இந்த இதழில், சுவாசக் குழாய் மற்றும் நுரையீரலைப் பற்றிப் பார்ப்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைக்கும் நோய் ஆஸ்துமா. நுரையீரல் பாதிப்பு நாள்பட்ட நோயாக இருப்பதால், மருந்தை மட்டுமே நம்பும் நிலை உள்ளது. இதற்கு மருந்தில்லா மருத்துவத்தில் பூரண குணம் அடைய வாய்ப்புள்ளது.

ஆஸ்துமா என்றால் என்ன?

சுவாசிக்கும்போது, மூக்கு வழியாக உள்ளே செல்லும் காற்று, தொண்டைப் பகுதியின் குழாய் வழியாக மார்புப் பகுதியில் உள்ள பிரான்க்கஸ் (Bronchus) என்கிற குழாய் மூலம் நுரையீரலை அடைகிறது. நுரையீரலுக்குள் செல்லும் காற்றில் இருந்து ஆக்சிஜன் பிரிக்கப்பட்டு, ரத்தத்தில் கலக்கப்படுகிறது. அதேபோல், ரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு பிரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. நாசித் துவாரத்துக்கும் நுரையீரலுக்கும் இடையே, சுவாசக் காற்று தடையின்றிச் சென்று வந்தால்தான், நுரையீரல் நன்கு இயங்கும். இந்தப் பாதையில் தடை ஏற்பட்டால், மூச்சுத் திணறும். இதை ஆஸ்துமா எனக் கூறுவர்.

மூச்சுத்திணறலுக்குக் காரணம் என்ன?


உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகின் எந்த ஒரு நாட்டிலும் சுவாசிக்கும் காற்று தூய்மையாக இல்லை. இது பலரின் மரணத்துக்குக் காரணமாகவும் இருக்கிறது. ஆனால், மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பதால் ஆஸ்துமா ஏற்பட்டாலும், இது உயிர்க்கொல்லி நோய்அல்ல. நுரையீரலை அடையும் காற்றின் அளவு குறைவதால் ஏற்படும் மூச்சுத் திணறல், ஒரு நிரந்தர உபாதைதான். மருந்தையே சார்ந்து வாழ வேண்டி வரும். 

மருந்தில்லா மருத்துவம் - 20

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஸ்துமா ஏன் ஏற்படுகிறது?

மூக்கடைப்பு, அலர்ஜி இவற்றால் ஏற்படக்கூடிய சைனசைட்டிஸ், மூக்கில் புண்ணை ஏற்படுத்தும். இதை அலர்ஜிக் ரைனிட்டிஸ் (Allergic Rhinitis) என்பர்.

மூக்கு, தொண்டை, மூச்சுக் குழாய் ஆகிய உறுப்புகளில் புண் ஏற்படும்போது, உட்பக்கம் வீங்கும். ஒருகட்டத்தில், மூச்சுக் குழாய் சுருங்கும். இதனால் நுரையீரலுக்குத் தேவையான காற்று செல்லாமல், மூச்சுத்திணறல் ஏற்படும். இந்த பாதிப்பு, விடியற்காலை 3 மணி முதல் 5 மணி வரை தீவிரமடையும். தூக்கம் கெட்டு, மூச்சுத் திணறி உடனே மருந்து உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

ரெய்கி சிகிச்சை

சுவாச உறுப்புகள், மூக்கு, ஆக்ஞா சக்கரத்தைச் சார்ந்தது. தொண்டைப் பகுதி விஷுத்தி சக்கரத்தைச் சார்ந்தது. பிரான்க்கஸ், நுரையீரலின் இயக்கம் அனாஹத சக்கரத்தைச் சார்ந்தது. இந்த மூன்று சக்கரங்களையும் சம நிலையில் இயங்கச் செய்ய, இந்தச் சக்கரங்களின்  அடைப்பை நீக்கி, பின்னர் பிரபஞ்ச சக்தியைச் செலுத்த வேண்டும். இதன் மூலம்,  சுவாசக்  குழாய்கள் சீரடைந்து, பிராண வாயு தடையின்றி நுரையீரலை அடையும்.

ஸுஜோக் அக்குபஞ்சர் சிகிச்சை

சுவாச உறுப்புகள், ஆள்காட்டி விரலில் அமைந்துள்ள நுரையீரல் மெரிடியனைச் சார்ந்தவை. தகுந்த புள்ளியைத் தேர்ந்தெடுத்து ஆஸ்துமாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கட்டை விரலில் மூக்குப் பகுதியைக் குறிக்கும் புள்ளியிலும், தொண்டைப் பகுதியைக் குறிக்கும் கட்டை விரலின் நடுப்பாகத்திலும், நுரையீரலைக் குறிக்கும் உள்ளங்கைப் பகுதியிலும் அக்குபஞ்சர் செய்ய வேண்டும்.

சுவாசப் பிரச்னைக்குக் காரணம்


மூன்று வயதுக் குழந்தைக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படவே, மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். என்ன, ஏது என்று மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. சில மருந்துகளை மட்டும் அளித்து அனுப்பிவிட்டனர். பிரச்னை சரியாகாததால், என்னிடம் வந்தனர். விசாரித்தபோது, தன்னுடைய அம்மாவை அப்பா துன்புறுத்துவதுதான் குழந்தையின் சுவாசப் பிரச்னைக்குக் காரணம் என்று தெரிய வந்தது. அப்பா அம்மாவைத் துன்புறுத்துவதைக் கண்டு, குழந்தையின் மனம் பாதிக்கப்பட்டு, அதன் வெளிப்பாடாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது.

இதேபோல், நீச்சல் பயிற்சியின்போது மூச்சுத் திணறல் ஏற்பட்ட இன்னொரு குழந்தைக்கு ஏற்பட்ட பயம், வளர்ந்த பின்பும் ஆஸ்துமாவாக வாட்டியது. வயதான பெண்மணி ஒருவர் தூங்கும்போது ஆஸ்துமாவால் சிரமப்பட்டு, அடிக்கடி இன்ஹேலர் உபயோகிக்க வேண்டியிருந்தது. இவருக்கு ஆஸ்துமா, அலர்ஜியால் ஏற்பட்டது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்த மூன்று பேருக்கும் வந்தது ஆஸ்துமா பாதிப்புதான். ஆனால், காரணங்கள் வெவ்வேறு. சுவாச உறுப்புகளைப் பாதுகாக்கும் ஆக்ஞா, விஷுத்தி, அனாஹத  சக்கரங்களுக்கு  ரெய்கி சிகிச்சை மூலம், பிரபஞ்ச சக்தி அளித்ததன் மூலம் இவர்கள் நலமடைந்தனர்.

- தொடரும்

படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism