Published:Updated:

நோய்க்கு நோ நோ!

நோய்க்கு நோ நோ!
பிரீமியம் ஸ்டோரி
நோய்க்கு நோ நோ!

வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்பாதுகாப்பு

நோய்க்கு நோ நோ!

வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்பாதுகாப்பு

Published:Updated:
நோய்க்கு நோ நோ!
பிரீமியம் ஸ்டோரி
நோய்க்கு நோ நோ!
நோய்க்கு நோ நோ!

டிக்கடி மழை, வெயில் என சீதோஷ்ண நிலைமை மாறிக்கொண் டிருக்கும் இவ்வேளையில் காய்ச்சல், ஜலதோஷம் என்று அவதிப்படுபவர்களுக்கும் மழைக்காலங்களுக்கு முன்பு என்னமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோய்கள் நம்மைத் தாக்காது என்பது குறித்த ஆலோசனைகள் தருகிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் டாக்டர் சுந்தரராமன்.

னிதனின் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை வாடை, சுவாசித்தலின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, உடலின் வெப்பம் ஆகியவை கொசுக்களை ஈர்க்கும், எனவே, ஆடைகளைத் துவைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆடைகளை ஒரே இடத்தில் தேங்க விட்டாலே கொசுக்கள் அங்கு மொய்க்கும். கொசுக்களை தவிர்த்தாலே நமக்கு வருகிற பாதி நோய்களைக் கட்டுப்படுத்திவிடலாம்.

வீட்டில் உள்ள ஏ.சி-யை சுத்தப்படுத்தி வையுங்கள். அதில் இருக்கும் தூசுகள் காரணமாக குழந்தைகளுக்கு அலர்ஜி, ஜலதோஷம் போன்றவை எளிதாக வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். தண்ணீரை நன்கு காய்ச்சி ஆறவைத்துப் பருகுங்கள்.

டெங்கு காய்ச்சல் உள்ள நபர் சிகிச்சை எடுக்கும் போது, அவரை மீண்டும் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்களைக் கடிக்கும் கொசு மற்றவர்களைக் கடித்தால் டெங்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிவிடும்.

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணப் பொடியை, ஒன்று (அ) இரண்டு டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, தினமும் இரவில் படுக்கப்போகும் முன் அருந்துவது மிகவும் நல்லது. இதனை வாரம் 3 நாட்கள் குடித்துவந்தாலே நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்பட்டு நோய்கள் எளிதில் நம்மை அண்டாது... குறிப்பாக காய்ச்சல், ஜலதோஷம் போன்றவை.

நோய்க்கு நோ நோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொய்யா, நெல்லிக்காய், கீரைகள், காய்ந்த திராட்சை, பேரீச்சை, அத்தி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். முட்டை, எண்ணெய்ப்பசை அதிகம் உள்ள மத்தி, சால்மன் போன்ற மீன்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே நோய் எதிர்ப்புச் சக்தி பலப்படும்.

நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்க, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நாரத்தம்பழம், நெல்லி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.. மழைக்காலத்தில் ஜூஸில் சர்க்கரைக்குப் பதில் உப்பு போட்டுக் குடிக்க கொடுங்கள். தினமும் உணவில் மிளகு, பூண்டு, மஞ்சள், சீரகம் போன்றவற்றைச் சேர்த்துக் கொடுங்கள்.

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால், உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை விட, காய்ச்சலைக் குறைக்கும் வழிகளைக் கையாளுங்கள். அதாவது உடலை குளிர்ந்த நீரால் துடைப்பது, அக்குளில் குளிர்ந்த நீரில் முக்கியெடுத்த துணிகளை சிறிது நேரம் வைப்பது, நிறைய தண்ணீர் குடிக்க கொடுப்பது, நெற்றியில் ஈரத்துணியால் பற்று போடுவது போன்றவற்றைச் செய்தாலே காய்ச்சல் குறைந்துவிடும். அதையும் மீறி 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்.

நிலவேம்புக் குடிநீர் தயாரி்க்க... நிலவேம்பு, வெட்டி வேர், விளாமிச்சம் வேர், சந்தனக் கட்டை, பேய் புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பப்படம் புல் ஆகியவற்றைச் சமஅளவில் இடித்துப் பொடியாக்கவும். இதிலிருந்து 2 டேபிள்ஸ்பூன் பொடியை அரை லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, கால் லிட்டராகச் சுண்டவைத்து அருந்த வேண்டும். கசப்புச் சுவை நீங்க, கஷாயம் குடித்த பிறகு, பனங்கற்கண்டைச் சுவைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism