சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் ஒத்திவைப்பது, தூங்காமல் இருப்பது பற்றி பார்த்திருக்கிறோம். ஏன்? இதற்கு ஓர் உதாரணமாக நாமே இருக்கிறோம். சிறுநீர் கழித்தலை ஒத்திப்போடுகிறவர்களைப் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இன்றைக்கு நகர்ப்புறங்களில் பொது கழிப்பறைகளே இல்லை. அப்படியே இருந்தாலும் அதன் சுகாதார சீர்கேடு காரணமாக உள்ளே நுழையக் கூட முடியாத நிலை, வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் பலரும் சிறுநீர் கழிப்பதை முடிந்தவரை தள்ளிப்போடுகின்றனர்.

வயிறு முட்டி, சிறுநீர் கழித்தே தீர வேண்டும் என்று கால்கள் கோணும் நிலை ஏற்படும் வரை இவர்கள் சிறுநீர் கழிப்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை. சிறுநீர் கழிப்பதை எல்லாம் ஒரு பொருட்டாக நினைப்பதும் கிடையாது. அப்படியே இடம்பிடித்தாலும் எல்லா வேலையும் முடிந்தபிறகு செய்ய வேண்டிய கடைசி வேலையாகத்தான் இருக்கிறது. உண்மையில், இது மிகவும் ஆபத்தான பழக்கம் என்று தெரியாமல் இருக்கின்றனர்.

அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ளது. இது ரப்பர் பந்துபோல சுருங்கி விரியும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலிருந்து `யூரேட்டர்’ எனும் மெல்லிய குழாய் (Ureter) வழியாக சிறுநீர், சிறுநீர்ப் பையை அடைகிறது. `யூரித்ரா’ (Urethra) எனும் குழாய் வழியாக சிறுநீர் வெளியேறும். சிறுநீர் கழித்தவுடன், சிறுநீர்ப்பை சுருங்கி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

சிறுநீ்ரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகள்...

பொதுவாக ஐந்து முதல் பத்து வயதுள்ள சிறுவர்களால் 100-150 மி.லி சிறுநீரை சேமிக்க முடியும். உடல் வளர்ச்சி அதிகமாக, சிறுநீர்ப்பையில் சிறுநீரின் கொள்ளளவும் அதிகரிக்கும். 22-25 வயதில் சிறுநீர்ப்பையின் வளர்ச்சி நின்றுவிடும். இந்த வயதில் சராசரியாக 350-400 மி.லி சிறுநீரை சிறுநீர்ப்பை தேக்கிவைக்கும். சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைத்தால், சிறுநீர்ப்பை விரிவடைந்து கொண்டே செல்லும். பல மணி நேரங்கள் அடக்கி வைத்து சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீர் முழுவதுமாக வெளியேறாது. விட்டு விட்டுத்தான் வெளியேறும். இதே பழக்கம் தொடர்ந்தால், சிறுநீர்ப் பையின் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடக்கூடும்.

சிறுநீரை அடக்குவதால், சிறுநீரில் உள்ள உப்பு படிமம் சிறு சிறு படிவங்களாக சேர்ந்து கற்களை உருவாக்கும். பிறகு, இந்தக் கற்கள் சிறுநீர்ப் பாதையை அடைத்துக் கொள்ளும்.

பொதுவாக, வயதான ஆண்கள், சிறுநீரை அடக்குவர். இதனால், ப்ராஸ்டேட் சுரப்பியில் தொற்று காரணமாக வீக்கம் (Prostatitis) ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வீக்கத்தால் இவர்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினாலும், முழுதாக சிறுநீர் வெளியேறாது. 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். அரிதாக, இந்த வீக்கம் மலக்குடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

சிறுநீரை அடக்குவதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களிதான் அதிகம்பேர் உள்ளனர். பயணங்களின்போது, பெண்கள் சிறுநீரை வெளியேற்ற கழிப்பறைகள் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுகிறது.

கர்ப்பிணிகள் சிறுநீரை அடக்குவதால், கருவின் தலைப்பகுதி சிறுநீர்ப்பையை அழுத்த வாய்ப்புள்ளது. இதனால் வயிற்று வலி, சிறுநீர் போகிற இடங்களில் வலி எனத் தேவையில்லாத பிரச்னைகள் வரக்கூடும். சிறுநீர் வருமோ என்று குறைவாக நீர் அருந்தும்போது, நீர் வறட்சி (Dehydration), சோர்வு, தலைவலி, சருமப் பிரச்னைகள், உடல் உஷ்ணம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

மலத்தை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகள்...

மலத்தை நீண்ட நேரம் அடக்கிவைத்தால், மலம் இறுகி மூலம் அல்லது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். மலம் இறுகி, மலக்குடலை பாதிக்கும். இவர்களுக்கு மலம் கழிக்கும்போது ரத்தமும் வெளியேறும்.

மலம் வரும்போது அடக்கும் பழக்கத்தால், சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் பிரச்னையான இரிட்டபுள் பௌல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) பிரச்னை வரலாம்.

மலம் கழிக்கத் தோன்றும் எனச் சாப்பிடாமல் இருந்தால் பசி, மயக்கம், சோர்வு, தலைவலி ஆகியவை உண்டாகி உடலை பலவீனமாக்கி நோய்களுக்கு வாசலாக அமையும். இடுப்புப் பகுதியில் உள்ள பெல்விக் தசைகள் பலவீனமாகும். மலக்குடல், ஆசனவாய்ப் பகுதிகளில் கிருமி வேகமாக வளர்ச்சி அடையும். அது, உடலில் வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

அலர்ட் அட்வைஸ்!

இயற்கைக் கழிவுகளை அடக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். சிறுநீரோ, மலமோ கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்த உடனே, கழித்துவிட வேண்டியது அவசியம்.

சுகாதாரம் காரணமாக பலரும் இயற்கைக் கழிவை சில சமயங்களில் அடக்குகின்றனர். இதனால், கைகளில் எப்போதும் டிஸ்யூ, ஹேண்ட் வாஷ், கிளவுஸ் உள்ளிட்டவை வைத்திருந்தால், பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்த சுலபமாக இருக்கும்.

சிறுநீர், மலம் வெளியேற்றுவதில் கூச்சம் தேவை இல்லை. இயற்கையைத் தடுத்து நிறுத்துவது உடலுக்கு நீங்கள் செய்யும் தீங்கு. எந்த முக்கிய இடங்களிலும் ‘எக்ஸ்க்யூஸ்’ கேட்கலாம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

வெளியிடங்களுக்கு செல்லப் போகிறோம் என்றால், சிறுநீர் வருமோ என தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். ஒருநாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது அவசியம்.

மலம் சிரமமின்றி கழிக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கைக்குத்தல் அரிசி, பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதால் காலை எழுந்த உடன் எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல் மலம் இயல்பாக வெளியேறும். நடுவில் மலம் கழிக்க ஏற்படும் உணர்வும் பெரும்பாலும் தவிர்க்கப்படும்.

மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சைப் பெறத் தயக்கம்காட்டக் கூடாது.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மது, புகைப்பழக்கம் இருந்தால் அவற்றைக் கைவிட வேண்டும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

சிறுநீரை அடக்குவதன் அறிகுறிகள்...

தலைசுற்றல்

சோர்வு

பிறப்புறுப்பு மற்றும் அடிவயிற்றில் வலி.

மலம் அடக்குவதன் அறிகுறிகள்...

வாய் துர்நாற்றம்

நாவில் கசப்பான உணர்வு.

நோய்த்தொற்றைத் தடுக்கலாம்!

சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்தும் சூழலில், இனப்பெருக்க உறுப்புகளை நீர்விட்டு சுத்தம் செய்வதன் மூலம் நோய்த்தொற்றைத் தவிர்க்கலாம். பொதுகழிப்பறையில் ஏற்கெனவே பயன்படுத்திய நபர் ஃபிளஷ் செய்யாமல் இருந்து, நாமும் அதைத் தொடர்ந்து ஃபிளஷ் செய்யாமல் பயன்படுத்தினால், தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தண்ணீர் வசதி இல்லாத கழிப்பறைகளைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.